SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
உடலுறவு முடிந்ததும் உடனே தூங்கிவிடுவேன். இது என் மனைவிக்கு பிடிக்கவில்லை. மேலும் எதிர்பார்க்கிறாள். ஆனால் எனக்கோ மிக சோர்வாக உள்ளது, நான் என்ன செய்ய வேண்டும்?
February 14th, 2014 by Dr.Senthil Kumar

 

first night tips Specialty Homeopathy Treatment at Velachery, Chennai, Pondicherry, Cuddalore, Villupuram, Tamilnadu,

 

கேள்வி: 29 வயது திருமணமான ஆண் நான், செக்ஸில் முழு ஈடுபாடு உண்டு, மனைவியும் நன்கு ஒத்துழைக்கிறாள், விரைப்புத்தண்மையிலோ நீண்ட நேரம் உடலுறவு கொள்வதிலோ எந்த சிக்கலும் இல்லை, ஆனால் உடலுறவு முடிந்ததும் உடனே தூங்கிவிடுவேன். இது என் மனைவிக்கு பிடிக்கவில்லை. மேலும் எதிர்பார்க்கிறாள். ஆனால் எனக்கோ மிக சோர்வாக உள்ளது, நான் என்ன செய்ய வேண்டும்?

 

பதில்: பெண்கள் வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை. அவர்களது தேடுதல் அதற்கும் அப்பால் மிகப் பெரியது. அது உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது என்பதை நிறையப் பேர் புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொண்டால் உறவுகள் வலுப்படும், இனிமை கூடும்.

 

மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன?

நிறையப் பெண்களுக்கு பேச்சு மிகப் பிடிக்கும்.

பெண்கள் தங்களது துணைவரிடமிருந்து அன்பான, ஆறுதலான பேச்சை நிறையவே எதிர்பார்க்கிறார்கள். பேச்சின் மூலம் அன்பை, நட்பை பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது.  நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பதை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த பேச்சு உதவும்.  சில பெண்களுக்கு தங்களது புறத்தோற்றம் குறித்த கவலை இருக்கும். இதை தங்களது துணைவர் விரும்புவாரா மாட்டாரோ என்ற கவலையும் அதிகமாகவே இருக்கும்.

 

 உனது பேச்சுதான் உனக்கு அழகு, உனது சிரிப்புதான் அழகு என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில் பெண்களுக்கு பெரும் துணைவர்களாக முடியும்.

 

திருமணம் செய்தவர்களுக்கு செக்ஸ் என்பது  தவிர்க்க முடியாதது,  அதேசமயம், அதை இனிய முறையில் அனுபவிக்க வேண்டும். மனத்தாங்கல், வருத்தம், வலி, வேதனையுடன் அதை அனுபவிக்கக் கூடாது. அது மனதில் நிரந்தர காயத்தையும், நீங்கா வலியையும் ஏற்படுத்தி விடலாம்.  பெண்களைப் பொறுத்தவரை மன ரீதியான திருப்தியையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆண்கள் அவசரக்காரர்கள். காரியம் முடிந்தவுடன் சற்று முன் நடந்ததை மறந்து விடுவார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அந்த இனிய உணர்வின் நினைவுகளில் சில மணி நேரங்களாவது மூழ்கிக் கிடப்பார்கள்.

 

தன்னிடம் தனது துணைவர் எப்படி நடந்து கொண்டார் என்பதிலிருந்து பலவற்றையும் அவர்கள் மனதுக்குள் அசை போட்டுக் கொண்டிருப்பார்கள்.  எனவே உறவுக்கு முன்பும் சரி, உறவின்போதும் சரி ஆண்கள் பெண்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். உறவுக்குப் பின்னரும் நம்மை நினைத்து மனைவி சந்தோஷத்துடன் நினைத்துப் பார்க்கும்படியாக அவர்களை நடத்த வேண்டும்.  செக்ஸ் உறவின்போது மட்டும்தான் பெண்கள் சந்தோஷமடைவார்கள் என்றில்லை. அன்பான, ஆறுதலான முத்தம், கைகளைப் பிடித்து நான் இருக்கிறேன் உனக்கு என்று கூறுவது, சின்னச் சின்ன ரொமான்ஸ்கள் என நிறைய விஷயங்கள் பெண்களுக்குப் பிடித்தமானவை. இவற்றை நிறைய பேர் நிறைய செய்வதில்லை.

 

லைட்டாக இவற்றை செய்து விட்டு நேரடியாக போய் விடுகிறார்கள். முன்விளையாட்டுக்களைத் தவிர இதுபோல நிறைய விஷயங்கள் உள்ளன. மனைவியின் கால்களை இதமாக அழுத்தி விடலாம், லேசான மசாஜ் செய்யலாம். விரல்களைப் பிடித்து சொடுக்கு எடுக்கலாம். தலையைக் கோதி விடலாம். அன்பு மொழி பேசலாம்… இப்படி நிறைய இருக்கிறது.  எல்லாம் முடிந்து உறவை திருப்திகரமாக முடித்த பின்னர் அவ்வளவுதான் தூங்கப் போக வேண்டியதுதான் என்று கிளம்பிப் போவது கூடவே கூடாது.

 

செக்ஸ் உறவின்போது ஆண்களுக்கு என்டார்பின் சுரப்பு அதிகமாக இருக்கும். இதனால் படு வேகமாக இயங்கி, எல்லாம் முடிந்த பின்னர் அப்படியே சோர்ந்து போய் விடுவார்கள். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை. அது, நிதானமாகவும், விவேகமாகவும்தான் நடக்கிறது. எனவே உறவு முடிந்த பின்னரும் கூட பெண்கள் கிளர்ச்சியுடன்தான் இருப்பார்கள்.

 

எனவே உறவை முடித்த பின்னர் சிறிது நேரம் அவர்களுடன் ஆசுவாசமாக, அன்பாக இணைந்து இருப்பது நல்லது.  இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்தவைதான். ஆனாலும் நிறைய பேர், அந்த சமயத்தில் ‘அதை’ மட்டும் சரியாக செய்து விட்டு மற்றவற்றில் கோட்டை விட்டு விடுவதால் பல கோணல்கள் ஏற்பட்டு விடுகின்றன.

 

சில ஆண்களுக்கு தான் செய்தது அனைத்தும் சரி என்றே தோன்றும். ஆனால் மனைவியிடம் கேட்டால்தான் தெரியும் அவர் திருப்தி அடையாதது. கணவரின் மனம் நோககூடாது என்று பல பெண்கள் ”தனக்கு முழு திருப்தி என்று” பொய் கூட சொல்வார்கள்.

 

இவற்றை எல்லாம் சரி செய்தும் உங்களின் துணைவிக்கு குறை ஏற்பட்டால் தயங்காமல் ஒரு குடும்ப நல ஆலோசகரை சந்தித்து ஆலோசனை பெறுதல் நல்லது. நீங்களும் சோர்வுறாமல் இருக்க சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

 

வாழ்த்துக்கள்.

 

 

 

 

உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு  தொடர்பு கொள்ளவும்

உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பிரச்சனைகளுக்கு   உளவியல் / மனநல ஆலோசனை &  சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.

விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை: 9786901830

புதுச்சேரி:- 9865212055

பண்ருட்டி:- 9443054168

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

 

Get Appointment

 

 

Feel Free to Contact us 
* indicates required field

 

i slept immediately after sex, but my wife need more time after sex, sleeping after sex, husband not spending time with wife for sex counseling, 

 


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India