SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
சொரி, சிரங்கு, அரிப்பு, படை, தோல் நோய்கள் சிகிச்சை, வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு – Itching, Skin Diseases, Skin Allergy, Scabies, Treatment, Velachery, Chennai, Tamil nadu
June 26th, 2015 by Dr.Senthil Kumar

சொறி Itching - சிரங்கு - ஸ்காபீஸ் Scabies, scabies skin diseases treatment clinic in velachery, chennai tamil nadu, india

 

சொறி  Itching –  சிரங்கு  – ஸ்காபீஸ் Scabies

 

சிரங்கு  என்றால் என்ன? What is Scabies

சிரங்கு நோயானது சார்கோபீஸ் எனும் ஒட்டுண்ணியால் வரும் நோய் ஆகும்.இந்த ஒட்டுண்ணியானது 0.3 மி.மீட்டர் நீளம் கொண்டது.பெண் ஒட்டுண்ணிகள் தோலுக்கு அடியில் சென்ற 2 முதல் 3 மணி நேரத்திற்குள் 2 அல்லது 3 முட்டையிடும்.இந்த முட்டைகள் 10 நாட்களுக்குள் ஒட்டுண்ணியாக மாறிவிடும்.இந்த ஒட்டுண்ணிகளால் உடலில் அரிப்பு ஏற்படும்.தொற்றும் உருவாகும்.

 

 

ஸ்காபீஸ் Scabies  Infection தொற்று

  • இது நபருக்கு நபர் தொற்றை பரவச்செய்ய கூடியது ஆகும்.
  • நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் இரவில் உறங்கும், போது இந்த தொற்று ஏற்பட்டவர்களின் ஆடைகள்,படுக்கை விரிப்புகள் மூலம் மற்றவர்களுக்கும் பரவும்.
  • கைக்குலுக்குதல், கைகளைபிடித்தல் போன்ற செயல்களாலும் சிரங்கு பரவும்.
  • பெண் ஒட்டுண்ணிகள் ஈன்ற முட்டைகள் 10 நாட்களில் வளர்ச்சி அடைந்து சிரங்குகளில் அரிப்பு ஏற்படும்.
  • இந்த ஒட்டுண்ணிகள் தாக்கம் பரவலாக இருக்கும்.இதற்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், நீண்ட காலம் மிகவும் சிரமப்படும் வாய்ப்பு உருவாகி விடும்.
  • உடுத்தும்,உடுத்திய ஆடைகள், படுக்கை விரிப்புகளில் தொற்று நிலைத்து தங்கி இருக்கும்.
  • சிகிச்சைக்கு பிறகு நோயாளி அறியாமல் அதே நோயுள்ள ஒருவரை சந்திக்க வேண்டிய நிலையில் மீண்டும் எளிதாக சிரங்கு தொற்று ஏற்பட்டு விடும்.

 

 

