SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
ஆண்மைக்குறைபாடு, பெண்மைக்குறைபாடு & செக்ஸ் பிரச்சனைகளுக்கு தீர்வு -:சிறப்பு ஹோமியோபதி மருந்துவ சிகிச்சை மையம், சென்னை
April 17th, 2014 by Dr.Senthil Kumar

 

Migraine headache during sex ஆண் பெண் இருவரின் செக்ஸ் பிரச்சனைகளுக்கும் தீர்வு -: ஹோமியோபதி சிகிச்சை

 

இன்று நமது சமூகத்தில் “செக்ஸ்” என்பது அருவருக்கதக்க, வேண்டத்தகாத, வெளிப்படையாக பேச இயலாத, மறைக்கக் கூடிய ஒரு பிரச்சனையாக, இருபாலருக்கும் உள்ள ஒரு பொது நிலையாக உள்ளது.

 

“மனிதன் உயிர்வாழ்வதற்கு” உணவு என்பது எவ்விதம் அவசியமோ, அது போல், ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு, தெளிந்த, முறையான, இயற்கையோடு ஒத்த, மனநிறைவடையக் கூடிய செக்ஸ் இருபாலருக்கும் மிகவும் அவசியம் என்று கூறுகிறார் உளவியல் நிபுணர் சிக்மண்ட்பிராய்ட்.

 

“மனிதர்கள் செக்ஸ் உணர்வில் திருப்தியடைய வில்லையென்றால் பல மனநோய்களுக்கும் தன்நிலையிழந்து செயல்பட்டு ஏற்படும் சமூக விரோத செயல்களுக்கும் ஆளாகிறான்” என்கிறார் உளவியல் நிபுணர் சிக்மண்ட்பிராய்ட்.

 

“செக்ஸ்” அவசியத்தை வலியுறுத்தி தான், நமது முன்னோர்களும் அதனை நாம் வணங்கும் கோயில்களில் சிற்பங்களாக செதுக்கியுள்ளனர். மேலும் புனிதமான “காமசூத்திரம்” என இயற்கையான முறைப்படுத்தப்பட்ட செக்ஸ் வழிமுறைகளையும் கூறக்கூடிய நூலையும் எழுதியுள்ளனர்.

 

இன்றைய காலகட்டத்தில் எது நியாயமான செக்ஸ் உணர்வு? எது செக்ஸ் பிரச்சினை? என்பதில் படித்தவர்களுக்கும், பெரிய மேதைகளுக்கும் கூட தெளிவற்ற மனநிலை உள்ளது. செக்ஸ் பற்றிய தவறான புத்தகங்கள், இளைஞர்களை தவறானப் பாதையில் திசை திருப்புகின்றன. சில போலி மருத்துவர்களின் தொலைக்காட்சி பேட்டியும், கேள்வி பதில்களும் இளைஞர்களுக்கு மன குழப்பத்தையும் பயத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

 

ஒரு நல்ல உடலுறவு – செக்ஸ் எபிசோட் என்பது  “ஒரு ஆண் தனது உள்ளத்தாலும் உடலாலும் பெண்ணை மகிழ்வித்து, தானும் மகிழ்ந்து, தனது ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை குறையாமல் சராசரியாக 20 முதல் 30 நிமிடம் முன்விளையாட்டில் ஈடுபட்டு சராசரி 3 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை உடலுறவில் ஈடுபட்டு, ஆணும் பெண்ணும் உச்சகட்ட திருப்தி (Orgasm) நிலையடைந்து அமைதி பெறுவதாகும்.

 

செக்ஸில் இருபாலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சினைகள் என்ன?

 

மனரீதியிலான பாதிப்புகள் :

  • பயம், கவலை, அறியாமை, வெறுப்புணர்ச்சி இவற்றால் ஏற்படக்கூடியது. செக்ஸில் ஏற்படும் முழு திருப்தியின்மையினால் கூட மனநோய்கள் உண்டாகின்றன. மனநோயும் செக்ஸ் குறைபாடும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையது.

