SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க – How to control Blood Pressure
April 30th, 2021 by Dr.Senthil Kumar

 

உயர் இரத்த அழுத்தம் (Hyper Tension / High Blood Pressure)

உயர் இரத்த அழுத்தம் (Hyper Tension / High Blood Pressure) உடையவர்கள், அதன் பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது மிக அவசியமாகும்.

இரத்த அழுத்தத்தை கட்டுப் பாட்டில் வைத்திருக்கவும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்கவும்  வேண்டுமானால் அவர்கள் மருந்துகளோடு சரியான உணவு மற்றும் வாழ்கை முறைப் பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.

 

உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

  • புகை பிடித்தலை முற்றுமாக நிறுத்த வேண்டும்.
  • ஆரோக்யமானவர்களுக்கும் கூட புகை பிடித்த பின்பு இதயத் துடிப்பு அதிகரிக்கும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் புகைக்கும் போது அவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது.
  • அதிகம் உப்பு சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். உப்பினை அதிகம் உள்ள மிக்சர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
  • பொட்டாசியம் சத்தை அதிகம் கொண்ட வாழைப்பழம், உருளைக்கிழங்கு, கொய்யா, யோகார்ட் போன்றவற்றை சேர்க்க வேண்டும்.
  • பழங்கள் , மரக்கறி வகைகள், கடலை வகை, நார் உணவுகள், கொழுப்பு குறைந்த பால் வகைகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
  • மதுவின் அளவை குறைக்க வேண்டும்.

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

பண்ருட்டி:- 9443054168


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India