SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
குழந்தையின்மை, விந்தணுக்கள் குறைபாடு ஓமியோபதி சிகிச்சை, சென்னை, Infertility, Low Sperm Count Homeopathy Treatment Clinic in Chennai
June 5th, 2015 by Dr.Senthil Kumar

 

 

Homeopathy Treatment for Infertility. விந்து அனுகல் இல்லை, vinthu thannni mathiri iruku

 

 

ஆண் உயிரணுக்களின் செயல்பாடுகள்.

 

உடலுறவின்போது பெண்ணுறுப்புக்குள் செல்லும். ஆணின் உயிரணுக்களின் செயல்பாடுகள்.

 

ஒருமுறை உடல் உறவு கொள்ளும்போது 380 முதல் 480 மில்லியன் உயிரணு பெண்ணுறுப்புக்குள் செல்லும். இந்த உயிரணுக்கள் பெண்குறி பாதை, கர்ப்பப்பை வாசல் என பலவற்றில் பயணித்து ஃபெலோப்பியன் டியூப்புக்குள் செல்ல கிட்டத்தட்ட மூன்றிலிருந்து ஐந்து மணி நேரம் ஆகும்.

 

இதனால்,480 மில்லியன் உயிரணுவில் சுமார் 3000 உயிரணுக்கள் மட்டுமே டியூப்புக்குள் செல்லும். இவற்றிலும் பல, அசைந்து கொண்டேயிருக்கும் சீலியாக்களை எதிர்கொள்ள முடியாமல், இறந்து போய் சில நூறு உயிரணுக்களே எஞ்சி நின்று கருமுட்டைக்கு அருகில் போய்நிற்கும். இந்த சில நூறு உயிரணுக்களில், ஒரே ஒரு உயிரணு மட்டுமே கடைசியில் கருமுட்டையைத் துளைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிடும். ஒரு உயிரணு வந்தவுடன் கருமுட்டை மூடிக்கொள்ளும். இன்னொரு உயிரணு உள்ளே வராமலிருக்கத்தான் இந்த ஏற்பாடு!

 

கருமுட்டையிலிருக்கும் 23 குரோமோசோம்களும், உயிரணுவில் இருக்கும் 23 குரோமோசோம்களும் சேர்ந்து (23 ஜோடி) 46 குரோமோசோம்களாகி உயிர் உருவாகும்.

 

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். ஒரே ஒரு உயிரணு மட்டும் கருமுட்டையை அடைந்து உயிர் உருவாகிறது எனும்போது… ஏன் இயற்கை லட்சக்கணக்கான உயிரணுக் களை விந்தில் உரு வாக்குகிறது?  நியாயமான கேள்விதான்.

 

மராத்தான் ஓட்டம்

மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஆரம்பிக்கும்போது சில நூறு பேர்கள் இருப்பார்கள். கடைசியில் பல மைல்களை கடந்து, இறுதியில் ஜெயிப்பது ஒரே ஒருவர் மட்டுமே. மராத்தான் ஓட்டத்தில் பல மைல்களைத் தொய்வின்றி, எந்தவிதமான தங்குதடையின்றி ஓடிச்சென்று கடக்க பலம் வேண்டும். அப்படிப்பட்ட சக்தி உடையவர்களை  சிலரிடமிருந்து கண்டுபிடிக்க முடியாது… இருக்க மாட்டார்கள். அதனால்தான் மராத்தானில் பலர் ஓடுகிறார்கள். அதுபோல உயிரணுவும் உள்ளே நீந்தி செல்ல மிகுந்த பலம் தேவை. இது வெகு சில உயிரணுவால் மட்டுமே சாத்தியம்.

 

அதனால்தான் பல லட்சம் உயிரணுக்களை இயற்கை படைத்திருக்கிறது. அது மட்டுமல்ல, கருமுட்டையைத் துளைத்துக் கொண்டு உயிரணு உள்ளே செல்கிறது என்றோமல்லவா… அப்போது, உயிரணுவின் உடல் பகுதி, வால் பகுதி ஆகியவை உள்ளே போகாது. கருமுட்டையை உயிர ணு துளைக்கும்போது, உயிரணுவின் தலைப்பகுதியில் இருக்கும் 23 குரோமோசோம்களை மட்டும் (நியூக்ளியஸ்) கரு முட்டைக்குள் செலுத்திவிட்டு, உயிரணுவில் வாலும் உடலும் இறந்து போய் திரும்பி விடும்.

 

உயிரணு கருமுட்டையை மோதும்போது, உயிரணுவின் தலைப் பகுதியில் “அக்ரோசின்” எனும் ரசாயனம் வெளிப்பட்டு கருமுட்டையின் சுவரை அரித்து சிறிய துளையை ஏற்படுத்தும். ஒரு பெண்ணைக் கர்ப்பமாக்கத் தேவையான அளவில் உயிரணுக்கள், ஆரோக்கியமான உயிரணுக்கள் ஓர் ஆணிடம் இருக்க வேண்டு ம்.

