SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலையை என்னால் அடைய முடிவதில்லை, இதுவரை ஆர்கசத்தை உணர்ந்ததும் இல்லை, இது எதனால்? இதற்கு சிகிச்சை உண்டா?
February 6th, 2014 by Dr.Senthil Kumar

 

orgasm vivekanantha homeopathy clinic & Psychological counseling center panruti - pondicherry- chennai

கேள்வி: டாக்டர் அவர்களுக்கு வணக்கம். 29 வயது திருமணமான குழந்தையில்லாத பெண் நான். என்னால் எந்தவித சிரமமுன்றி உடலுறவு கொள்ள முடிகிறது. ஆனால் ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலையை என்னால் அடைய முடிவதில்லை, இதுவரை ஆர்கசத்தை உணர்ந்ததும் இல்லை, இது எதனால்? இதற்கு சிகிச்சை உண்டா?

பதில்: பல பெண்களுக்கு செக்ஸ் உறவின் போது இந்தப் பிரச்சினை உள்ளது.

நிறையப் பெண்களுக்கு இந்த ஆர்கசம் பிரச்சினை பெரும் பிரச்சினையாகவே மாறி வருகிறது. ஆனால் ஆர்கசம் வராமல் போவதற்கு மிக முக்கிய காரணம் மனக்கவலையே. இதுவரை கர்ப்பமாகவில்லையே என்ற கவலை, துணைவர் மூலம் செக்ஸ் வியாதி வந்து விடுமோ என்ற அச்சம், கூட்டு குடும்பத்திலிருந்தால் யாராவது வந்துவிடுவார்களோ என்பது உள்ளிட்ட சின்னச் சின்ன அச்சம் காரணமாகவே பெண்கள் உச்ச நிலையை அடைவதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. இதை கைவிட்டு விட்டு, அமைதியாக முழு ஈடுபாட்டுடன் உறவில் ஈடுபட்டால் ஆர்கசம் தானாக வரும்.

மேலும் செக்ஸ் நிலைகள் குறித்தும், செக்ஸை எப்படியெல்லாம் அனுபவிக்கலாம் என்பதும் குறித்த அடிப்படை அறிவைப் பெற வேண்டியது இரு பாலாருக்கும் அவசியம். அதில் அரைகுறை ஏற்பட்டால்தான் உறவின்போது சொதப்பல் ஏற்படுகிறது.

அதேபோல உறவுக்கு முன்பும், உறவின்போதும் மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பது மிக மிக அவசியம். அப்படி ஏற்பட்டால் ஹார்மோனின் அளவு குறைந்து உறவு கசந்து போகும்.

செக்ஸ் என்பது பிறவியிலேயே அனைவருக்கும் தெரிந்த ஒன்றல்ல. கற்றுக் கொள்வதில்தான் அதன் முழு இன்பம் கை கூடும். செக்ஸ் உணர்வுகளை எதிர்பார்ப்பது மட்டுமல்ல, அதை துணைவருக்குத் தருவதிலும் முழுமையாக இருக்க வேண்டும்.

ஆனால் ஆண்களுக்குக் கிடைப்பது போன்ற வெளிப்படையாக பேசும் நண்பர்கள் பெண்களுக்குக் கிடைப்பதில்லை என்பதும், வெளிப்படையாக இதுகுறித்து யாரிடம் விளக்கம் பெறலாம் என்பதில் பெண்களுக்கு இருக்கும் தயக்கம், பல பெண்களுக்கு செக்ஸ் உறவு குறித்த முழுமையான அறிவு கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்துகிறது ஆர்கசத்தை அடைவதில் சிரமம் ஏற்படுவது சாதாரண விஷயம்தான். இதுகுறித்து முதலில் கவலைப்படுவதை விட்டு விட வேண்டும்.

உங்களின் மன நிலை முழுமையாக செக்ஸ் உறவில் ஈடுபடாதபோது இதுபோன்ற பிரச்சினை ஏற்படுகிறது. மனோ ரீதியான பிரச்சினைதான் இது. சில முறையான ஆலோசனைகளை கடைப்பிடித்தால் இதிலிருந்து விடுபடலாம்.

இதேபோல் பெண்களுக்கு செக்ஸ் எழுச்சி ஏற்படுவதிலும் சில சமயங்களில் குறைபாடுகள் ஏற்படும். இதன் காரணமாக பிறப்புறுப்பில் வழவழப்புத் தன்மை குறைந்து, அது அவர்களது துணைவருக்கு சிரமத்தைத் ஏற்படுத்த நேரிடும். இதையும் தவிர்க்கலாம்.

இதுபோன்ற பிரச்சினை உள்ளவர்கள் ஒரு மருத்துவரை / உளவியல் / மன நல ஆலோசகரை அணுகி உரிய ஆலோசனை பெறலாம். அதன்படி நடக்கலாம். செக்ஸ் நிலைகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளலாம். எனவே உச்சத்தை அடைவது சிரமம் என்ற கவலையை விட்டு விட்டு அதை சரி செய்யும் முயற்சியில் இறங்கினால், அனைத்தும் இன்ப மயமாகும்.

 

சிகிச்சை / உளவியல் / மனநல ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளவும்
உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையங்கள், தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:– 9865212055
பண்ருட்டி:- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

Get Appointment

==–==

Feel Free to Contact us 
* indicates required field

 

orgasm problem treatment, not getting orgasm, uchanilai pirachanai, wife not getting reaching orgasm, husband not satisfied wife orgasam, argasam, arkasam, uchakattam.


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India