கேள்வி: தினமும் செக்ஸ் வைத்துக் கொண்டால் இருவரின் உடலுக்கும் பாதிப்பு வரும் என்று சொல்கிறான் என் நண்பன். இது உண்மையா டாக்டர்?
மருத்துவர் பதில்: தினசரி செக்ஸ் மனதுக்கும், உடலுக்கும் நல்லது. இதனால் எந்த பாதிப்பும் வராது. ஆனால் உங்களின் துணையை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ளக்கூடாது. இருவரின் சம்மதமும் ஒத்துழைப்பும் மிக முக்கியம். ஒருவருக்கு அசவுகர்யம் ஏற்பட்டால் கூட தினசரி செக்ஸிற்கு கட்டாயப்படுத்தக்கூடாது.
கீழ்கண்ட தகவல்களை ஒரு ஆய்வு தெரிவிக்கிறது
செக்ஸ், மனதை இதமாக்கும், பல நோய்களைக் குணமாக்கும் என்கிறார்கள் ஆய்வுப்பூர்வமாக. தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் ஏற்படும் பலாபலன்கள் குறித்த ஒரு பார்வை
- செக்ஸ் கிட்டத்தட்ட ஒரு உடற்பயிற்சி போலத்தான்.
- உடல் உறுப்புகளின் தொடர் இயக்கத்திற்கு தினசரி செக்ஸ் வழி வகுக்கிறதாம். உடலுறவின்போது நமது உடலில் கணிசமான அளவுக்கு கலோரிகள் குறைகிறதாம்.
- ஒரு வாரத்திற்கு மூன்று முறை செக்ஸ் வைத்துக் கொண்டால் உங்களது உடலிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 7.500 கலோரிகள் குறையுமாம். இது 75 மைல் தூரம் ஜாகிங் போவதற்குச் சமமாம்!.
- அதிக அளவில் மூச்சு இறைப்பது, நமது செல்களில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கிறதாம். அதேபோல செக்ஸின்போது உற்பத்தியாகும் டெஸ்டோஸ்டிரான் மூலம், நமது எலும்புகளும், தசைகளும் வலுவாகிறதாம்.
- அதேபோல செக்ஸ் ஒரு நல்ல வலி நிவாரணி, செக்ஸ் உறவின்போது ஆண்களுக்கும், பெண்களுக்கும், உடலில் என்டோர்பின் எனப்படும் ஹார்மோன் உற்பத்தியாகிறது. இது அருமையான வலி நிவாரணியாகும் என்கிறார்கள் டாக்டர்கள். ஆர்கசம் சமயத்தில், பெண்களுக்கு வலி தெரியாமல் இருக்க இந்த என்டோர்பின்தான் உபயோகப்படுகிறதாம். மேலும், இது கர்ப்பப்பை உள்ளிட்டவற்றை நல்ல நிலையில் வைத்திருக்கவும் உதவுகிறதாம். அதேபோல, பெண்களிடம் மலட்டுத்தனம் ஏற்படாமல் தடுக்கவும் இது ஓரளவு உதவுகிறதாம். மெனோபாஸ் தள்ளிப் போகவும் கை கொடுக்கிறதாம்.
- விந்தனுக்கள் உற்பத்தியாகும்போது அதை உரிய முறையில் வெளிப்படுத்துவதே விந்தனுப் பைகளுக்கு நல்லதாம். இல்லாவிட்டால் தேவையில்லாமல் உள்ளேயே தேங்கி பை வீங்கி விடும் வாய்ப்புள்ளதாம். இதன் மூலம் பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழி ஏற்பட்டு விடுமாம்.
- தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வதன் மூலம் விதைப் பைகள் சீரான நிலையில் இருக்குமாம், விந்தனுக்கள் தேங்கிப் போகாமல் பார்த்துக் கொள்ளலாம். இதனால் உடல் நலன் மேம்படுமாம்.
- இன்றைய காலகட்டத்தில் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் பாதிப்பேருக்கும் மேல் சரியான முறையில் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. அதாவது ஆணுறுப்பு எழுச்சியின்மை ஏற்படுகிறது. இதைத் தடுக்க ஒரே வழி தினசரி செக்ஸ்தானாம்.
- தினசரி முறைப்படி செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஆண்களுக்கு ஆணுறுப்பு எழுச்சியின்மை பிரச்சினை வருவது குறைகிறதாம். தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வதால் ஆணுறுப்புக்கு ரத்தம் போவது தடையில்லாமல் தொடர்ந்து நிகழ்கிறதாம்.
- டாக்டர்கள் எழுச்சி அல்லது எரக்சன் என்பதை ஒரு தடகள விளையாட்டுக்கு சமமாக கூறுகிறார்கள். தடகள வீரர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க காரணம், அவர்களின் உடல் உறுப்புகள் அனைத்துக்கும் ரத்த ஓட்டம் சீரான முறையில் இருப்பதே.
- அதேபோல ஆணுறுப்புக்கு சீரான முறையில் ரத்தம் போய்க் கொண்டிருந்தால், நிச்சயம் ஆணுறுப்பு எழுச்சியின்மை பிரச்சினையே வராது. அதற்கு உதவுவது தினசரி செக்ஸ் என்கிறார்கள் டாக்டர்கள்.
- தினசரி செக்ஸ் மூலம் மன ரீதியாகவும் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். பதட்டம் குறையும். செக்ஸின்போது நமது உடலில் டோபமைன் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது பதட்டத்தைக் குறைக்க உதவும் ஹார்மோனாகும். இதற்கு மகிழ்ச்சியூட்டும் ஹார்மோன் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இதேபோல, ஆக்சிடைசின் என்ற இன்னொரு ஹார்மோனும் சுரக்கிறதாம்.
இப்படி பல்வேறு பலன்கள், லாபங்கள் செக்ஸ் உறவின்போது கிடைப்பதால் தினசரி செக்ஸ், நமது உடலுக்கு மிக மிக நல்லது என்கிறது அந்த ஆய்வு.
ஆண்மைக்குறைவு, விந்து முந்துதல் சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற ஆண்மைக்குறைவு, விந்து முந்துதல் பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:– 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.