 

இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் “தனது விந்து கெட்டியாக இருக்கிறது” என எண்ணிக்கொண்டு திருமணம் செய்துவிட்டு பிறகு குழந்தையில்லை என வருத்தப்படுவார்கள். விந்து கெட்டியாக இருக்கிறதா இல்லையா என்னது முக்கியமல்ல. ஆரோக்கியமான உயிரணு அதில் உள்ளதா என்பதே முக்கியமானது.

 

உயிர் எப்படி வளர்கிறது?

பெண்ணின் கருமுட்டையுடன் விந்தின் உயிரணு இணைந்ததும் கரு உருவாகிறது. ஆரம்பத்தில் கருவுக்குள் ஒரே ஒரு செல்தான் இருக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் அந்த ஒரு செல், இரண்டு செல் ஆகிவிடும். அடுத்தடுத்து, அவை பன்மடங்காகப் பெருகி நான்காவது நாளில் பல ஆயிரம் செல்கள் சேர்ந்த ஒரு பந்து மாதிரி ஆகிவிடும். இந்தப் பந்துக்கு மாருலா (Morula) என்று பெயர். இந்த மாருலா, நான்காம் நாள் ஃபெலோப்பியன் டியூப்பிலிருந்து நகர்ந்து கர்ப்பப் பைக்குள் வந்துவிடும். ஏழாம் நாள் கர்ப்பப்பையில் உப்பிக் கொண்டிருக்கும் உள்சுவரான “எண்டோமெட்ரிய”த்தில் இந்த மாருலா அமர்ந்துவிடும். அங்கே படிப்படியாகப் பத்தாவது மாதம் வரை வளரும்.

 

அதன்பிறகு ஒரு புதிய உயிர் பூமிக்கு வந்து வெளிச்சத்தைத் தரிசிக்கும். இது இயற்கையாக, இயல்பாக எல்லோருக்கும் நடைபெறும் கருத்தரித்தலாகும்.

 

ஆனால், வெகு சில பெண்களுக்கு நான்காவது நாள் ஃபெலோப்பியன் டியூப்பிலிருந்து, மாருலா நகராமல் அதற்குள்ளேயே கருவாக வளரும். இதற்கு “எக்டோபிக் பிரகன ன்சி” (Ectopic pregnancy) என்று பெயர். இது தாயின் உயிருக்கே ஆபத்தாகி விடும் கர்ப்பம். ஏனெனில், கர்ப்பப்பைக்கு இருக்கிற விரிந்துகொடுக் கிற தன்மை, ஃபெலோப்பியன் டியூப்புக்கு இல்லை என்பதால் தான் இந்த ஆபத்து.

 

கரு எப்படி ஆணாகவோ பெண்ணாகவோ மாறுகிறது?

உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் இருக்கும். இதில் 22 ஜோடி குரோமோசோம்களின் வேலை பரம்பரை குணம், நிறம், நோய்க் கூறு போன்றவற்றை நிர்ணயிப்பது. எஞ்சியுள்ள ஒரு ஜோடி, அதாவது 23வது ஜோடிதான் பாலினத்தைத் தீர்மானிக்கும் குரோமோசோம் (Sex chromosomes). ஆணின் உயிரணுவில் உள்ள 23 குரோமோசோமில் 50 சதவிகித ம் “எக்ஸ்” குரோமோசோம்களாகவு ம், 50 சதவிகிதம் “ஒய்” குரோமோ சோம்களாகவும் இருக்கும். பெண் ணின் கருமுட்டையி ல் உள்ள 23 குரோமோசோமில் 100 சதவிகிதமும் “எக்ஸ்” குரோமோசோம்கள் மட்டுமே இருக்கும். ஆணின் உயிரணுவில் உள்ள “ஒய்” குரோமோசோம் பெண்ணின் கருமுட்டையில் உள் ள “எக்ஸ்” குரோமோசோமுடன் சேர்ந்தால் “எக்ஸ்ஒய்” ஆகி, ஆண் குழந்தை உருவாகும். உயிரணுவில் உள்ள “எக்ஸ் ” குரோமோசோம் பெண்ணின் கருமுட்டையில் உள்ள “x” குரோமோசோமுடன் சேர்ந்தால் “எக்ஸ் எக்ஸ்” ஆகி பெண் குழந்தை உருவாகும்.

 

விந்தணு குறைபாடு ஹோமியோபதி சிகிச்சை

அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.

 

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

பண்ருட்டி: 9443054168

புதுச்சேரி: 9865212055 (Camp)

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

 

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 28 – 99******00 – குழந்தையின்மை – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,

மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 

 

 

Feel Free to Contact us 
* indicates required field

Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India