கேள்வி: எனக்கு திருமணமாகி 8 வருடம் முடிந்துவிட்டது, இன்னும் குழந்தையில்லை இப்பொழுது எனக்கு 32 வயதாகிவிட்டது இனியும் வாய்ப்பு இருக்கிறதா?
- மருத்துவர் பதில்: எந்தவித கருத்தடை சாதனங்களையும் பயன்படுத்தாமல் ஒரு வருட தாம்பத்தியத்துக்கு பின்னும் கருத்தரிக்கவில்லை என்றால் கண்டிப்பாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 மாதத்துக்குள் கண்டிப்பாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
- பொதுவாக குழந்தையின்மைக்கு ஆண், பெண் இருவரில் ஒருவர் அல்லது இருவருக்குமே பிரச்னை இருக்க வாய்ப்பு உள்ளது. நல்லவேலைக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தால் காலம் தாழ்த்தி 30 வயதிற்கு மேல் திருமணம் செய்வது, கொஞ்சநாள் சந்தோஷமாக இருக்கலாம் என்ற காரணத்தால் குழந்தை பிறப்பை தள்ளிப்போடுவது, கருகலைப்பது போன்றவைகளும் குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
- ஆண்களுக்கான குறைபாடுகள் என்று எடுத்துக்கொண்டால் விந்தணுக்குறைபாடு முக்கிய காரனியாக உள்ளது. ஆணிடம் போதுமான அளவு உயிரணுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு அவை பெண்ணின் கருப்பைக்குள் கொண்டு சேர்க்கப்படவேண்டும்.
- அதன் வீரியத்தன்மையில் ஏற்படும் குறைபாடுகள், எண்ணிக்கை குறைவு காரணமாகவும், இத்தகைய பிரச்சனைகள் ஏற்படுகிறது.
- பெண்களுக்கு உள்ள குறைபாடுகள் என்று எடுத்துக்கொண்டால் கர்ப்பப்பை கோளாறு, சினைமுட்டை வளராமல் இருத்தல், நீர்க்கட்டி, சக்லேட் கட்டி, அடைப்பு, போன்றவை காரணமாக குழந்தையின்மை ஏற்படுகிறது.
- உங்கள் இருவரில் யருக்கு மேற்கண்ட பிரச்சனைகள் இருந்தாலும் சரி தம்பதிகளாக உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. முப்பது வயதுக்குள் குழந்தைப்பேறு ஏற்படாத தம்பதிக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. வயது ஆகியபின், மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளின் பலன் மிகவும் குறைவு. நீங்கள் தாமாதம் செய்யாமல் மருத்துவரை அணுகுங்கள்.
கேள்வி: நான் 28 வயதாகும் ஆண், எனக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லை இதற்கு என்ன காரணம்?
- மருத்துவர் பதில்: திருமணம் ஆகி இரண்டு, மூன்று ஆண்டுகளில் குழந்தைப்பேறு ஏற்படாத தம்பதிகள் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. குழந்தையின்மை பிரச்னை பரவலாக காணப்படுகிறது.
- இதற்கு பல காரணங்கள் உள்ளன, பொதுவாக குழந்தையின்மைக்கு ஆண், பெண் இருவரில் ஒருவர் அல்லது இருவருக்குமே பிரச்னை இருக்க வாய்ப்பு உள்ளது. ஆண்களுக்கு ஹார்மோன் குறைபாடு, நீண்டகால புகைப்பழக்கம், மதுப்பழக்கம் மற்றும் உடல்பருமன், ஆண்மைக்குறைவு பிரச்னைகள், உயிரணுக்கள் குறைந்தோ அல்லது இல்லாமலோ இருப்பது, அவற்றின் அசையும் திறன் குறைந்திருப்பது, உருவ அமைப்பு குறைபாடு, சர்க்கரை வியாதி மற்றும் மரபுரீதியான நோய்களால் ஏற்படும் குறைபாடுகள். உறுப்பில் குறைபாடு, உளவியல் காரணங்கள், மற்றும் நோய்த்தொற்று போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை உண்டாகும்.
- பெண்களுக்கும் இதுமாதிரி கருப்பை தொடர்பான பிரச்சனைகளாக இருக்கும்
- சர்க்கரை, ரத்தகொதிப்பு, தைராய்டு பிரச்னை போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு தடைபடலாம். சர்க்கரை, ரத்தகொதிப்பு, தைராய்டு பிரச்னை போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு தடைபடலாம்.
