
ஆண்குறி பற்றிய ஆண்களுக்கு இருக்கும் தவறான எண்ணங்கள்
ஆண்களுக்கு இருக்கும் ஆண்குறி பற்றிய தவறான எண்ணங்களும் சிந்தனைகளும் ஆண்களிடம் பல்கிப் பெருகியுள்ளன.அவை என்னென்ன என்பதை காண்போம்.
ஆண்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகளில் 90% ஆண்குறி சார்ந்தவையாக இருக்கின்றன என்கிறார்.
- ஆணுறுப்பு பெரியதாக இருக்க வேண்டும்.
- விரைப்பு கணப்பொழுதில் ஏற்பட்டுவிட வேண்டும்.
- இரும்புமாதிரி இருக்க வேண்டும்.
- விரைகள் சமமாக இருக்க வேண்டும்.
- ஒரு சொட்டுவிந்து 40–100 சொட்டு ரத்தத்திற்கு சமம்.
- சுய இன்பம் செய்தால் ஆண்மை போய்விடும்.
- இரவில் உறங்கும்போது விந்து வெளிப்பட்டால். அது பெரும் நோய்.
- ஆண் எந்நேரமும் செக்ஸிக்கு தயாராக இருப்பான்.
- எத்தனை பெண்களை வேண்டுமானாலும் அவனால் ஒரே நேரத்தில் புணர முடியும்.
- ஆண்தான் பெண்ணின் சுகத்திற்கு முழு பொறுப்பு.
- முதல் முறையிலேயே அவன் பெண்ணை உச்சத்திற்கு கொண்டுபோய் விடுவான்.
- திருமணத்திற்கு முன் விந்து வெளியேறிவிட்டால் அவ்வளவுதான். அவனுக்கு ஆண்மை போய்விடும்.
என்ற 12 மூடநம்பிக்கைகளைப் பற்றியும் படித்துவிட்டீர்களா. சரி இந்த 12ம் தவறென்றால் எது உண்மை என அறியும் ஆவல் ஏற்பட்டால் அதற்கான விளக்கங்கள் பின்வருமாறு.
விளக்கங்கள்
- ஆணுறுப்பின் அளவிற்கும் களவிக்கும் சம்மந்தமில்லை. இரண்டு இன்ச் அளவு பெண்ணுறுப்பிற்குள் அது சென்றுவிட்டாலே விந்தனு நீந்திச் சென்று அண்டத் தினை அடைந்துவிடும்.
- விரைப்பு என்பது ரத்தநாளங்களின் மூலமாக ஆணுறுப்பினில் ஏற்படுகின்றது. போதுமான இச்சைக்கு ஆண் ஆட்படும் போது தான் இது நிகழும்.
- ஆணுறுப்பு எலும்பினால் ஆனாது அல்ல. மெல்லிய தசைகளால் ஆனாது, அப்படியிருக்க எப்படி இரும்பாக மாறும்.
- விரைகள் சமமாக இருந்தால்தான் பிரச்சனை. பெரும்பாலும் இடது விரையானது சற்று கீழே காணப்படும். இதன் அறிவியல் காரணம் இரண்டு விரைகளும் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் விபத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே.
- ஒருமுறை விந்து வெளியேற்றப்படும் போது நீங்கள் சாதாரணமாக எச்சில் துப்பினால் எவ்வளவு சக்தி உடல் இழக்குமோ அவ்வளவு தான். இது மிகவும் சின்ன விசயம்.
- சுயஇன்பம் செய்வதால் ஆண்மையெல்லாம் போகாது. அதிகமாக உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால்தான் பிரட்சனை. (பெண்களும் சுய இன்பம் செய்கின்றார்கள் என ஒத்துக்கொள்கின்றார்)
- எப்போதாவது செய்யும் (தோராயமாக மாதத்திற்கு 2 – 3 முறை) சுய இன்பம் காரணமாக உடல் ரீதியாக எந்தத் தீங்கும் இல்லை.
- இது இயற்கையாக நடக்கும் நிகழ்வு சுய இன்பம் செய்து வெளியேற்றாவிட்டால், உங்கள் வீட்டில்மோட்டார் போட்டு தண்ணிரை தொட்டிக்கு அனுப்புகிறீர்கள். தண்ணீர் தொட்டி நிரம்பியபின் வழிந்தால், அதை தவறு என்பீர்களா. உங்களுக்கு பதில் விந்தை இயற்கையே வெளியேற்றி விடுகிறது. அவ்வளவுதான்.
- உணர்ச்சிகள் உள்ளவன் தானே மனிதன். அவனுக்கு எல்லா வகையான உணர்வுகளும் தோன்றும். காமமும் இயல்பான உணர்ச்சி. எல்லா நேரங்களிலும் கோபம் வருமா. வராது அது போல தான் காமமும்.
- இப்படியெல்லாம் கதைகள்தான் சொல்லமுடியும். உண்மையில் நடக்காத காரியம் இது.
- செக்ஸ் ஆண்,பெண் இருவரும் சேர்ந்து செய்கின்ற செயல். ஒருவருடைய பங்கில்லாமல் மற்றவர்களால் திருப்தி அடைய இயலாது.
- சித்திரமும்கைப்பழக்கம் என்று சொல்வார்கள். பழக பழக எல்லாம் சரியாகும். முதல் முறையில் மோகம் வேண்டுமானால் தணியலாம்.
- திருமணத்திற்குமுன் செய்யும் செயலால் ஆண்மை போய்விடும் என்றால், திருமணத்திற்கு பிறகு செய்தாலும் போய்விடும் அல்லவா.
முக்கியமாக கவனிக்க
பொதுவாக சுய இன்பத்தால் எந்த ஒரு பாதிப்பு ஏற்படாது என்று கூறினாலும் நிறைய இளைஞர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினர் அளவிற்கு அதிகமான சுய இன்பத்தில் ஈடுபட்டு
- மனத்தளர்ச்சி மற்றும் உடல் சோர்வு, அசதி,
- மற்றவர்களை நேருக்கு நேர் பார்த்து பேச தயக்கம்,
- பெண்களிடம் பேசும்போதே அல்லது அவர்களை பார்க்கும் போதோ கண்கள் தன்னையும் அறியாமல் பெண்களின் மார்பகத்தை பார்ப்பது, இடுப்பை பார்ப்பது போன்ற செயல்கள். இதனால் அலுவலகத்திலோ பொது இடங்களிளோ கெட்டபெயர் ஏற்படுத்திக்கொள்வது.
- ஒரு நாளைக்கு ஒன்றுக்கும் மேற்பட்டு சுய இன்பத்தில் ஈடுபடுவது, இதனால் வெளியில் செல்ல தயக்கம்,
- வேலையில் ஈடுபாடின்மை,
- திருமணம் செய்ய தயக்கம்.
- திருமணப்பேச்சை எடுத்தாலே பயம்.
- உடலுறவில் ஈடுபட பயம்.
- மனைவியோ கேர்ள் பிரண்டோ தப்பாக நினைப்பாள் என்ற பயம்.
- அழகான பெண்களை பார்த்தவுடன் சுய இன்பம் செய்ய தோன்றுவது.
- சுய இன்பம் செய்யாவிட்டால் தூக்கம் வராமல் இருப்பது
போன்ற அறிகுறிகள் இருந்தால் உடன் உளவியல் ஆலோசகர் & சிறப்பு மருத்துவரை அனுகி தயங்காமல் ஆலோசனை பெறவும்
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, 90******99 விரைப்பு தண்மை குறைபாடு – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.