கேள்வி: என் கணவர் எப்போதும் அவர் வீட்டுபக்கமே பேசுகிறார். இதனால் எனக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. அவரை எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது எப்படி?
உளவியல் ஆலோசகர் பதில்:
- தினமும் உங்கள் கணவரிடம் நீங்கள் தான் எனக்கு எல்லமே, நீங்கள் இல்லையென்றால் ஒரு நிமிடம் கூட என்னால் வாழ முடியாது என்று சொல்லுங்கள். அவர் மகிழ்ந்து போய் எனக்கும் அப்படித்தாண்டா என்று சொல்வார்.
- கணவர் காலை அலுவலகத்திற்கு கிளம்பும் முன்பு அன்பாக ஒரு முத்தம் கொடுத்து அனுப்பி வையுங்கள். திரும்பி வரும்பேது பிரஷ்ஷாக புன்னகையுடன் அவரை வாங்க என்று அழையுங்கள். அன்றைய நாள் இருவருக்குமே இனிய நாளாக இருக்கும்.
- கணவருக்கு மரியாதை கொடுங்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அதனால் பல பிரச்சனைகள் தீரும்.
- வாக்குவாதம் ஏற்பட்டால் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். நீங்கள் பல முறை விட்டுக் கொடுத்து பாருங்கள். கொஞ்சநாளில் அவரும் விட்டுக்கொடுப்பார்.
- என் கணவர் ஒரு முடிவு எடுத்தால் அது சரியாக இருக்கும். அவர் ஏதாவது சொன்னால் அதில் ஒரு காரணம் இருக்கும் என்று பிறரிடம் கூருங்கள்.
- கணவரை நல்ல நண்பராக்கிக் கொள்ளுங்கள். நண்பர்கள் போன்று மனம் விட்டுப் பேசுங்கள்.
- கணவன், மனைவிக்கு இடையே யாரையும் நுழைய விடாதீர்கள். உங்கள் பிரச்சனைகளை நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் சிறிய பிரச்சனை கூட பூதாகரமாக வெடிக்க வாய்ப்புண்டு.
- எதற்கெடுத்தாலும் என் அம்மா வீட்டில் எப்படி இருந்தேன் தெரியுமா என்று அழுகையை ஆரம்பிக்காதீர்கள். அது அவருக்கு அதிக எரிச்சலூட்டும்.
- அம்மா வீட்டிற்கு போகும்போதெல்லாம், எங்க வீட்டுக்காரர் வீட்ல எப்படி கவனிச்சுக்குறாங்க தெரியுமா என்று கணவர் பெருமையை சொல்லுங்கள். கணவருக்கு உங்களின் மீது ஈர்ப்பு அதிகரிக்கும்.
- கணவர் மீது முழு நம்பிக்கை வையுங்கள்.
- கணவருடன் குழந்தைத் தனமாக பேசுங்கள், விளையாடுங்கள். இது மன இறுக்கத்தைப் போக்கும்.
- உங்க அம்மா இருக்காங்களே, உங்க அக்கா, தங்கச்சி இருக்காங்களே அவங்க மனுஷங்களே இல்ல, பிசாசுங்க என்று மாமியார், நாத்தனார்களை திட்டாதீர்கள்.
- குறை இருந்தால் சொல்லலாம், எதையும் நேரம் காலம் பார்த்து சொல்ல வேண்டும். பட்டென உடைத்து படாரென பேசி உங்கள் வாழ்க்கையை நீங்களே கெடுத்துக்கொள்ள கூடாது.
- எந்த தகவலையும் நாசுக்காக எடு்ததுச் சொல்லுங்கள். அவர் புரிந்து கொள்வார்.
- மாமியார், நாத்தனார் பிரச்சனை செய்தாலும் கூட என் மனைவி எந்த பிரச்சனையும் செய்யவில்லை. நீங்க தான் அவ கூட சண்டைக்கு வருகிறீர்கள் என்று உங்களுக்கு ஆதரவாகப் பேசுவார்.
- சண்டை போடாத கணவன், மனைவி இருக்க முடியாது. அப்படி சண்டை போட்டால் அதை மனதில் வைத்துக் கொண்டே இருக்கக் கூடாது. அவ்வப்போது மறந்துவிட வேண்டும்.
- அடிக்கடி கணவரை அன்புடன், ஆசையுடன் கட்டிப்பிடியுங்கள். கணவரை அடக்கி ஒடுக்கித்தான் உங்கள் வசப்படுத்த வேண்டும் என்பதில்லை. அன்பாலும் உங்கள் பக்கம் சாய வைக்கலாம்.
- இதையெல்லாம் செய்து பாருங்கள், அருமையான மாற்றங்களை உணர்வீர்கள் உங்கள் இல்லறவாழ்வில்
வாழ்த்துக்கள்.
குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:– 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.