கேள்வி: மதிப்பிற்குறிய மருத்துவர் அவர்களுக்கு வணக்கம். எனக்கு சமீபத்தில்தான் திருமணமானது. என் கணவருக்கு விரைவில் விந்து வந்துவிடுகிறது. எனக்கும் முன் விளையாட்டு எப்படி செய்யவேண்டுமென்றும் தெரியவில்லை. தயவுசெய்து தக்க ஆலோசனை கூறுங்கள்.
பதில்: கவலை வேண்டாம். விந்து முந்துதலை தவிர்க்க சிகிச்சை உண்டு. தகுந்த சிகிச்சையும் ஆலோசனையும் விந்து முந்துதலை தவிர்க்கும். மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்ளவும். முன்விளையாட்டை எப்படி விளையாடுவதென்று கீழே படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
முன் விளையாட்டில் கவணிக்க வேண்டியவைகள்
- உடலுறவு என்பது மிக மகிழ்வான நிகழ்ச்சி. பல வித இன்பங்கள் நிறைந்தது. அதை முழுமையாக அனுபவிக்க அனுபவமில்லாவிட்டாலும், அதைப் பற்றிய பாலியல் அறிவு தேவை. இதில் சொல்லிக் கொடுக்க என்ன இருக்கிறது, எல்லாம் இயற்கையாகவே தெரிந்து விடும் என்பது தவறு.
- ஏனென்றால் உடலுறவு என்பது பல சிக்கல்கள் உடைய விஷயம். மனமும் உடலும் கலந்து இழைந்து அனுபவிக்கும் சுகம். இதை முற்றிலும் பெற பெண்களை எப்படி மகிழ்விப்பது என்பது ஆண்களுக்கு தெரிய வேண்டும். அதே போல் பெண்களும் உணர வேண்டும்.
- உடலுறவின் முன்பு, இருவருக்கும் ஆர்வத்தை உண்டாக்குவது ‘முன் தொடுதல்’ எனப்படும். உடலுறவின் முடிவு உச்சக்கட்டம் என்றால் ஆரம்ப நிலை முன் தொடுதல். இந்த முன் தொடுதல் ஒன்றே பல சுகங்களை கொடுக்க வல்லது.
- உடலுறவை உண்டாக்கும் ‘சமாச்சாரங்கள்’ என்ன? வாசனை. பாலுணர்வு தூண்டுதல் வாசனைகளால் எழுப்பப்படுகிறது. பெண்களின் உடல் வாசனை ஆண்களை ஈர்க்கும்.
- உடலுறவை உண்டாக்கும் ‘சமாச்சாரங்கள்’ என்ன? வாசனை. பாலுணர்வு தூண்டுதல் வாசனைகளால் எழுப்பப்படுகிறது. சதாரணமாகவே பெண்களின் உடல் வாசனை ஆண்களை ஈர்க்கும். அதுவும் உடலுறவுக்காக மனைவியை நெருங்கும் கணவனுக்கு மனைவியின் வாசம் – மணக்கும் பர்ஃபியூமாக இருந்தாலும் சரி, தலையில் சூடியிருக்கும் மல்லிகைகைப் பூவின் வாசமாக இருந்தாலும் சரி இவை எதுவும் இல்லாமல் இருந்தால் கூட பெண்ணின் இயற்கையான வியர்வை வாசமேகூட அந்த நேரத்தில் ஆண்களை கிரங்கச்செய்யும்.
- அதுபோலதான் பெண்ணுக்கும் தனக்குப் பிடிதமான ஆணின் வாசம் ரொம்பவும் பிடிக்கும்.
- அதே போல் பெண்களுக்கும் பெண்ணின் உடை, அலங்காரம், பாலுணர்வு இல்லாத அன்பான, அக்கறையான தொடுதல், தடவுதல் இவைகளையும் “முன் தொடுதல்” எனும் இவையெல்லாமே உடலுறவை டாப் கியரில் பறக்கச்செய்யும் “ஸ்விட்ச்” ஆகும்.
- முன் தொடுதல், பின்னால் வரும் உணர்ச்சிகளை தட்டி எழுப்பும். முக்கியமாக பெண்ணின் ஆர்வத்தை ஊக்கிவிடும். எனவே உடலுறவின் முக்கியமான அம்சம்.
- சிறந்த ஆண்மை பெருக்கி, ஆர்வமுள்ள, ஆசை மிகுந்த அன்பான மனைவி தான்.
- ஏதாவது ஒன்றை தூண்டினாலே ஆண்களுக்கு ஆசை பெருகும். பெண்களுக்கு ஐந்தையும் தூண்டினால் முழுமையாக ஆசை வரும். மனதை ஊக்குவிப்பது, முன் தொடுதலின் முதல் முயற்சி. சூழ்நிலைகள் ரம்மியமாக இருக்க வேண்டும். அமைதியான, உணர்ச்சியை தூண்டும் சூழ்நிலை, உல்லாச உணர்வுகளை தூண்டும். முன் தொடுதல் தொடங்க ஏதுவாகும்.
