கேள்வி: 6 மாதங்களுக்கு முன்பு எனக்கு திருமணமானது, தினமும் செக்ஸ் வைத்துக்கொள்கிறோம். முன்பு இருந்ததை விட இப்போது 6 மாதத்தில் 8 கிலோ கூடி விட்டேன். தாம்பத்ய உறவில் தொடர்ந்து ஈடுபட்டால், உடல் பெருத்து விடுமா? செக்ஸை குறைத்துக்கொள்ளலாமா?
மருத்துவர் பதில்:
- செக்ஸ் உறவை ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு மார்புகள், இடுப்புகள், பின்பகுதி பெருப்பது உண்மைதான். ஆனால் இதற்கும், உறவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை.
- பாலுணர்வை தூண்டும் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிப்பதனால்தான் உடல் பெருக்கிறது என்கிறது ஒரு ஆராய்ச்சி.
- திருமணத்திற்கு பின்னர் ஆண்களும், பெண்களும் குண்டாகி விடுகிறார்கள். இப்படிக் குண்டாவதற்கும், செக்ஸ் உறவுக்கும் அதிக சம்பந்தம் இல்லை.
- தனியாக இருப்பவர்களை விட திருமணம் செய்து கொண்டவர்கள் மற்றும் செக்ஸ் உறவில் ஈடுபடுபவர்கள் கூடுதலாக உணவு உட்கொள்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே உடல் பெருக்கத்திற்கு இதுவும் கூட ஒரு காரணமாக அமையலாம்.
- தாம்பத்ய உறவு காரணமாக உடல் பெருக்கம் ஏற்படுவதில்லை. உறவின்போது ஏற்படும் திருப்தி, அதனால் ஏற்படும் உடல் பூரிப்பு, மன ரீதியான நிம்மதி, போன்றவைகள் உடல் பருமனாவதற்கு காரணமாக இருக்கலாம்.
- திருமணத்திற்கு முன் கடைப்பிடித்து வந்த உணவு, உடற்பயிற்சிக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை தளரும்போது இப்படி உடல் பெருக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
- திருமணத்திற்குப் பிறகும், தாம்பத்ய உறவைத் தொடங்கிய பிறகும் உடல் பருமன் அதிகரிக்கக் கூடாது என விரும்பினால், நிச்சயம் அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சிகளையும், உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தாக வேண்டும். அப்போதுதான் பருமனாவதைக் குறைக்க முடியும்.
- தேவையான அளவு செக்ஸ், தேவையான அளவு உடற்பயிற்சி, தேவையான அளவு சத்தான உணவு, இப்படி அனைத்தும் தேவையான அளவு மட்டும் இருந்தால் அனைத்தும் திருப்தியாக இருக்கும்.
குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.