SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
இளம் பருவ பெண்களுக்கான சந்தேகங்களும் – விளக்கமும்
January 26th, 2012 by Dr.Senthil Kumar


இளம் பருவ பெண்களுக்கான சந்தேகங்களும் – விளக்கமும்

வளர் இளம் பருவத்தில் விடை தெரியாத பல கேள்விகள் மனதைக் குடைந்தெடுக்கும். யாரிடம் இந்த சந்தேகங்களை கேட்பது என்ற கேள்வி மனதை வாட்டும்.

அப்படி பருவ வயதில் அடியெடுத்து வைத்திருப்போருக்குத் தோன்றக் கூடிய சில பொதுவான கேள்விகளும், அவற்றுக்கான விளக்கங்களும் இங்கே…..

 

உயரத்தை அதிகரிக்கச் செய்ய முடியுமா?

அமினோ அமிலம் கலந்த புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால் எடைக் கேற்ற உயரம் கிடைக்கும். லைசின் மாதிரியான அமினோ அமிலங்கள் இளம் வயதில் உயரத்தை அதிகரிக்கச் செய்ய உதவுகின்றன. அதுவும் கூட குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பலன் தராது. சிலர் ஹார்மோன் சிகிச்சையை பரிந்துரைப்பார்கள். ஆனால் ஹார்மோன் சிகிச்சைகள் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இத்தகைய சிகிச்சைகள் பேராபத்துகளில் கூட முடியலாம். கவனம் தேவை.

 

மெல்லிய உடல் வாகு பெற இளைக்க வைக்கிற மாத்திரைகள் உண்டாஉட்கொள்ளலாமா?

உடல் இளைக்க வேண்டுமென நினைத்தால் அதற்கு முக்கியத் தேவை பொறுமை. இளம் தலைமுறைக்குப் பொறுமை மிகக்குறைவு. உணவுக் கட்டுப்பாடு, சரிவிகித உணவை உட்கொள்வது, உடற்பயிற்சி போன்றவை மட்டுமே அழகான உடற்கட்டுக்கு தீர்வு. உடலை இளைக்க வைக்கிற மாத்திரைகள் மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியில் செயல்பட்டு , பசியின்மை உணர்வை ஏற்படுத்தும். இதனால், தூக்கமின்மை, மனச்சோர்வு, இரத்த அழுத்தம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். சிலவகையான உடல் இளைக்கச் செய்கிற மருந்துகள், நாளடைவில் அவற்றுக்கு அடிமையாகிற உணர்வை ஏற்படுத்துமாம்….பக்க விளைவுகள் இல்லாத மாற்றுமுறை மருந்துகளை உட்கொள்லலாம். ஹோமியோபதி மருந்துகள் பலனளிக்கும். தகுதிவாய்ந்த மருத்துவரின் ஆலோசனையின் படி மருந்துகளை உட்கொள்ளலாம். சுயமாக மருந்துகளை வாங்கி சாப்பிட கூடாது.

 

பெண்கள் சுய இன்பம் (மாஸ்டர்பேஷன் – ஃபிங்கரிங்) செய்வது சரியா? தவறா?

சுய இன்பம் காண்பதில் தவறில்லை. ஆனால் தினமும் செய்யக்கூடாது. அதற்கு அடிமையாகவும் கூடாது. தனிமையில் இருப்பவர்களுக்கு இந்த எண்ணம் தோன்றலாம். மனதளவிலும், உடலளவிலும் சுறுசுறுப்பாக இருந்தால் இந்த எண்ணம் அதிகம் வராது. பருவ வயதில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த. சுய இன்பம் காண்கிற நாகரீகமான பெண்கள் அதற்கு சில கருவிகளை உபயோகிக்கிறார்கள். அப்படி உபயோகிக்கும் பொருட்கள், பிறப்புறுப்பினுள் காயங்களை ஏற்படுத்தலாம். நவநாகரீகம் என்ற பெயரில் ரொம்பவும் மிக இறுக்கமான ஜீன்ஸ் அணிகின்ற பெண்களுக்கு சுய இன்பம் காண வேண்டும் என்கிற உணர்வு வருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தளர்வான மிருதுவான ஆடைகள் இப்பிரச்சினையைத் தவிர்க்கும்.

 

மார்பகங்கள் குறித்து வளரிளம் பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள்.

