எப்போதும் பொலிவான தோற்றத்துடன் காட்சியளிக்க
ஒரே மாதிரியான பொலிவான தோற்றம், ஒரு விதமான கவர்ச்சி முதலியவை மாறாமல் ஒரே மாதிரியான பொலிவான தோற்றத்தை பெற இந்த ஐந்து சக்தி வாய்ந்த குறிப்புகளை நடைமுறையில் பின்பற்றி வந்தால் ஆண்களும் பெண்களும் எப்போதும் சுறுசுறுப்புடனும் வயதாவது தெரியாமலும் வாழ முடியும்
முதல் குறிப்பு
சாப்பாட்டை இவ்வளவு கலோரிகள் என்று கணக்கிட்டு சாப்பிட வேண்டாம் ‘போதும்’ என்று உங்களுக்கே தெரியும். அப்படி உணரும் அளவே சாப்பிடுங்கள். இனிப்பு, கொழுப்பு முதலியவற்றை ஓரளவு குறையுங்கள். கேக் மற்றும் இனிப்பு வகைகளை முற்றிலும் தவிர்க்கவும். வெண்ணெய், கிரீம் அயிட்டங்கள், வறுவல் வகைளையும் தவிர்ப்பது மிகவும் நல்லது. மாதத்தில் ஒரு நாள் ஒன்றிரண்டு இனிப்புச் சாப்பிடுவதில் தவறில்லை!
ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்க முக்கியமாக, இனிப்பு வகைகளைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.
இரண்டாவது குறிப்பு
உப்பைக் குறையுங்கள். உப்பு, கொழுப்பு செல்களில் நன்கு அகப்பட்டுக் கொண்டு விடுகிறது. மேலும் உப்பு உடலில் அதிகம் சேரச்சேரச் சேமிப்பாகவும் தங்கி விடுகிறது. கொழுப்பு செல்களில் சேர்ந்து சிறு கண்ணறைகளை புதிதாக உருவாக்கி உடலைப் பருமனாக்கிவிடும். எனவே, உப்பைத் தவிர்ப்பதே மிகவும் நல்லது.
மூன்றாவது குறிப்பு
உடல் உறுப்புகள் வாரத்தில் ஒரு நாளாவது எளிதாக இயங்கப் பழங்கள் மட்டுமே சாப்பிடுங்கள். குறிப்பாக, திராட்சைப் பழம், முலாம் பழம் சாப்பிடுவது நல்லது. சாறாகவும் இவற்றை அருந்தலாம். உடலில் உள்ள நோய் நுண்ம நச்சுப்பொருட்களையும், அழுகலான நச்சுக்கூறுகளையும் இப்பழங்கள் வெளியே தள்ளிவிடும். தேவைப்படும் மற்ற வகையான பழங்களையும் போதுமான அளவு சாப்பிடுங்கள். இதன் பயனை மறுநாள் நீங்கள் நன்றாக உணரமுடியும். உடலும் மனமும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.
நான்காவது குறிப்பு
எடையைக் குறைக்க வேண்டும் என்றால் கொஞ்சம் கூடுதலாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். கால் கை மூட்டுகளுக்கு அதிகம் சிரமம் தராத உடற்பயிற்சி வகைகளை நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் சேர்ந்து செய்யலாம். இல்லை எனில் நீச்சல் பயிற்சி செய்யவும், துரித நடை, ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஒட்டுதல் ஆகியவற்றுள் ஒன்றையேனும் வாரத்திற்கு மூன்று முதல் ஐந்து நாட்களாவது பின்பற்ற வேண்டும். இதனால் உடல் எடை, தோற்றம் முதலியன அப்படியே மாறாமல் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக இருக்கும்.
ஐந்தாவது குறிப்பு
இது மிக முக்கியமானது, தசைநார்களை நிமிர்த்தும் உடற்பயிற்சி. காலையில் எழுந்ததும் ஒரு கயிற்றைப் பிடித்துக்கொண்டு அதில் ஏறுவது போல இரண்டு கைகளையும் நேராகத் தூக்கியபடியே கற்பனையில் ‘ரோப் கிளைம்பிங்’ செய்யுங்கள். இப்படிச் செய்யும்போது உங்கள் முதுகுத்தண்டும் கைகளும் பலத்தையும் சக்தியையும் பெறும்.
இரண்டாவது வழியைக் கவனமாகப் பின்பற்றினால் இந்த ஐந்தாவது வழியின் மூலம் கிடைக்கும் நன்மை அபாரமாக இருக்கும்.
தொந்தி விழுதல், உடல் பருமனாவது முதலியவற்றை இந்த ஐந்து வழிகளும் கண்டிப்பாகத் தவிர்த்து விடுவதால் எந்த வயதிலும் ஒரே மாதிரியான பொலிவான தோற்றத்தைப் பெற்று ஆரோக்கியமாகவும் திகழலாம்.
இவற்றை 20 வயதிலேயே செய்ய ஆரம்பிக்கவேண்டும். உருவம் மாறின பிறகு செய்ய ஆரம்பித்தால் பலனிருக்காது.
அதிக உடல் பருமன் இருந்தாலோ, கெட்ட கொழுப்பு இரத்தத்திலிருந்தாலோ தாமதிக்காமல் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்.
வாழ்த்துக்கள்
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:– 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.