
டான்சிலைட்டிஸ் ஹோமியோபதி மருத்துவம் – அறுவை சிகிச்சையிலிருந்து விடுதலை.
டான்சில் என்பது ஒரு தேவையற்ற உறுப்பு அல்ல . அது நமது உடலில் நோயை எதிர்க்கும் ஒரு நின நீர் சுரப்பி ஆகும் . டான்சில் நமது உடலில் கிருமிகளை நுழைய விடாமல் தடுக்கிறது (Tonsils acts like a Police men of Body).
டான்சில் என்பது தொண்டையில் இரு பக்கங்களிலும் உள்ள இரு உருண்டையான திசு தொகுப்பு ஆகும் . இதை நோய்க்கிருமி தாக்குவதால் வரும் வீக்கமே டான்சிலைட்டிஸ் – Tonsillitis எனப்படுகிறது .
டான்சிலைட்டிஸ் வர காரணங்கள் – Tonsillitis Causes :
நீர் , உணவு , காற்று மூலம் வரும் பாக்டீரியா, வைரஸ் முதலிய நுண் உயிரிகள் டான்ஸிலை தாக்குவதால் வீக்கம் ஏற்படுகிறது .
அறிகுறிகள் :
- அடிக்கடி வரும் ஜுரம் – Frequent attack of fever
- அடிக்கடி சளி பிடித்தல் – Frequent attack of cold, cough,
- தொண்டையில் வலி, வீக்கம் Pain and swelling in throat
- காது வலி , Ear Pain,
- வாய் துர் நாற்றம் – Bad breath,
- விழுங்குவதில் சிரமம் – Difficult to swallowing
- குரலில் ஒரு கரகரப்பு – Harshness of voice
- கழுத்தில் நெறி கட்டி – Lymphadenitis
- வயிறு வலி – Abdominal and Stomach pain
மருத்துவம் :
- ஆங்கில மருத்துவத்தில் ஆண்டிபயாட்டிக்ஸ் –Antibiotics எனப்படும் பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகள் தற்காலிக பயனளிக்கும் ஆனால் ஆண்டிபயாட்டிக்ஸ் மருந்துகளை தொடர்ந்து உட்கொள்வதால் பின்விளைவும் பக்க விளைவுகளும் ஏற்படலாம்.
- இருப்பினும் ஆங்கில மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை படி மட்டுமே சாப்பிட வேண்டும்
- அறுவை சிகிச்சையை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது . சுத்தமான நீர் , உணவு அருந்தவேண்டும் .
- திரவ உணவுகள் மட்டும் தரவேண்டும்
- வெது வெதுப்பான உணவுகள் தேரவேண்டும் , சூடான & குளிர்ச்சியான பொருள்கள் தரகூடாது
- வெந்நீரில் உப்பு போட்டு வாய் கொப்புளிக்க வேண்டும்
அறுவை சிகிச்சை தேவையா ?
- ஒரு வருடத்திற்குள் எட்டு முறைக்கு மேல் டான்சில் வீங்கி ஜுரம் வந்தாலோ,
- Quinsy எனப்படும் டான்சில்ஸ் சீழ் கட்டி வந்தாலோ,
- அடிக்கடி காதில் சீழ் வடிந்தாலோ,
- Retension cyst எனப்படும் கட்டி வந்தாலோ
அறுவை சிகிச்சை செய்வது பற்றி ஆலோசிக்கலாம்.
அறுவை சிகிச்சையை கடைசி வாய்ப்பாக செய்யவேண்டும் , ஏனெனில் டான்ஸில்ஸ் என்பது அப்பெண்டிக்ஸ் போல ஒரு தேவை அற்ற உறுப்பு அல்ல . மாறாக குழந்தையின் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஒன்று .
டான்சிலைட்டிஸ் ஹோமியோபதி மருத்துவம்
ஆரம்ப மற்றும் நாட்பட்ட டான்சிலைட்டிஸ் பிரச்சனைக்கு ஹோமியோபதி மருத்துவம் ஒரு நல்ல தீர்வு. அறிகுறிகளுக்கேற்ப நோய் எதிர்ப்புத்தண்மையை அதிகப்படுத்தும் ஹோமியோபதி மருந்துகளை அனுபவம் வாய்ந்த ஹோமியோபதி மருத்துவரின் ஆலோசனை பேரில் உட்கொண்டால் டான்சில்ஸ் பிரச்சனையிலிருந்து அறுவை சிகிச்சையின்றி விடுபடலாம்.
டான்ஸிலைட்டிஸ் ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் ஆரம்ப மற்றும் நாட்பட்ட டான்சிலைட்டிஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு:உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 12 – 99******00 – Tonsillitis – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

==–==
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.