கேள்வி: டாக்டர் அவர்களுக்கு வணக்கம், எனது வயது 35, இப்போதெல்லாம் உடலுறவு வைக்கும் போது விந்து விரைவாக வெளியே வந்துவிடுகிறது. சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு, கொழுப்பு போன்ற எந்த பிரச்சனையும் இல்லை. விந்து விரைவாக வெளிப்படுதலை தடுக்க என்ன வழி டாக்டர். இதற்கு தீர்வு உண்டா?
பதில்: கவலை வேண்டாம், சரியான முறையில் எல்லாம் செய்தால் விந்து முந்துதலை தவிர்க்கல்லாம். அப்படியும் விந்து விரைவில் வெளியேறினால் தயங்காது தாமதிக்காது மருத்துவரை கலந்தாலோசித்து தகுந்த சிகிச்சையும் ஆலோசனையும் பெற்றால் நல்ல பலனை பெறலாம்.
உடலுறவின் போது விந்து விரைவாக வெளிப்படுதலை தடுக்கும் எளிய வழிகள் சிலவற்றை பார்க்கலாம்
- உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமிடங்களாவது ஆக வேண்டும்
- ஆனால், அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறுப்பிக்குள் நுழையும் முன்பே விந்து வெளியேறினால் அது ஆண்மை குறைபாடுதான்.
- இந்தவகையான பாதிப்பு நிறைய ஆண்களுக்கு இருக்கிறது.விந்து விரைவில் வெளிப்படுதலை தம்பதியர் நினைத்தாலே ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும். இதற்கு இருவரிடமும் நல்ல புரிதல் அவசியமாகும்.
- தம்பதியர் இருவரும் இந்தக் குறைபாடுகளை தீர்த்துவிட முடியும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். இதற்காக மது போன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
உடலுறவு என்பது நான்கு நிலைகளை அடக்கியது.
o உணர்வடைதல்,
o செயல்படுதல்,
o விந்து வெளியேற்றம்,
o இயல்பு நிலைக்கு திரும்புதல்
- இந்த நான்கு நிலைகளில், விந்து வெளியேற்றம் எனப்படும் மூன்றாம் நிலையில் ஆண் & பெண் இருவரது ஆசைகளும் தீரும் முன்செக்ஸ் செயல்பாடுகள் நின்றுவிடுவதாகும். அதனால் இறுதிச் செயல்பாடான இயல்பு நிலைக்கு திரும்புதலை இரண்டாவதான செக்ஸ் செயல்பாடுகளிலும் புகுத்தும்போது உறுப்பு எழுச்சி நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.
- மனத்தை மிகவும் அமைதியாக இயல்பாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப்போனால் மனத்தை உறவு கொள்ளும் பெண்ணிடத்து இல்லாமல் வேறு ஏதாவது ஒரு செயலை நினைத்தல் நல்லது. அதாவது நண்பர்களுடன் பேசியது அல்லது பாட்டு கேட்பது, நகைச்சுவையை ரசிப்பதுபோல் ஏதாவது ஒரு நிகழ்வை மனத்தில் நினைத்துக்கொண்டு செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகுந்த பயன் அளிக்கும்.
- செக்ஸ் செயல்பாடுகளை விரைவாக, வேகத்துடன் செய்யாமல் மிக இயல்பாகவும் அவசரமில்லாமலும் மெதுவாக செய்ய வேண்டும்.
- ஏனெனில் உடலைவிட மனதே செக்ஸ் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆவேச உணர்வைக் குறைக்கும்போதே மனம் இலகுவாகிவிடுகிறது. இருவரும் நிதானமாக செக்ஸ் செயல்பாடுகளை நடத்தும்போது நேரத்தை தேவையான அளவுக்கு நீட்டிக்க முடியும்.
- ஆண்கள் விந்து முந்துதலைத்தடுக்க சில தடுப்பு செயல்களை செய்யலாம். அதாவது சுய இன்பம் காணும் செயல், இது நல்ல முறையில் பலன் அளிக்கிறது. சுயஇன்பத்தை முழுமையாக ஒரே நேரத்தில் வேகமாக செய்து முடிக்காமல் நிறுத்தி இடைவெளிவிட்டு நேரத்தை நீட்டிக்க வேண்டும்.
- சாதாரணமாகவே ஆண்கள் சுயஇன்பம் காணும் போது அவசர அவசரமாகவே செயல்படுவார்கள். மனதில் உள்ள காம எண்ணம் குறைவதற்குள் அவசர அவசரமாக கையை செயல்படுத்தி விந்துவை வெளிப்படுத்தி திருப்தி அடைவார்கள். இதுவே கலவியின்போது சிக்கலை உண்டாக்குகிறது. அதனால் முதலில் ஆண் அவனது உறுப்பை ரசிக்கப் பழக வேண்டும். உறுப்பு எழுந்து நிற்பதில் தொடங்கி அது விந்து உமிழ்ந்து ஓய்வதுவரை ரசித்து நிதானமாக கை செயல்பாடுகளை ரசித்துச் செயல்பட வேண்டும்.
- விந்து வெளியாகும் நேரத்தில் செயலை நிறுத்தி வைத்து மீண்டும் தொடர வேண்டும். அடிக்கடி இப்படிச் செய்துபார்ப்பது அவசியம். என்றாவது ஒருநாள் கையைப் பயன்படுத்தி இன்பம் அனுபவிக்க முயற்சிப்பது பயன்தராது. தினமும் அல்லது தினமும் இருமுறையாவது இந்த முறையில் உச்சகட்ட நேரத்தைக் கூடுதலாக்கும் முயற்சியை மேற்கொள்ளும்போது தான் நல்ல பலன் தரும்.