- ஆண்மைகுறைபாடு பற்றி பெரும்பாலான ஆண்கள் சரியாக புரிந்துகொள்வதில்லை. தன் மனைவியை திருப்திபடுத்தும் அளவுக்கு உறவுகொள்ள முடிந்தாலே குழந்தையின்மைக்கு தான் காரணம் இல்லை என்று எண்ணுகிறார்கள்.
- தாம்பத்தியமும் சரியாக இருக்கவேண்டும். இவை சரியாக இருந்தால் குழந்தை உருவாவதில் பிரச்னை ஏற்படாது.
- ஆனாலும் சிலருக்கு உறவின்போது வெளிப்படும் உயிரணுவில் குழந்தை கொடுக்கக்கூடிய அளவுக்கு தகுதியான அணுக்கள் இருக்காது. இந்த நிலைதான் ஆண்மை குறைபாடு எனப்படுகிறது.
- ஆண்மை பறிபோவதற்கு முக்கிய காரணமாக இன்றைய உணவு முறை. அதிலும் குறிப்பாக மதுப்பழக்கம் ஆண்மை பறி போவதற்கு காரணமாக இருக்கிறது. இதை புரிந்துகொண்டால் பலன் கிடைக்கும்.
- உங்கள் திருமண வாழ்வில் இது ஒரு பெரும் பிரச்சனையாக மாறி உங்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடலாம். தாமதிக்காமல் நீங்கள் இருவருமே மருத்துவரை அனுகி ஆலோசனை பெறுவது நல்லது.
கேள்வி: திருமணமான பெண் நான், எனக்கு தைராய்டு பிரச்சனை இருக்கிறது. இது குழந்தையின்மைக்கு காரணமாக இருக்குமா ?
- மருத்துவர் பதில்: இன்றைய தலைமுறையினர் குழந்தை இல்லாமல் நிறையபேர் சிரமப்படுகிறார்கள். குழந்தையின்மை குறைபாடு என்பது காலகாலமா இருந்து வருகிறது என்றாலும் கூட இந்த தலைமுறையினர் அதிகமாவே பாதிக்கப்பட்டுள்ளனர்.
- அதுக்கு நிறைய காரணம் உண்டு, அதில் ஒன்றுதான் இந்த தைராய்டு பிரச்சனை .இதனால், மணமாகி ஓரிரண்டு ஆண்டுக்குள் குழந்தை பிறக்காத பெண்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர்.
- வெளிநாட்டு கலாசாரத்திற்கு மக்கள் மாறி வருவதாலும், செயற்கை உணவு முறைகளை உட்கொள்வதாலும். உணவு கட்டுப்பாடு இல்லாமலிருப்பதாலும்,. உடற்பயிற்சி செய்யாமலிருப்பதாலும் உடல் ஆரோக்கியத்தை இழக்கிறது. அதனால் பெண்களுக்கு மாதம் தோறும் கருமுட்டை வெளியேறுவது தடைபடுகிறது. இதன் காரணமாக பெண்கள் கருத்தரிக்க முடிவதில்லை.
- நம் உடலில் நாளமில்லா சுரப்பிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. இவை நமது உடலில் ஹார்மோன்களை உற்பத்தி செய்து அதை உடலில் உள்ள செல்களுக்கு செலுத்தும், பின் அந்த செல்களை வேலை செய்ய வைப்பதே அவற்றின் பணி.
- நம் நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் தைராய்டு நோயினால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தைராய்டு சுரப்பி தொண்டை பகுதியில் இருக்கும். இது சுரக்கும் தைராக்ஸின் ஹார்மோன்தான் நமது உடலின் சமநிலையை மாறுபாட்டை சீராக வைத்திருக்கும்.
இந்த தைராய்டு சுரப்பியில் ஏதேனும் குறைபாடு இருந்தால் குறைவாக சுரக்கும். அல்லது அதிகமாக சுரக்கும். இதனால் உடல்நலம் பாதிக்கும். இது தவிர தைராய்டு சுரப்பினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபாடு குறைவாக இருப்பதாக அறிவியல் சொல்கிறது.
- மேலும் தைராக்ஸின் குறைந்தால் அதிகமான முடி உதிர்தல், உடல் எடை அதிகரிப்பு, முறையற்ற மாதவிடாய், அதிக ரத்த போக்கு, மலச்சிக்கல், உடல் வலி, தோலின் மென்மை தன்மை குறைவு,மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதன் காரணமாகவே உறவில் ஈடுபாடும் குறையும் .