- முன் தொடுதலின் முக்கிய அங்கம் தொடுதல் – ஸ்பரிசம். மனித உடல் நரம்புகளால் மூடப்பட்டதாகும். நரம்பு முடிவுகள் ஸ்பரிசத்தால் கட்டழிந்து, உணர்ச்சி வசப்பட்டு, மகிழ்ச்சியை தரும். உடலின் சில பகுதிகளில் நரம்புகள் அதிகமாக இருக்கும். இவற்றை தொட்டால், தடவினால் மகிழ்ச்சி பல மடங்கு அதிகமாகும். இவை மார்பகங்கள், உள்ளங்கால், உதடு, நாக்கு, உள்ளங்கை பிறப்புறுப்புகள் (முக்கியமாக க்ளிடோரிஸ், ஆண்குறி) போன்றவை.
முன் தொடுதலுக்கு தேவையானவை
- உடல், மனது இணைந்த தூண்டுதல்
- அக்கறை உள்ள அன்பு, கவனிப்பு. “நான் இருக்கிறேன் உனக்கு பாதுகாப்பாக” என்று சொல்லாமல் சொல்லும் பரிவான தடவல்களால், ஒரு ஆண், ஒரு பெண்ணின் மனதை நெருடி, உணர்ச்சிகளை ஊக்குவிக்க முடியும்.
- நேருக்கு நேர் பேசிக் கொள்ளுதல் அவசியம். ஏனென்றால் முன் தொடுதல் சிலருக்கு பிடிக்கலாம். சிலருக்கு பிடிக்காமல் போகலாம். மனம் விட்டு பேசிக்கொண்டால் பிரச்சனைகள் தீரும்.
தொடுதல் – ஒரு முக்கிய காரணி
- மனித உடல்களில் பல பகுதிகள் பாலுணர்வை தூண்டும் பாகங்களாக இருந்தாலும், உடல் முழுவதுமே ஆசையை உணரும் ஒரு பெரிய பாலியல் அவயம். முன் தொடுதலால் சருமம் மூலம், இன்பமான உணர்ச்சிகள், உடலெங்கும் பரவும். அணைத்தல், தழுவுதல் போன்ற குறிப்பான பாலியல் தொடுதலைப் போலவே, பாலியல் குறிக்கோளாக இல்லாமல், பரிவுடன் செய்யப்படும் ஆதரவான தழுவுதல், தொடுதல் இவையும் பெண்களுக்கு பிடித்தமான செயல்களாகும்.
மிருதுவான ஸ்பரிசம்
- மிருதுவான, மென்மையாக தொடுதல் இவைகளே சில சமயங்களில் உணர்ச்சியை தூண்டபோதுமானவை. பின் முதுகை தடவுறல், மசாஜ் செய்தல் இவை சிலருக்கு ஆசை உணர்வை அதிகரிக்கும். கழுத்தை நீவுதல், விரல்களை லேசாக கடித்தல் போன்ற பலவித செயல்கள் இருக்கின்றன. இவற்றை ஆண்கள் தங்களின் மனவிகளுக்கு ஏற்றவாறு கையாளலாம்.
வாய்வழி காதல்
- முத்தமிடுவது எல்லோருக்கும் உகந்த ஒரு செயல். முகத்தோடு முகம் வைத்து செய்வதன் இது பல உணர்ச்சிகளை தூண்டும். காதுகள், கீழ்வயிறு, தொடைகள், எங்குவேண்டுமானாலும் தடவுதல், முத்தமிடுதல் ஆசையை தூண்டும். ஆனால் வாய் வழியாக அவயங்களை ஸ்பர்சிப்பது அவரவரின் விருப்பத்தை பொருத்தது.
- பெண்களை பொறுத்த வரையில் அவர்களின் விருப்பத்தை அறிந்து செய்ய வேண்டிய செயல், தொடுதல். இந்த வாய்வழி முறைகளை ஒரு நாளும் பலந்தப்படுத்தி செய்யக்கூடாது.
முன் தொடுதலால் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும், குறிப்பாக ஆண்மை குறைபாடுகள் உள்ள ஆண்களுக்கும் பலனளிக்கும். விஷயமறிந்த பெண்களால் பல கோணங்களில் நின்று, உட்கார்ந்து, ஆணின் உணர்வுகள் உசுப்ப முடியும். ஆண்களும் முன் தொடுதலை ஆரம்பிக்கும் முன், பெண்ணை சகஜ நிலைக்கு கொண்டு வர வேண்டும். பாலியல் சம்மந்தமில்லாத விஷயங்களை பேசி, பாராட்டுதல்களை நீடித்து, பாலுறவில் விருப்பமில்லாத பெண்ணை தூண்ட வேண்டும்.
ஒரே மாதிரியாக முன் தொடுதல், உடலுறவு, செய்தால் சுவையிருக்காது. சீக்கிரம் அலுப்பு தட்டிவிடும். பல மாறுதல்களை, மாற்றங்களை கையாண்டு, உடலுறவை இனிமையாக்க வேண்டும். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் வெறும் உடல் பசியை தீர்ப்பதற்கு மாத்திரம் உடலுறவு இருந்தால், அது முழுமையான காதல் அல்ல.
உடலுறவுடன் உணர்ச்சி பூர்வமான, அன்பான பந்தம் கணவனுக்கும் மனைவிக்கும் இருந்தால் தான் மணவாழ்க்கை முழுமை பெறும்.
வாழ்த்துகள்.
மேலும்விபரங்களுக்கும்ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும்தொடர்புகொள்க
விவேகானந்தாகிளினிக்ஆலோசனைமையங்கள் & தொடர்புஎண்கள்
சென்னை:– 9786901830
பண்ருட்டி:– 9443054168
புதுச்சேரி:– 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
==–==
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.