 

உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள்.

  • உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் கூட செக்ஸ் குறைபாடுகளை உண்டாக்குகின்றன. இரத்தகுழாய்  சம்பந்தப்பட்ட நோய்கள், நாளமில்லா சுரப்பிகளின் குறைபாடுகளினால் உண்டாகும் குறைகள், தைராய்டு சுரப்பு குறைவதால் வரும் பாதிப்புகள், ஆண், பெண் ஹார்மோன் சுரப்பிகளின் குறைபாடுகள் முதலியன முக்கிய காரணங்கள். சிறுநீரக கோளாறுகள் மற்றும் இரத்தசோகை போன்ற வியாதிகளினால் செக்ஸ் குறைபாடுகள் ஏற்படுகிறது.

 

 

சர்க்கரை வியாதி

  • சர்க்கரை நோய் செக்ஸ் குறைபாட்டிற்க்கு முக்கிய காரணம். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்க்குள் வைத்திருக்க வேண்டும்.

 

 

ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் :

  • செக்ஸ் பிரச்சினைகள் என்றாலே ஆண்களுக்கு மட்டும் தான்; அதுவும் ஆண்மைக் குறைவு மட்டும்தான் என நம்பப்படுகிறது.  ஆனால் ஆண்மைக்குறைவு என்பது ஆணுக்கு செக்ஸில் உண்டாகும் குறைபாடுதான். இதில் உண்டாகும் குறைகள் 3 வகையாக உள்ளன.

 

Erection disorder (ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைபாடு)

  • பொதுவாக செக்ஸில் ஈடுபடும் பொழுது ஆணின் பிறப்புறுப்பிற்கு சராசரியாக 5 முதல் 10 நிமிடமும், பெண்ணு றுப்பில் நுழைந்தவுடன் “3 முதல் 5 நிமிடமும்” விறைப்புத்தன்மை அவசியம். இதில், விறைப்புத்தன்மை மிக எளிதில் குறைந்து ஆணுறுப்பு துவண்டு விட்டால் அது குறைபாடு மேலும் சிலருக்கு விறைப்பு தன்மையே சில நோய்களில் இருக்காது. (உ.ம்.) சர்க்கரை நோய், சிறுநீரக செயலிழப்பு. உயர் இரத்த அழுத்தம்.

 

Premature Ejaculation (விரைவாக விந்து வெளிப்படுதல்) :

  • பொதுவாக விந்து வெளியேற 3 முதல் 5 நிமிடம் ஆக வேண்டும். அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறப்பினுள் நுழையுமுன் விந்து வெளியேறினால் அது செக்ஸில் குறைபாடுதான்.  கிராமப்புரத்தில் இதனை “நரம்புத்தளர்ச்சி” என்று அழைக்கின்றனர். இது நிறைய ஆண்களை பாதித்துள்ளது.

 

Inhibited Orgasam (செக்ஸ் உணர்வு குறைபாடு) :

  • உணர்வற்ற உன்னத நிலை, செக்ஸில் ஈடுபடும்போது ஆணுறுப்பை பெண்பிறப்புறுப்பினுள் நுழைத்து உள்ளும் வெளியும் அசைக்கையில் விந்தணு வெளிப்படும்பொழுது  ஆணுக்கு ஏற்படும் செக்ஸ் உன்னத நிலையை (Orgasam) ஆணால் உணரமுடியாத நிலை. அல்லது உணர்விருந்தும் விந்து சரியாக வெளிப்படாதிருத்தல்.

 

Priapism (ஆணுறுப்பு விறைக்கும்போது தாங்கமுடியாத வலி) :

  • இந்த நிலையில் செக்ஸ் என்றாலே பயம் உண்டாகும்.

