SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
இதயத்தை பாதிக்குமா அதிக உடலுறவு?
January 31st, 2014 by Dr.Senthil Kumar

 

Heart and sex treatment speciality center Vivekanantha sex specialty hospital velachery, chennai, panruti, cuddalore

 

கேள்வி: உயர்திரு மருத்துவர் அய்யா அவர்களுக்கு வணக்கம். எனது வயது 45, இதுவரை இரத்தக்கொதிப்போ, சர்க்கரை நோயோ எனக்கு வந்ததில்லை. ஆரோக்கியமாகவே இருக்கிறேன். வாரத்திற்க்கு 4 -5 முறை உடலுறவு கொள்கிறேன். உடலுறவுகொள்ளும்போது மட்டும் சிறிது படபடப்பாக உள்ளது. மற்றபடி வேறு எந்த தொந்தரவும் இல்லை. எனது நன்பர்கள் இந்த வயதில் அதிகமாக உடலுறவு கொண்டால் அது இதயத்தை பாதிக்கும் என்று கூறுகிறார்கள். அது உண்மையா? அதிகமாக உடலுறவு கொண்டால் அது  இதயத்தைப் பாதிக்குமா தயவு செய்து கூறவும்.

 

மருத்துவர் பதில்: பயம் வேண்டாம் அய்யா, ஒருசில நபர்களின் வேலையே தேவையில்லாத சில புரளிகளை கிளப்பிவிடுவதுதான். இந்த வயதில் ஆரோக்கியமான உடலும், நல்ல முறையில் உடலுறவுகொள்ளும் வாய்ப்பும் உங்களுக்கு அமைந்திருப்பதற்க்கு இறைவனுக்கு நன்றி கூறுங்கள்.

 

இப்போது உடலுறவினால் நமது உடலில் ஏற்படும் சில மாற்றங்களை பற்றி பார்ப்போம்.

உலகில் உள்ள பெரும்பான்மையான மக்கள் உடலுறவுக்கும் இதயத்துக்கும் உள்ள தொடர்புகள் பற்றி தவறான கருத்துகளைக் கொண்டுள்ளனர். ஆனால் இது பற்றி ஆய்வு நிகழ்த்திய பாலியல் மருத்துவர்கள் உடலுறவால் ஆரோக்கியமான எந்த இதயமும் பாதிக்கப்படுவதில்லை என்று உறுதியாகக் கூறுகின்றனர். உண்மையில் ஒத்த மனத்துடன் உடலுறவில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவதால் மாரடைப்பு ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும். அந்த வகையில் உடலுறவு என்பது நமக்கான பாதுகாப்புக் கவசமாகவே செயல்படுகிறது. எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

 

உடலுறவு நிகழ்வுகளை கீழ்கண்ட நான்கு நிலைகளாகப் பிரிக்கலாம்.

  1. எழுச்சி நிலை (Excitement Phase)
  2. கிளர்ச்சி நிலை (Plaeau Stage)
  3. உச்ச நிலை (Orgamic Phase)
  4. மீள் நிலை (Resolution Phase)

மேற்கூறிய நான்கு நிலைகளிலும், இதயமானது பலவகையான ஆரோக்கியமான மாற்றங்களை அடைகிறது.

 

மாரடைப்புக்கான காரணங்களை ஆராய்ந்த இதய மருத்துவர்கள் அவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர். அதாவது இதயத்துக்குப் போதுமான உடற்பயிற்சி இல்லாதது, உடலின் எடை அதிகமாதல், மன இறுக்கம் ஆகியவைதான் அடிப்படையான காரணங்கள். இந்த மூன்று காரணங்களையும் வெல்லக்கூடிய ஆற்றல், உடலுறவுக்கு உண்டு என உறுதியாகக் கூறுகிறார்கள்.

 

உடலுறவானது இதயத்திலும் இதயம் தொடர்பான ரத்தக் குழாய்களிலும் ஏற்படுத்தும் மாற்றங்களானது மூன்று வகையான காரணங்களை அடிப்டையாகக் கொண்டு அமைந்துள்ளது. அதாவது உடலுறவில் ஈடுபடுபவர்களின் வயது, திருமணத்தின் போது வயது, உறவில் ஈடுபடுபவர்கள் திருமணம் செய்து கொண்டவர்களா அல்லது திருமண பந்தத்துக்கு அப்பாற்பட்டு உடலுறவில் ஈடுபடுபவர்களா ஆகிய மூன்று அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.

