SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
செக்ஸ் உறவால் எடை கூடுமா? இதற்கு சிகிச்சை என்ன?
February 6th, 2014 by Dr.Senthil Kumar

 

weight measuring sex and weight gain treatment in vivekanantha homeopathy clinic velachery, chennai, panruti, pondicherry, 

 

கேள்வி: டாக்டர் அவர்களுக்கு வணக்கம், 24 வயதான திருமணமாகாத பெண் நான்.  எனது ஆண் நண்பருடன் தினமும் செக்ஸ் வைத்துக்கொள்கிறேன். செக்ஸ் வைத்துக்கொள்ள ஆரம்பித்ததிலிருந்து எனது எடை கூடிவிட்டது. செக்ஸ் உறவால் எடை கூடுமா? இதற்கு சிகிச்சை என்ன?

 

பதில்: ஒரு பெண் தொடர்ந்து செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டால், அவரது உடல் பெருத்து விடும், இடுப்புகள் பெருத்து விடும். மார்புகள் பெரிதாகி விடும் என்ற எண்ணம் பெண்களிடையே உள்ளது.

 

செக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படுவது மருத்துவரீதியாக உண்மையல்ல. 

 

அதேசமயத்தில், செக்ஸ் உறவை வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு மார்புகள், இடுப்புகள் பெருப்பது உண்மைதான். ஆனால் இதற்கும், செக்ஸ் உறவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை.

 

செக்ஸ் காரணமாக உடல் பருமன் ஏற்படுவதில்லை. செக்ஸ் உறவின்போது ஏற்படும் திருப்தி, அதனால் ஏற்படும் உடல் இன்பம், மனரீதியான மகிழ்ச்சி, உடலின் தேவையை பூர்த்தி செய்த மனப்பான்மை, போன்ற உடல் மற்றும் மன ரீதியான மாற்றத்தால் உடல் பெருக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

 

அதேபோல கல்யாணத்திற்குப் பின்னர் ஆண்களும், பெண்களும் குண்டாகி விடுகிறார்கள். இப்படிக் குண்டாவதற்கும், செக்ஸ் உறவுக்கும் கூட சம்பந்தம் இல்லை.

 

தனி நபராக இருப்பவர்களை விட திருமணம் செய்து கொண்டவர்கள், மற்றும் செக்ஸ் உறவில் ஈடுபடுபவர்கள் கூடுதலாக சாப்பிடுவார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே உடல் பெருக்கத்திற்கு இதுவும் கூட ஒரு காரணமாக அமைகிறது.

 

செக்ஸ் உறவைத் தொடங்கிய பிறகும் திருமணத்திற்குப் பிறகும், உடல் பருமன் அதிகரிக்கக் கூடாது என விரும்பினால், நிச்சயம் அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சிகளையும், உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தாக வேண்டும். அப்போதுதான் பருமனாவதைக் குறைக்க முடியும்.

 

அப்படியும் உடல் பருமனை குறைக்க முடியவில்லை என்றால் வேறு சில காரணங்கள் இருக்கலாம். எனவே தயக்கமின்றி மருத்துவரை அனுகி ஆலோசனை பெற்று சிகிச்சை மேற்கொள்ளவும்.

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை: 9786901830

புதுச்சேரி: 9865212055

பண்ருட்டி: 9443054168

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

 

 

Get Appointment

==–==

Feel Free to Contact us 
* indicates required field

 

daily sex put you weight, sex with boy friend, sex with neighbor, sex with colleague, intercourse with male,   


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India