கேள்வி: எனக்கு சமீபத்தில் திருமணமானது. திருமணத்திற்க்கு முன்பு நான் இருவரை காதலித்தேன். வேறு இருவர் என்னை காதலித்தனர். ஆனால் நான் வீட்டில் பார்த்த இவரைத்தான் திருமணம் செய்துள்ளேன். இவரிடம் எனது பழைய காதல்களைப்பற்றி சொல்லலாமா, வேண்டாமா?
பதில்: .
- ‘அந்தரங்கம் புனிதமானது’. ஆனால், அது ரகசியமானதும் கூட.
- அந்தரங்கம் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது என்பது விதி. இதைப் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்வதுதான் சக மனிதனின் இயல்பாக இருக்க வேண்டும்.
- ஆண் – பெண் உறவில் எதைச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லக் கூடாது என்பதற்கு ஒரு பக்குவம் தேவைப்படுகிறது.
- தன் மனைவியின் / கணவரின் பழைய காதல் வாழ்க்கையை அறிந்துகொண்டு அதைப் பெருந்தன்மையோடு அணுகும் அறிவு முதிர்ச்சியான கணவன் /மனைவி ஒருசிலர் மட்டுமே.
ஆண் – பெண் உறவில் எதை வெளிப்படையாகச் சொல்லலாம், எதைச் சொல்லக்கூடாது என்பது ஒரு கலை.
- கணவன் – மனைவி இருவருமே ஒரு விஷயத்தை அடிப்படையாகப் புரிந்துகொள்ள வேண்டும். தன்னுடைய வாழ்க்கைத் துணை எல்லாவற்றையும் சரியாக அறிந்து கொள்ளக்கூடிய புரிதல் கொண்ட துணையா என்பதுதான் அது. அவர் அப்படிப்பட்ட மிகச்சரியான துணை என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால் உங்களின் கடந்த கால வாழ்க்கை பற்றிய எந்த உண்மைகளையும் தைரியமாக சொல்லலாம். அதேநேரம், மிகவும் பிற்போக்கான சிந்தனைகள் கொண்டவர் என்று தெரிந்தால், அவரிடம் எதையும் சொல்லாமல் இருப்பதே நல்லது.
- இது உங்களின் தவறு அல்ல. இதனால் குற்ற உணர்ச்சி எதுவும் தேவை இல்லை.
- ‘உண்மைகளைக்கூட வெளிப்படையாக பேச முடியாத ஒரு உறவு தேவைதானா?’ என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்தால், உண்மைகளை பேசியபின் எந்த விதமான விளைவுகள் ஏற்படும் என்ற பதிலையும் யோசிக்க வேண்டும்.
- அற்புதமான ஆண் – பெண் உறவில் ‘பொய்மை’ என்கிற களை தோன்றுவதற்குக் காரணம், பிற்போக்குவாதம் தான்!
- எனவே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளுங்கள், மனம் திறந்து பேசுங்கள், எதை இருவரும் ஏற்றுக்கொள்கிறீர்களோ அதன்படி பரிமாறிக்கொள்ளுங்கள். அதுதான் நிஜமான சந்தோசமான வாழ்க்கை.
வாழ்க்கை வாழ்வதற்கேயன்றி பிரிவதற்கல்ல.
வாழ்த்துக்கள்.
குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==


You must be logged in to post a comment.