- முதலில் வெறும் கையுடன் சிறிது நேரம் சுய இன்பம் அனுபவிக்க வேண்டும். பிறகு எண்ணெய் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி சுயஇன்பத்தில் ஈடுபட்டு செயல்படும் நேரத்தை நீடிக்க வேண்டும். இப்படி சில நாள்கள் உறுப்புடன் விளையாடி நேரத்தை நிறுத்திச் செயல்படும் தந்திரத்தை வெற்றிகரமாக உணர்ந்து கொண்ட பிறகு பெண்களுடன் உறவு கொள்ளும் போது இதைப் பயன்படுத்தலாம். இடைவெளிவிட்டு செயல்படுதல் விந்து வெளிப்படுதலைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக கருதப்படுகிறது
- ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் முழுவதும் இன்பம் இருக்கிறது என்பதை இருவரும் அறிந்துகொள்ள வேண்டும். ஆணுக்கு ஆணுறுப்பில் மட்டும்தான் இன்பம் இருக்கிறது என்று கருதி அதை மட்டுமே உபயோகிப்பதை பெண் குறைத்துக்கொண்டு, ஆண் உடலின் மற்ற பாகங்கள் மீதும் பெண் கவனம் செலுத்துவது மிகுந்த பலன் அளிக்கும்.
- மூச்சை நன்றாக உள் இழுத்தல் மிக முக்கியமான எளிதான வழியாகக் கருதப்படுகிறது. மிகவும் ஆழமாக மூச்சை இழுத்துவிடுவது ஒரு நல்ல பயிற்சியாகும். ஏனெனில் இறுதி நிலையில் சமமாக மூச்சுப் பயிற்சியைப் பயன்படுத்தி களைப்பை போக்க முடியும்.
- வெறுமனே உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்து, பேசிக்கொண்டே செயல்படுவது செக்ஸ் உறவு நேரத்தை கூடுதலாக்குகிறது. ஏதாவது விஷயங்களைப் பேசுவது, இன்பத்தை அனுபவித்து முனகுவதன் மூலம் உடல் & மன இறுக்கத்தை குறைத்துக் கொண்டு உடலை எந்த அளவிற்க்கு இயல்பாக வைத்துக் கொள்கிறமோ அவ்வளவு தூரம் நேரத்தைத் தள்ளிப் போட முடியும்.
- ஆண் மேலே பெண் கீழே என்ற நிலையில் உறவுகொள்வது சுலபமாகவும் இன்பமாகவும் இருக்கலாம். ஆனால் இது ஆண்களுக்கு ஏற்ற நிலை என்று சொல்ல முடியாது. இந்த நிலையில் எளிதாக விந்து வெளியேற வாய்ப்பு உண்டு. அதனால் பெண்ணை இயங்கச்செய்வது நல்ல பலன் அளிக்கும். அனைத்து உடற்சார்ந்த செயலையும் ஆண்கள் மட்டுமே செய்யாமல், பெண்களை மட்டுமே இயங்குவதாக வைத்துக்கொண்டால் ஆண்கள் விரைப்புத்தன்மையுடன் நீண்ட நேரம் இருக்க முடியும்.
- ஆணுறுப்பை மட்டுமே செக்ஸ் செயல்களுக்கு பயன்படுத்துவதை விடுத்து கை, நாக்கு, கால் போன்ற உறுப்புகளையயும் பயன்படுத்த வேண்டும். இதனால் ஆண் உறுப்புக்குக் கலவி நேரத்தில் ஓய்வு கிடைக்கும். இந்த ஓய்வின் காரணமாக உறவின் நேரத்தை நீட்டிக்க முடியும்.
- ஆணுக்கு விந்து வரப்போவதை அறியும் பெண் முதுகு அல்லது பின்புறத்தில் பலமாகத் தடடுவது வேறு செயலுக்கு மாற்றுவது வலிக்கும்படி கடிப்பது, விந்து வரும் அறிகுறி தெரிந்ததும், ஆண்குறியை வெளியே எடுத்து, ஆண்குறியும் மொட்டுப்பகுதியும் இணையும் இடத்தில் பெருவிரலை அடிப்பகுதியிலும், ஆட்காட்டி விரலை மேற்பகுதியிலும் வைத்து லேசான அழுத்தம் கொடுத்து சிறிது நேரம் பிடிக்கவும். இது Squeeze Technique என்று அழைக்கப்படுகிறது.
- ஆசன வாய்க்கும் விதைப்பைக்கும் இடைப்பட்ட ஒரு மேடான பகுதி தடவிப் பார்த்தால் ஒரு நரம்பு புடைத்துக் கொண்டு ஆசன வாய்க்கும் விதைப்பைக்கும் இடையில் இருக்கும் அதனை விந்து வரும் அறிகுறி தெரிந்ததும் இயக்கத்தை நிறுத்தி லேசான அழுத்தம் கொடுத்தால் விந்து வெளியே வரும் அறிகுறி தடைபடும்.
இது போன்ற செயல்களில் ஈடுபடும்போது விந்து வெளியேற்றம் தாமதமாகிறது.
அப்படியும் விந்து விரைவில் வெளியேறினால் தயங்காது தாமதிக்காது மருத்துவரை கலந்தாலோசித்து தகுந்த சிகிச்சையும் ஆலோசனையும் பெற்றால் நல்ல பலனை பெறலாம்.
சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு:உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 28 – 99******00 – குழந்தையின்மை – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==–==
Feel Free to Contact us
===—===
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.