Psoriasis – சொரியாசிஸ்
சொரியாசிஸ் – Psoriasis என்றால் என்ன ?
சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம்.
சொரியாசிஸ் தோலில் உள்ள செல்கள் வேகமாக இறப்பதன் மூலம் உண்டாகிறது. இதன் விளைவாக தோல் தடித்து மீன் செதில் போன்று இறந்த செல்கள் உதிரும், புரையோடும்.
தோலிலுள்ள பல சிறு இரத்த நாளங்கள் வீங்கிவிடுவதால் தோல் சிவப்பு நிறமாகக் காணப்படும்.
சொரியாசிஸ் எவ்வாறு தோற்றமளிக்கும்?
- சொரியாசிஸ் என்பது தோலில், மீன் செதில் போன்று இறந்த செல்கள் உதிர்ந்து விழும் புரையுடன் கூடிய வெண்மை / சிவப்பு திட்டுகளாக (Silver Scaly patches) காணப்படும்.
- உடலின் எந்தப்பாகத்தில் வேண்டுமானாலும் வரலாம்.
- முழங்கை, முழுங்கால் மூட்டு, முதுகு, தலையுச்சி முதலிய பாகங்கள் பொதுவாக பாதிக்கப்படும்.
சொரியாசிஸ் தொற்று நோயா?
- சொரியாசிஸ் தொற்று நோயல்ல. இது மற்றவர்களுக்கு பரவாது
- சுகாதார குறைவு காரணமாக இது ஏற்படாது.
சொரியாசிஸ் வர காரணம் என்ன ?
- சொரியாசிஸ் மரபு காரணம் மற்றும் சுற்றுச் சூழல் நிலை இவற்றின் பாதிப்பினால் ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது.
- சொரியாசிஸால் பாதிக்கப்படுபவர்களில் 25% பேர் சொரியாசிஸ் நோயுடைய குடும்பத்திலிருந்து வந்தவர்களே, சிலருக்கு மரபு நிலை காரணமாகிறது.
- உடல், மன அழுத்தங்கள், குரல்வளை தொற்று, ப்ளூ, ஸ்டீராய்ட் ஹார்மோன்ஸ், சில ஆண்ட்டி ஹைபர் டென்சிவ் போன்ற சில மருந்துகள், சோரியாசிஸை மேலும் மோசமாக்கும்.
- குடிபழக்கம், புகைபிடித்தல் சொரியாசிஸை மோசமாக்கும்.
சொரியாசிஸ் நோயின் விளைவுகள்
- சொரியாசிஸ் நோயாளிகளுக்கு மூட்டுவலிகளும், வீக்கமும் வரலாம்.
- சொரியாசிஸ் விரல்களையும், கால்விரல் நகங்களையும் தாக்கி, சிறு குழிகளையும், கருமை நிறத்தையும், நகங்கள் தடிப்பையும், ஏற்படுத்தும். நகம் உடையலாம்.
சொரியாசிஸ் யாருக்கு வரும் ?
- சொரியாசிஸ் ஆண், பெண் இருவரையும் சமமாகத் தாக்கலாம்.
- சொரியாசிஸ் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். வழக்கமாக 20 வது வயதில் தாக்கத் தொடங்கும். பிறப்பிலிருந்தும் முதிய வயதிலும் கூட இது வரலாம்.
- ஒரு முறை சொரியாசிஸ் வந்ததும், குறைதல், தணிதல், அதிகரித்தல் என பல்வேறு நிலை மாற்றங்கள் ஏற்படும்.
சொரியாசிஸ்க்கு என்ன மருத்துவங்கள் உள்ளன.
நவீன மருத்துவத்தில் பல மருந்துகள் உபயோகப்படுத்தப்படுகின்றன, டாபிகல் ஸ்டீராய்ட்ஸ்
மேற்பூச்சுக்கள் (Steroids creams), போட்டோதெரபி, அல்ட்ரா வைலட்,
மெதாட்டுரக்ஸாட் (methotrexate) இத்தகைய மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே நோயாளிகள் இந்தப் பக்க விளைவுகளைப் பரிசோதித்துக் கொள்ள அடிக்கடி இரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் தொடர்ந்து இந்த மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.
சொரியாசிஸ் நோயாளிகள் செய்யக்கூடாதவை, செய்ய வேண்டியவை
- தோலைச் சொரியாதீர்கள் ஏனெனில் இது குணமாவதைத் தாமதப்படுத்தும்.
- ஹோமியோபதி மருந்துகள் வேலை செய்து விளைவுகள் காட்ட பல வாரங்கள் ஆகுமாதலால் மருத்துவத்தை விரைவில், இடையில் நிறுத்திவிடாதீர்கள்.
- சொரியாசிஸைக் கட்டுப்படுத்த தரப்பட்ட மருந்துகளையும், மருத்துவத்தையும் திடீரென்று நிறுத்திவிடாதீர்கள். இதனால் நோய் இன்னும் மோசமாகும்.
- மருந்துகளை தொடர்ந்து சீராக எடுத்துக்கொள்ளுங்கள்.
- தோலை எப்போதும் ஈரத்தன்மையுடையதாக வைத்திருங்கள். அது நமைச்சலையும், அரிப்பையும், புரை ஏற்படுவதையும் தடுக்கும்.
- சூரிய ஒளியில் இருப்பது பொதுவாக நல்லதே, ஆனால் அதிகமாக வெகு நேரம் இருப்பதால் வேர்க்குருக்கள் உண்டாகும். அதனால் சொரியாசிஸ் தீவிரமடையும்.
- மன அழுத்தம் சொரியாசிஸை அதிகப்படுத்தும். அமைதியாக இருக்கவும், உடற்பயிற்சி செய்யவும், ஒய்வு எடுத்துக்கொள்ளவும்,
சோரியாஸிஸ் ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை,
நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவசிகிச்சை நோயின் தன்மையை நன்கு கட்டுப்படுத்தி விரைவில் நல்ல பலனளிக்கும். தொடர்ந்து ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்வதன் மூலம் நல்ல பலன்பெறலாம்.
ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:– 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 28 – 99******00 – சோரியாசிஸ் Psoriasis – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==–==
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.