 

Sexual Addiction (செக்ஸ் அடிமை) :

  • குடிபோதை மயக்கம் மீளமுடியாமை போல் இது ஒரு செக்ஸ் அடிமைத்தனம், எந்நேரமும் அதைப்பற்றியே சிந்தித்தல். சொந்த வேலைகளைக் கூட அன்றாடம் செய்ய முடியாமல் சிரமப்படுதல். இது இருபாலருக்கும் பொதுவானது.

 

Sex Arousal Disorder (செக்ஸ் கிளர்ச்சி உணர்வு குறைபாடு) :

  • பொதுவாக செக்ஸ் உணர்வு சிலருக்கு மிகக் குறைவாகவும், இல்லாத நிலையும் இருக்கும். சிலருக்கு மிக அதிகமாக இருக்கும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலை Satyriasis – சட்டைரியாஸிஸ் எனப்படும். பெண்ணுக்கு அதிகமாகயிருத்தல் : “Nymphomania” – நிம்போ மேனியா, எனப்படும்.

 

இது தவிர, சிலருக்குபிறப்பிலேயே – Congenital ஆணுறுப்பு நீளம் மிகக் குறைவாகவும் Testis இல்லாமலும் இருக்கும் (Eg: Turner’s Syndrome) இந்த குறைபாடுகளை சரி செய்வது மிக கடினம்.

 

 

பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகள் :

பொதுவாக ஆண்மைக்குறைவைப் போலவே பெண்மைக்குறைவு ஏற்படுகிறது. ஆனால் பெண்கள் அதனை வெளிப்படுத்துவதில்லை, பெரிதுபடுத்துவதில்லை. இதனால் பெண்மையில் ஏற்படும் பிரச்சனைகளை சமூகமும் பெண்களும் பெரிதுபடுத்துவதில்லை.

 

Dyspareunia

  • ஆணுறுப்பு, பெண்உறுப்பினுள் நுழைந்தவுடன் பெண்ணிற்க்கு உண்டாகும் தாங்க முடியாத வலி இது.

 

பொதுவாக பெண்களையும் Inhibites Orgasm (செக்ஸ் உணர்வு உன்னத நிலை, இல்லாதிருத்தல்), Sexual Addiction, Sex Arousal Disorder, Dyspareunia போன்ற பிரச்சனைகள் பாதிக்கலாம்,

 

 

நிறைய விவாகரத்துகளுக்கு (Divorce)   காரணம் செக்ஸ் பிரச்சனை தான்

 

செக்ஸ் பிரச்சனைகளுக்கு தீர்வு  -: ஹோமியோபதி மருந்துகள்

 

செக்ஸ் பிரச்சனை என்றாலே மாற்று மருத்துவம் தான் நினைவிற்க்குவரும். ஏனென்றால் ஆங்கில மருந்துகளினால் உடனடி நிவாரணம் கிடைக்க பெற்றாலும், பின்னர் பக்க விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

 

ஹோமியோபதி மருத்துவத்தில் எந்த செக்ஸ் பிரச்சனைகள் இருந்தாலும், நிரந்தரமாக, பக்கவிளைவற்ற வகையில் மருந்துகள் நன்றாக வேலை செய்யும்

 

ஹோமியோபதி மருந்துகள், ஆண்மை குறைபாட்டிற்கும்,  பெண்மை குறைபாட்டிற்கும், நன்றாக வேலை செய்யும்.

 

செக்ஸ் பிரச்சனைக்கு, நோயாளியின் உடல் & மனநிலை அறிகுறிக்கு தகுந்தவாறு ஹோமியோபதி மருந்தை தேர்ந்தெடுத்து கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.  

 

 

 

செக்ஸ் குறைபாடு ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்

ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம்  ஆண் / பெண் செக்ஸ் குறைபாடு பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

பண்ருட்டி:- 9443054168

புதுச்சேரி:- 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

For appointment please Call us or Mail Us.

 

 

 

 

 

Get Appointment

==–==

Feel Free to Contact us 
* indicates required field

==–==


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India