ஸ்காபீஸ் Scabies  Symptoms அறிகுறிகள்

  • தோலில் சிரங்கு,ஒட்டுண்ணி தொற்றியவுடன் அரிப்பு ஏற்படும். முடிச்சுகள் போன்று சிவப்பு நிறத்தில் கொப்புளங்கள் ஏற்படும்.
  • தொடர்ந்து அரிப்பு இருக்கும்.
  • இரவில் மோசமான நிலையில் அரிப்பு அதிகம் இருக்கும்.
  • தோலில் தடிப்புகள்,செதில்கள் உருவாகும்.
  • விரல்கள் தடித்து வீங்கி இருக்கும்.
  • விரல்களின் சந்து,மேல்புற விரல்கள்,கால் விரல்கள்,இடுப்புகள், அக்குள், முழங்கைகள்,முழங்கால்கள் மனிக்கட்டு, தொப்புள், மார்பகங்கள், பிட்டத்தின் கீழ் பகுதி,எப்போதாவது ஆண்குறி மற்றும் விதைப்பைகளிலும், இடுப்பு மற்றும் வயிறு, உள்ளங்கைகள், கழுத்தின் மேல்பகுதி ஆகியஇடங்களில் ஒட்டுண்னிகளின் தொற்று ஏற்பட்டு சிரங்கு உண்டாகும்.
  • மே 2002, நோய் தடுப்பு அமைப்பானது புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதளில் சொறிநோயை பால்வினை நோயின் வரிசையில் சேர்த்துள்ளனர்.
  • பிறாண்டுவதினால் சில சமயம் பூச்சிகள் நீக்கப்படுகின்றன. அதிகப்படியாக 15 தொற்று கிருமிகள் ஒன்று சேர்ந்தால் தான் தொற்று ஏற்படுகிறது.
  • ஆயிரம் முதல் லட்சம் ஒட்டுண்ணிகள் வரை தொற்று ஏற்ப்படுவது ஒருவர் பிறாண்டாமல் இருப்பதினாலோ அல்லது நோய்எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதனாலோ இருக்கலாம்.இந்த நோயாளிகள் மனநிலை சரியில்லாதவர்களாக இருக்கலாம். உடல்பலவீனமானவர்களாக இருக்கலாம். வெள்ளைப்படுதல் ,அல்லது நீரிழிவு போன்ற பிற நோய்கள் இருக்கலாம்.
  • நோய்எதிர்ப்பு சக்தியினை குறைக்கக்கூடிய மருந்துகளை எடுப்பவராக இருக்கலாம். அல்லது எய்ட்ஸ் போன்ற நோய்எதிர்ப்பு சக்தியை குறைக்கக்கூடிய நோயாளியாக இருக்கலாம்.

 

 

நோய் கண்டறிதல்ஸ்காபீஸ் Scabies Diagnosis

  • சிரங்கு உருவாக்கும் பூச்சியினை அது தோலில் உறுவாக்கிய அடையாளங்களை வைத்தும் கண்டறியலாம். கிருமிஅழிக்கப்பட்ட ஊசிகள் மூலம் சிரங்குகளின் சிறிய பகுதியினை மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்து தொற்று உள்ளதா/இல்லையா என அறிய முடியும்.
  • எப்பொதாவது நாய்களின் மேல் உள்ள பூச்சிகளின் மூலம் இத்தொற்று மனிதனுக்கு பரவலாம்.
  • மனித உடலில் நீண்ட காலம் தாங்கி இருக்க முடியாது.
  • தாக்க கூடிய காலம் சிறிது காலமாகவே இருக்கும்.
  • இதன் தொற்றும் குறைவாகவே கானப்படும்.

 

 

ஸ்காபீஸ் Scabies Treatment சிகிச்சை

பல வகையான கிரீம்கள்(பொதுவாக 5 % பெர்மத்தெரின் கொண்டது) உடலில் பூசி 12 to 24 மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.இதன் பின்னும் பூச்சிகள் இருந்தால் ஒருவாரம் கழித்து அரிப்புக்கான குழம்பினை பயன்படுத்த அரிப்பு குறையும்.

 

 

ஸ்காபீஸ் Scabies Prevention தடுப்பு

  • நல்ல சுகாதாரமான நிலையை கடைபிடித்தாலே சிரங்கு ,சிரங்கை தடுத்து விட முடியும்.
  • தினசரி வெந்நீரில் அலசப்பட்ட துணிகளையே பயன்படுத்த வேண்டும்.
  • பிற நபர்கள் பயன்படுத்திய துணிகளை பயன்படுத்தக்கூடாது.
  • குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் சிரங்கு சிரங்கை பரிசோதனையும்,சிகிச்சையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • அனைத்து நபர்களின் உடைகள்,படுக்கை விரிப்புகள் ஆகியவற்றினை சூடான வென்னீரில் துவைத்து,நல்ல சூரிய ஒளியில் காய வைத்து பின் பயன்படுத்தல் வேண்டும்.

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

பண்ருட்டி:- 9443054168

புதுச்சேரி:- 9865212055 (Camp)

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

 

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, thol noi, arippu, itching, Skin problem,   – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,

மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 

 

Feel Free to Contact us 
* indicates required field

Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India