 

உடலுறவின்போது ஏற்படும் உடலியல் மாற்றங்கள் யாவும் ஒரே மாதிரியாக இருந்தாலும் இதற்காக எடுத்துக் கொண்ட நேரம் உடலுறவின் தன்மை போன்றவை ஒவ்வொருவருக்கும் மாறுபடக்கூடும்.

 

உடலுறவில் ஏற்படும் தம்பதிகளின் வயதுக்கும், அவர்களின் உடலில் ஏற்படும் உடலியல் மாற்றங்களுக்கு மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

 

உடலுறவு கொள்ளும் தம்பதியர்களின் வயது இருபதாக இருந்தால் அவர்களின் உடலில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் மற்ற வயதான தம்பதியர்களைவிட அதிகமாக இருக்கும். இளமையின் விளிம்பில் இருப்பதால் உடலில் உள்ள  இரத்தக்குழாய்கள் அளவுக்கு அதிகமாகச் செயல்பட்டு ரத்த அழுத்தத்தின் அளவு உயர்வதோடு அல்லாமல் இதயத்துடிப்பின் அளவும் பன்மடங்கு அதிகமாகிறது.

உடலுறவின் உச்சக்கட்டத்தின்போது (Orgasm) ரத்த அழுத்தத்தின் அளவானது 220/110 என்ற அளவுக்கு உயரும். இவ்வாறு உச்ச நிலைக்குச் சென்ற ஓரிரு நிமிடங்களில் மறுபடியும் சாதாரண ரத்த அழுத்த நிலைக்கு மீள்கிறது.

 

இதுபோல் உடலுறவின் உச்சநிலையில் ஒரு நிமிடத்துககு இதயம் சுமார் 180 என்ற அளவுக்கு மிகவும் வேகமாகத்துடிக்கும். ஆனால் உச்ச நிலையில் இருந்து மீண்ட ஒரு நிமிடத்துக்குள் இதய துடிப்பானது பழைய நிலைக்கு திரும்பிவிடும்.

 

வயதானவர்கள் உடலுறவில் ஈடுபடும்போது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள், இளம் வயது தம்பதிகள் உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் உடலியல் மாற்றங்களைவிடக் குறைவானவே இருக்கும்.

 

ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும்போது செலவாகும் கலோரிகளின் எண்ணிக்கை, உடலுறவில் ஈடுபவர்களின் வயது, அவர்களின் உடல் நிலை, அவர்களின் திருமண வயது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாறுபடும். பொதுவாக சாதாரண உடலுறவின்போது 150 கலோரிகள் செலவழிக்கப்படகிறது. இந்த சக்தியானது சாதாரண மனிதன் இரண்டு மாடிகள் கொண்ட ஒரு கட்டடத்தின் மாடிப்படிகளில் ஏறும்போது செலவிடும் ஆற்றலுக்கு இணையானது.

 

பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள், உடலுறவு என்பது உடலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடிய மிகச்சிறந்த உடற்பயிற்சி என்றே கூறுகின்றன. உடலுறவு அசைவுகளின்போது அந்தப் பகுதியில் உள்ள தசைகள் மட்டுமல்லாமல் முதுகுத்தண்டுவடப் பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறுகின்றன. அதோடு முதுகுத் தண்டுவடப் பகுதியில் உள்ள எலும்பு அமைப்புகளும் சிதைவு மாற்றங்களுக்கு ஆளாகாமல் தடுக்கப்படுகின்றன.

 

ஒரு மனிதன்  45 நிமிட நேரம் நடைபயிற்சியில் ஈடுபடும்போது ஏற்படும் பலன்கள், ஒருமுறை உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் பலன்களுக்கு இணையானது என்று சொல்லப்படுகிறது.

 

அதாவது அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்டால் கிடைக்கும் புத்துணர்ச்சியை ஒருமுறை உடலுறவு கொள்ளும்போது பெற முடியும்.

 

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை: 9786901830

புதுச்சேரி:- 9865212055

பண்ருட்டி: 9443054168

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

Get Appointment

 

 

Feel Free to Contact us 
* indicates required field

 

sex and heart problem, heart attack and intercourse, heart patient sex pannalama, 


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India