
கேள்வி: டாக்டர் நான் ஒரு கல்லூரி மாணவன். இரண்டு வாரங்களுக்கு முன்னால் கோவாவிற்கு டூர் போன போது நண்பர்களின் கட்டாயத்தின் பேரில் ஒரு விலை மகளிடம் உடல்ரீதியான தொடர்பு வைத்துக் கொண்டேன். மறுநாளே எனக்கு பயம் வந்து விட்டது, எயிட்ஸ் தொற்றிக் கொண்டிருக்குமோ என்று. அதனால் மறுநாளே எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொண்டேன். பரிசோதனை முடிவில் எனக்கு எச்.ஐ.வி இல்லை என்று முடிவு வந்துள்ளது. இதனால் எனக்கு எயிட்ஸ் தொற்றவில்லை என்று அர்த்தமா டாக்டர்?
பதில்: எயிட்ஸ் பாதிப்பிற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டாலோ, அல்லது நீங்கள் ஒரு முறை தகாத உடலுறவு கொண்டிருந்தாலோ, நீங்கள் பரிசோதனைக்கு குறைந்த பட்சம் மூன்று மாதம் நீங்கள் பொறுத்து இருக்க வேண்டும். நீங்கள் எயிட்ஸ் தொற்றும் சூழ் நிலை ஏற்பட்ட மறு நாளே பரிசோதனை செய்ததால், இந்த பரிசோதனை சரியான முடிவைத் தராது. இந்த மாதிரி பரிசோதனை செய்ய சரியான சமயம் மூன்று மாதங்கள் கழித்தே. அபூர்வமாக, சிலருக்கு ஆறு மாதங்கள் கழித்து செய்யும் பரிசோதனையில் தான் அவர்கள் பாதிக்கப் பட்டிருப்பது தெரிய வரும். அதனால் நான் பரிந்துரைப்பது இது தான்: மூன்று மாதம் கழித்து ஒரு பரிசோதனையும் அன்றிலிருந்து ஆறு மாதம் கழித்து ஒரு பரிசோதனையும் செய்துகொள்ளுங்கள். இனிமேல், உங்கள் வாழ்க்கைத் துணையைத் தவிர வேறு யாரிடமும் பாதுகாப்பில்லாமல் உடலுறவு கொள்ளாதீர்கள்.
எச். ஐ. வி- HIV பரிசோதனை என்பது உங்கள் ரத்தத்தில் உள்ள எச். ஐ. வி கிருமியை கண்டுபிடிக்கும் பரிசோதனை அல்ல. மாறாக, இந்தக் கிருமியினால் உங்கள் உடலில் உருவாகும் எதிர்ப்பு அணுக்கள் (Antibodies) உள்ளனவா என்று தான் பரிசோதிக்கப்படுகிறது. இவ்வாறான எதிர்ப்பு அணுக்கள் (Antibodies) ரத்தத்தில் இருந்தால், உங்களுக்கு எச். ஐ.வி உள்ளது என்று முடிவு சொல்லி விடுவார்கள். இதனால் தான் இந்த பரிசோதனையை ஆங்கிலத்தில் “HIV Antibody Test”என்று சொல்லுகிறார்கள். ஒரு முறை உங்களுக்கு எச். ஐ வி கிருமி தொற்றி விட்டால் இந்த எதிர்ப்பு அணுக்களை உங்கள் உடல் உற்பத்தி செய்ய சுமாராக மூன்று மாதங்கள் ஆகும். அபூர்வமாக ஆறு மாதங்கள் கூட ஆகலாம்.
நீங்கள் எச். ஐ.வி பரிசோதனைக்கு போகும்போது, சந்தேகத்திற்கு இடமான ஒரு சூழ்நிலைக்கு – தகாத உறவு அப்புறம் குறைந்தது மூன்று மாதம் கழித்தே போக வேண்டும். உங்களுக்கு எச். ஐ.வி இல்லை என்று முடிவு வந்தால், அந்த பரிசோதனைக் கூடத்திலேயே -லேப் மறுபடி ஆறு மாதம் கழித்து வந்து மறுபடி பரிசோதனை செய்து கொள்ள சொல்லுவார்கள். மறக்காமல் அதே போல செய்யுங்கள். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் பாதுகாப்பில்லாத உடலுறவால் வரும் பிரச்சனையை எண்ணிப் பாருங்கள்.
ஒரு வேளை, துரதிர்ஷ்டவசமாக “HIV Positive ” என்று பரிசோதனையில் தெரியவந்தால் உங்களுக்கு எச். ஐ. வி. கிருமி தொற்றி விட்டது என்று அர்த்தம். ஆனால், இதனால் உங்களுக்கு எயிட்ஸ் வந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. எயிட்ஸ் என்பது இந்த கிருமியின் தாக்கம் முற்றிப்போனால் வரும் கடைசி நிலையாகும். நீங்கள் எச்.ஐ.வி க்கு சரியான மருந்துகளை உட்கொள்ளவில்லை எனறால் இது எயிட்ஸில் போய் முடியலாம்.
உங்களுக்கு எச். ஐ.வி உள்ளது உறுதி ஆகிவிட்டால், நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் ரெண்டு:
- உடனடியாக மருத்துவரை அணுகி, எயிட்ஸ் வராமல் தடுப்பது எப்படி என்று ஆலோசனை பெறுங்கள். எச்.ஐ.வி தாக்கம் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப் பட்டால், ஓரளவு நல்ல வாழ்க்கைத் தரத்துடன் வாழ வழி உள்ளது.
- உங்களின் மூலம் மற்றவர்களுக்கு இந்த கிருமி பரவும் அபாயம் உள்ளது என்பதை அறிந்து பொறுப்புடன் செயல்படுங்கள்.
- எச்.ஐ.வி தாக்கி விட்டால், நீங்கள் தனி மரம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.இந்தக் கிருமி தாக்கப் பட்டவர்களுக்கு என்று இணையங்களிலும், கிட்டத்தட்ட எல்லா நகரங்களிலும் இப்போது குழுக்களும் அமைந்துள்ளன. இவற்றில் சேர்ந்து, பயன் பெறலாம்.
மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால் உடனே தயக்கமின்றி மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
ஆலோசனை &சிகிச்சைக்குதொடர்புகொள்ளவும்
சிறப்புமருத்துவர்செந்தில்குமார்தண்டபாணிஅவர்களிடம்இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சைபெற்றுபலர்நல்லபலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர்செந்தில்குமார்அவர்களைசென்னை, வேளச்சேரிவிவேகானந்தாஹோமியோபதிகிளினிக் & உளவியல்ஆலோசனைமையத்தில்சந்திக்கலாம். முன்பதிவுஅவசியம். முன்பதிவிற்குதொடர்புகொள்ளவும் 9786901830, மின்அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும்விபரங்களுக்கும்ஆலோசனைக்கும்சிகிச்சைக்கும் தொடர்புகொள்க
விவேகானந்தாகிளினிக்ஆலோசனைமையங்கள் & தொடர்புஎண்கள்
சென்னை:– 9786901830
பண்ருட்டி:– 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

==–==
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.