உடல் பருமன்
பொதுவாக உடல் பருமன் என்பது தேவைக்கு அதிகமாக உள்ள உடல் எடையேயாகும். நாம் உண்ணும் உணவில் கலோரித்திறன் அதிகமாக இருக்கும். அந்த கலோரிகள் முழுமையாகப் பயன்படுத்தாமல் அப்படியே உடலில் தங்கி விடுவதால் உடல் எடை அதிகரிக்கிறது. ஒருவர் உண்ணும் உணவில் 2500 கலோரிகள் இருக்கிறது. இவற்றில் 2000 கலோரிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதாவது நடத்தல், ஓடுதல், போன்ற உடல் உழைப்புகளால் 2000 கலோரிகள் மட்டுமே செலவழிக்கப்படுகின்றன. மீதமுள்ள 500 கலோரிகள் அப்படியே உடலில் தங்கிவிடுகிறது. இவ்வாறு தினமும் கலோரிகள் சேர்வதால் அவை கொழுப்புப் பொருட்களாக மாற்றப்பட்டு வயிற்றின் அடிப்பகுதி, பக்கவாட்டுப்பகுதி, தொடையின் இரு புறங்களில் சேமிக்கப்படுகிறது. இதனால் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கிறது.
இந்த உடல் பருமனால் ஆண், பெண் இருபாலரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சிறு குழந்தை முதல் முதியவர் வரை இந்த அவஸ்தைக்கு ஆளாக நேரிடுகிறது.
சிலர் உடல் எடையைக் குறைக்க பட்டினி கிடக்கிறார்கள். அல்லது பசிக்கேற்ற உணவு சாப்பிட மறுக்கிறார்கள். மேலும் ஒரு சிலர் இவர்களின் உடல் எடையை காசாக்க பல பகட்டு விளம்பரங்களை செய்து உடல் எடையைக் குறைக்க கருவிகள், மாத்திரைகள் என விற்பனை செய்கின்றனர். முப்பதே நாளில் உடல் எடையைக் குறைக்கிறோம் என்று விளம்பரம் செய்கின்றனர். இவர்களை நாடிச் சென்றவர்கள் அனைவருக்கும் உடல் எடை குறைந்திருக்கிறதா என்று பார்த்தோமானால் இல்லை, பணத்தை இழப்பதுதான் மிச்சம்.
உடல் பருமன் என்பது திடீரென்று உண்டாவது அல்ல, பல மாதங்களாக, பல வருடங்களாக உடலில் சேர்ந்த கொழுப்பு பொருட்கள் எடையை அதிகரிக்கச் செய்கின்றன. இதை எப்படி 30 நாட்களில் குறைக்க முடியும்.
பொதுவாக உடல் பருமனை வெறும் மருந்துகள் கொடுத்துக் குறைக்க இயலாது. மருந்தோடு சேர்த்து உணவுக் கட்டுப்பாடு, உழைப்பு, பயிற்சி ஆகியவற்றை சேர்த்துச் செய்ய வேண்டும். அதற்காக ஒரேயடியாக 10 கிலோ குறையும் என்று எதிர்பாக்க முடியாது.
பொதுவாக உடல் பருமன் இரண்டு வகைப்படுகிறது. ஆண்களைச் சார்ந்த உடல் பருமன் அன்ராஸ்ட் என்றும் பெண்களைச் சார்ந்த உடல் பருமன் கைனாய்ட் எனவும் கூறப்படுகிறது.
ஆண்களுக்கு வயிற்றின் மேல் பகுதியில் கொழுப்புப் பொருட்கள் சேமிக்கப்பட்டு, வயிறு பருத்துக் காணப்படுகிறது. பெண்களுக்கு இடுப்பு, தொடை, கால், வயிறு பகுதிகளில் சேமிக்கப்படுகிறது.
உடல் பருமன் கூட காரணங்கள்
- அதிக உழைப்பின்மை,
- உடற்பயிற்சியின்மை.
- உடலில் தைராய்டு சுரப்பி அதிகமாக அல்லது குறைவாக சுரந்தால் உடல் பருமன் அதிகரிக்கிறது.
- அளவுக்கு அதிகமாக கொழுப்புப் பொருட்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும், மேலும் எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதும் உடல் எடை கூட முக்கியக் காரணம்.
- சிலருக்கு பரம்பரையாக உடல் பருமன் கூடி இருக்கும்.
- நவீன உணவுப் பழக்கங்கள், துரித உணவுகள் அதிகம் உட்கொள்வது
- மருந்து, மாத்திரைகள் அதிகம் உபயோகிப்பதாலும் உடல் எடை அதிகரிக்கிறது.
உடல் எடை அதிகரிப்பதின் சில அறிகுறிகள்
- அடிக்கடி உடல் சோர்வு, களைப்பு உண்டாகும்.
- உடம்பில் அதிக வியர்வை காணுதல்.
- நடப்பதில், மாடிப்படி ஏறி இறங்குதல், சில வேலைகள் செய்யும் போது உடல் வலி ஏற்படுதல்.
- அடிக்கடி மயக்கம், படபடப்பு, மூச்சிரைப்புக் காணுதல் போன்றவை இருந்தால் உடல் எடை தானாக அதிகரிக்கிறது என்பதை அறியலாம்.
- உடல் பருமனால் ஏற்படும் நோய்கள்:
- இரத்த அழுத்த நோய்
- இருதய படபடப்பு
- கல்லீரல் பாதிப்பு
- பித்தக் குறையாடு
- நீரிழிவு நோய்
- மூட்டு வலி
- சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும்.
- பெண்களுக்கு மாதவிலக்குப் பிரச்சினைகள், மார்பகப் புற்றுநோய், மற்றும் இடுப்பு, கை, கால், மூட்டுவலி உண்டாகும்.
மனச்சிதைவு ஏற்படுவதாலும் சிலரின் உடல் எடை அதிகரிப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
உடல் பருமனை குறைக்க சில டிப்ஸ்:
- உடல் எடையை உடனே குறைக்க முடியாது. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம்தான் படிப்டியாகக் குறைக்க முடியும்.
- அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் நடைபயிற்சி செய்வது நல்லது.
- பெண்கள் வீட்டு வேலைகளை செய்து வந்தால் உடல் பருமன் குறையும்.
- எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நொறுக்குத் தீனி, இனிப்பு வகைகள் தவிர்ப்பது நல்லது.
- மாவுச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.
- பச்சை காய்கறிகளை சாலட் செய்து சாப்பிட வேண்டும்.
- மது பானங்கள் சாப்பிடக் கூடாது.
- குளிரூட்டப்பட்ட பானங்களைத் தவிர்ப்பது நல்லது.
- பதப்படுத்தப்பட்ட பதனிடப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது.
- மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- சத்து மாத்திரைகளைத் தவிர்த்து உணவின் மூலம் அந்த சத்துக்கள் கிடைக்கச் செய்யுமாறு சாப்பிட வேண்டும்.
- வாரம் ஒருமுறை ஒருவேளை உண்ணா நோன்பு இருப்பது நல்லது.
- யோகா பயிற்சி சிறந்த பலனைத் தரும்.
- உணவில் அதிகளவு கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உடல் பருமன் குறைய ஓமியோபதி மருத்துவம் நன்கு பலனளிக்கும்
உடல் பருமன் குறைய ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற உடல் பருமன் பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு:உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 28 – 99******00 – உடல் பருமன் குறைய – குழந்தையின்மை – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
Feel Free to Contact us
==–==
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.