SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
எனக்கு 55 வயது, என் மனைவிக்கு 50 வயது, நாங்கள் மாதத்திற்கு குறைந்தது 20 முறை உடலுறவு கொள்கிறோம். இது நல்லதா, கெட்டதா? இதை தொடரலாமா வேண்டாமா?
March 7th, 2014 by Dr.Senthil Kumar

 

Old age sex couple counseling at Vivekanantha homeopathy clinic & psychological counseling center, Velachery, Chennai, panruti, cuddalore, Pondicherry, villupuram, Dr.senthil kumar best homeopathy specialist & famous psychologist in tamilnadu, india,

 

கேள்வி: எனக்கு 55 வயது, என் மனைவிக்கு 50 வயது, நாங்கள் மாதத்திற்கு குறைந்தது 20 முறை உடலுறவு கொள்கிறோம். இது நல்லதா, கெட்டதா? இதை தொடரலாமா வேண்டாமா?

 

பதில்:

  • உண்ண உணவும், சுவாசிக்க காற்றும் மனிதன் உயிர்வாழ அத்தியவசிய தேவையாக உள்ளது போல ஆண் பெண் இடையேயான உறவும் அவசியமான ஒன்றுதான் என்று கூறுகிறது உளவியல் அறிவியல். 
  • அன்பான தாம்பத்யம் ஆயுளை நீட்டிக்கச் செய்வதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • வயதான பிறகும் முழுமையான தாம்பத்யத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆஸ்துமா, இரத்த அழுத்தம், இதய கோளாறுகள், போன்ற நோய்களின் தாக்கம் குறைவதாக ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. 

 

  • ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுணர்வு உணர்ச்சியில் வயது வேறுபாடு எதுவும் இல்லை.
  • ஆரோக்கியக் குறைவு, நோய், மருந்து மாத்திரைகள், மது, புகையிலை, போதை, சிகரெட், எண்ணெய், கொழுப்பு, அதிக எடை ஆகியவையே உடலுறவில் ஆர்வம் தோன்றாததற்கு காரணமாகும். 
  • மாதவிடாய் நின்றாலும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரக்கும்வரை 50, 60 வயது வரையிலும் கூடப் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இருக்கும்.  அதைப் போல, 70, 80 வயதுவரை டெஸ்டோஸ்டீரான் செக்ஸ் ஹார்மோன் சுரக்கும் ஆண்களுக்கு உடலுறவில் இச்சையும், ஈடுபாடும் இருக்கும் என்கிறது மருத்துவ அறிவியல்.

 

  • உடல் உறவின் உச்சக்கட்டத்தின் போது எண்டோர்பின்கள் மூளைக்குச் செல்வதால் இவை சிறந்த வலி நிவாரணியாகவும், தூக்க ஊக்கியாகவும் செயல்படுகின்றன.  மேலும், உடலில் களைப்பையும் அதே சமயம் முழு மனநிறைவான உணர்வையும் தருகின்றன. 
  • நிம்மதியற்ற மனிதனுக்குத் திருப்தியையும், உடலுக்கு நல்ல ஓய்வுடன் ஆழ்ந்த தூக்கத்தையும் அளிப்பது உடலுறவு ஒன்று தான். 
  • ஒரு திருப்தியான புணர்ச்சிக்குப் பிறகு உடலும் மனமும் தளர்ந்து ஓய்ந்து தானாகவே தூக்க நிலைக்குப் போய்விடுவதாக பிரிட்டனிலுள்ள இராயல் சொசைட்டி மருத்துவக் கழகம் கண்டறிந்துள்ளது.

 

  • தாம்பத்ய உறவினால் ஏற்படும் உணர்ச்சிப் பிரவாகத்தினால் ஆஸ்துமா நோயுள்ளவர்களின் பிடிப்புகள் உடனே தடுத்து நிறுத்தப்பட்டு விடுகின்றன. 
  • அவ்வாறே உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களின் இரத்தக்குழாய் இறுக்கமும் தளர்த்தப்பட்டு விடுகிறது. 
  • நரம்பு, தசைபிடிப்பு, முதுகுப் பிடிப்பு, வலி உள்ளவர்களுக்கும் உடலுறவு நல்ல பலனைத் தருகிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 
  • டென்ஷன், மன இறுக்கம், கவலை, படபடப்பு இவைகளுக்கு உடலுறவு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.
  • வயதான பிறகும் தாம்பத்யத்தில் ஈடுபடுபவர்கள் நீண்ட நாள்கள் உயிர் வாழ்கிறார்கள் என்று ஒரு ஆய்வு  கூறுகிறது. 
  • வயதானாலும், உடலுரவு கொள்வது தொடர்ந்தால் மன நிம்மதிக்கும், உடல் நலனுக்கும் எந்தக் குறையும் இருக்காது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

 

தயக்கமின்றி உங்களால் முடிந்த வயதுவரை உறவை தொடருங்கள்.

 

வாழ்த்துகள்

 

 

 

 

குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு  தொடர்பு கொள்ளவும்

உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.

விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

பண்ருட்டி:- 9443054168

புதுச்சேரி:- 9865212055 (Camp)

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

Get Appointment

==–==

Feel Free to Contact us 
* indicates required field

Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India