  • பருவ வயதை எட்டும் வரை பிரா அணிய வேண்டாம். பிராக் அணியலாம்
  • மார்பகம் வளர ஆரம்பித்ததும் சரியான அளவுள்ள பிரா அவசியம்.
  • குளிக்கும்போது மார்பகங்களை நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். மார்பகங்களின் அடிப்பகுதியில் வியர்வை படிந்து, நோய் தொற்று வரலாம்.
  • மார்பகங்களின் நடுவே காம்புகள் இருக்கும். பெண் முழு உடல் வளர்ச்சி அடைகிற போது, இதுவும் முழுமையான வளர்ச்சியைப் பெற்றிருக்கும்.
  • மார்பகக் காம்புகளின் நிறமும், அளவும் பெண்ணுக்குப் பெண் வேறுபடலாம்
  • சில பெண்களுக்கு மார்பகக் காம்புகள் சற்றே உள்ளடங்கி இருக்கலாம். அது கர்ப்பம் தரிக்கிற சமயத்தில் தானாகச் சரியாகிவிடும்.
  • சில பெண்களுக்கு காம்பைச்சுற்றி ஓரிரண்டு ரோமங்கள் தென்படலாம். அது சாதாரனமானதுதான்.
  • நாகரீகம் என்ற பெயரில் சில இளம் பெண்கள் பிரா அணிவதில்லை. மார்பக வளர்ச்சி முழு வீச்சில் இருக்கிற இளம் பருவத்தில் அவற்றின் வளர்ச்சிக்கேற்ப தாங்குவது தருவது பிரா மட்டுமே. அதைத் தவிர்ப்பதால் மார்பகங்களின் அளவு மாறவும், தொய்வடையவும் வாய்ப்புகள் அதிகம்.

 

ஓரின சேர்க்கையாளர் (லெஸ்பியன்) என்பவர்கள் யார்? இது சரியா தவறா?

பெண் ஓரினச் சேர்க்கைப் பிரியர்களுக்கு லெஸ்பியன் என்று பெயர். இவர்களுக்கு ஆண்களின் மீதான ஈர்ப்பு இன்றி, பெண்களிடம் ஈர்ப்பு அதிகமிருக்கும். உடலளவிலும் இவர்களது நெருக்கம் அதிகமிருக்கும். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்வதிலும், உணர்ச்சிகளைத் தூண்டிக் கொள்வதிலும் இன்பம் காண்பார்கள். இவர்கள் விஷயத்தில் முழுமையான பாலுறவு இருக்காது. சராசரி பாலுறவை வைத்துக் கொண்டு, இதே போன்று ஓரின சேர்க்கையில் (லெஸ்பியன்) இருக்கிற பெண்களும் உண்டு. அவர்களுக்கு இருபால்சேர்க்கையாளர் (பை செக்‌ஷுவல்ஸ்) என்று பெயர். இந்த உறவுகள் சரியா தவறா என்பது அவரவர்கள் கலாச்சாரத்தையும், மனதையும் பொருத்த்து. பொதுவாக நமது நாட்டில் இத்தகைய கலாச்சாரம் ஏற்புடயது அல்ல என கருதப்படுகிறது. 

ஓரின சேர்க்கையாளர்களுக்கும் எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்கள் அதிகம் தாக்க வாய்ப்புகள் உண்டு.

 

கருத்தடை மாத்திரைகள் பாதுகாப்பானவையா?

இளம் பெண்களுக்கேற்ற சரியான கருத்தடை முறை எது?

  • வளரிளம் பருவத்தில் பாலுறவு என்பதே ஆபத்தானது. இளம்வயதினர்  திருமணத்துக்கு முன்பு பாலுறவை தவிர்ப்பதே நல்லது. அதை மீறி தவிர்க்க முடியாத சந்தர்ப்பம் ஏற்ப்பட்டால் ஆணுறை உபயோகிப்பது நல்லது. அது பால்வினை நோய்களையும் தவிர்க்கும்.
  • ஹார்மோன் மாத்திரைகள்தான் கருத்தடைக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. கர்ப்பத்தைத் தவிர்க்க நினைக்கிற பெண்கள், இதை மாதவிலக்கான குறிப்பிட்ட நாள் முதல் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். உடலுக்குள் நிகழ்கிற ஹார்மோன் மாற்றம், கர்ப்பம் நிகழாமல் தடுக்கும்.
  • வாந்தி, தலைசுற்றல், பசியின்மை, திடீர் அதிக இரத்தப் போக்கு, எடை அதிகரிப்பு என கருத்தடை மாத்திரைகள் ஏற்படுத்தும் பயங்கர பக்கவிளைவுகளைப் கூறிக் கொண்டே போகலாம். வருடக் கணக்கில் சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய்கூட வரும் வாய்ப்பு உண்டு.

 

.

 

 

 

 

Feel Free to Contact us 
* indicates required field


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India