குழந்தையின்மைக்கு தைராய்டு குறைவதும் ஒரு காரணம் என்பதால், பரிசோதனை செய்துகொள்வது அவசியம். அதேபோல் அதிகமாக தைராய்டு சுரந்தால் , மாதவிடாய் கோளாறுகள், எடை குறையும், தூக்கமின்மை, இதயத்துடிப்பு அதிகமாகும், கோபம், போன்றவைகள் வரும்.
- இப்பிரச்சனை இளம்பெண்களுக்கு அதிகமாக காணப்படுகிறது. இத்தகைய ஹார்மோன் குறைபாடுகளை திருமணத்திற்கு முன்பு சரி செய்துகொள்வதே நல்லது. இவர்களுக்கு திருமணம் ஆன பின்பு எடை அதிகமாகி மாதவிடாய் சரியாக வராமல் கூட போகிறது.
- எனவே நீங்கள் உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகிசிகிச்சை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
கேள்வி: எனது வயது 35, எனக்கு சுகர் கடந்த 9 மாதங்களாக இருக்கிறது. இதற்கும் குழந்தயின்மைக்கும் எதேனும் தொடர்பு உள்ளதா ?
- மருத்துவர் பதில்: திருமணமான தம்பதியர்களில் சிலர் இயற்கையில் கருத்தரிக்காமல் உள்ளனர். குழந்தையின்மை என்பது உறவுகள் இடையில் பெரிய பிரச்னையாக உள்ளது.
- சக்கரை வியாதி என்பது ஒரு கொடியநோய் அல்ல. சாதரணமாக இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு மன அழுத்தம் கூடும்போது சத்தமில்லாமல் இந்த நோய் இவர்களுக்கு வந்துவிடுகிறது.
- பெரும்பாலோருக்கு தங்களுக்கு சர்க்கரை வியாதி இருப்பதே தெரியாமல் உடம்பை பரிசோதனையும் செய்யாமல் அதைப்பற்றிய விழிப்புணர்வும் இல்லாமல் இந்த வியாதியால் அவதிப்பட்டு வாழ்ந்துக் கொண்டு வருகிறார்கள். கணையம் எனும் உடல்உறுப்பு இன்சுலின் எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது.
- இன்சுலின் போதுமான அளவு இல்லாதிருத்தலும். அளவுக்கு அதிகமாய் சுரந்து செயல்படாதிருத்தலும் சர்க்கரை வியாதிக்கு கரணமாகிறது. குழந்தயின்மைக்கும் இன்சுலினிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு,
- அதிக உடல் எடை உள்ளவர்களின் உடலில் அதிகம் சக்கரை இருப்பதாக பிட்யுட்டரி சுரப்பி கருதி அதிக இன்சுலினை சுரக்க ஆரம்பிக்கிறது அந்த விளைவாக நம் உடலில் மாற்றங்கள் நிகழும் .
- அதில் ஒன்றுதான் இந்த குழந்தையின்மை. ஏனெனில் கருவுரும் விந்தின் தரத்துக்கும், ரத்தத்தின் சர்க்கரை அளவுக்கும் நேரடித்தொடர்பு உண்டு. இதன் விளைவாக ஆணின் விந்தணுவின் அளவு குறைந்து குழந்தையின்மை உண்டாகிறது. அதிகப்படியான சர்க்கரை உள்ள நோயாளிகளின் விந்தில் குறையுள்ள கருமுட்டைகள் அதிகமாகின்றன.
- சர்க்கரை நோயுடன் உடல் பருமன், ஆண்குறியின் விரைப்புத்தன்மை குறைதல் மேலும் இதனால், ஆண் விதைகளில் உற்பத்தியாகும் உயிர் விந்தின் குறைபாடும் போன்ற காரணங்களால், சர்க்கரை நோயாளிகளின் பாலியல் உறவில் முழுமை அடைய முடியாமல், அவர்கள் குழந்தயின்மைக்குதள்ளப்படுகின்றனர்.
- ஆகவே நீங்கள் சக்கரை வியாதிக்கும், குழந்தையின்மைக்கும் காலம் தாழ்த்தாமல் டாக்டரை அணுகி சிகிச்சை பெற்று குணமடையுங்கள்.
மருத்துவ சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
infertility treatment, kulanthai illai, vinthu seekiram varuthu, low sperm count, azoospermia, oilgospermia, less semen count, குழந்தை இல்லை சிகிச்சை, விந்து சீக்கிரம் வருது, செமன் கவுண்ட் கம்மி, லோ செமன், விந்து என்னிக்கை குறைவு, விந்தனுவே இல்லை, வஜைனாவில் இருந்து விந்து வெளியே வந்து விடுகிறது, வெள்ளை படுது
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.