திருநங்கைகள் – அலிகள் – இருபாலினத்தவர்கள் – யார் இவர்கள்?
”இவர்கள்” அடிக்கடி நம் கண்ணில் படுகிறார்கள். அனைத்து இடங்களிலும் இவர்கள் இருக்கிறார்கள். இவர்களை சிலர் கேலியும், கிண்டலும் செய்கிறார்கள். பதிலுக்கு இவர்களும் நம்மை கிண்டலும், கேலியும் செய்கிறார்கள். . ‘இவர்கள்’ என்பவர்கள் யார் ?
நம்முடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும், சகமனிதர்கள்தான் ‘இவர்கள்’ .
அலிகள். ஆணா, பெண்ணா, என்ற கேள்விக்கு, இவர்கள் ஆணுமற்ற, பெண்ணுமற்றவர்கள் என்பது சரியாக இருக்கும்.
எப்படி ‘இவர்கள்’ பிறக்கிறார்கள்
- நம் உடலின் அடிப்படையும், ஆதாரமும் செல்கள்தான். செல்களின் கூட்டத்தை திசுக்கள் என்கிறோம்.
- இந்த செல்லுக்குள்தான் குரோமோசோம்களும் மரபு அணுக்களும் இருக்கின்றன.
- ஒருவரின் தனிப்பட்ட திறமைக்கு, பாட, ஆட, நடிக்க, ஓட, எழுத, காதலிக்க, காதல் வயப்பட்ட என்று அனைத்திற்கும் காரணம் குரோசோம்களும், மரபு அணுக்களும் (ஜீன் – Gene) தான்.
- உயிரை இயங்கச் செய்யும் பல்வேறு காரணிகள் உள்ளடக்கியதுதான் இந்த செல் என்னும் இயற்கையின், அற்புத படைப்பு.
- கரு உருவாதல்: பெண்ணின் மாதவிடாய் சுழற்சியில் குறிப்பிட்ட சில நாட்களில் ஆணின் உயிரணுவுக்காக அண்ட அணு (கருமுட்டை) காத்திருக்கும். அந்த நாட்களில் உறவு கொள்ளும்போது விந்தணுவும், அண்டஅணுவும் இணைந்து கருத்தரிக்கிறது. அந்த கரு வளர்ந்து குழந்தையாகிறது. கரு ‘உரு’வாதலின் ரகசியம்.
- குரோசோம்கள்: ஆண் உயிரணுவில் 23 குரோசோம்களும், பெண்கருமுட்டையில் 23 குரோசோம்களும் சேர்ந்துதான் 23 ஜோடி குரோசோம்களாகின்றன. வயிற்றில் இருக்கும் கரு, ஆணா, (அ) பெண்ணா என்று நிர்ணயிப்பதற்கு ஒரு ஜோடி குரோசோம் இருக்கிறது. இதற்கு ‘செக்ஸ் குரோசோம்’ என்று பெயர்.
- கருவின் செக்ஸ் குரோசோம் XY என்றால் அது ஆணாகவும், XX என்றால் அது பெண்ணாகவும் பிறக்கும். இவை முறையாக இணைந்தால் எந்தவித பிரச்சனையும் இல்லை. இந்த மகத்தான பணியில் மிகவும் அரிதாக தவறுகள் ஏற்படும்.
- இயற்கை ஏற்படுத்திய இந்த தவறால் பிறந்தவர்கள்தான் ‘அவர்கள்’ இந்த தவறுதலுக்கு மருத்துவம் தந்த பெயர் ‘மியூட்டேஷன்’ (Mutation).
- இதனால் XX ஆகவும் இல்லாமல், XY ஆகவும் இல்லாமல், XXY அல்லது XYY போன்ற தவறான ஜோடிகளாக அமைந்து விடுகின்றது.
ஒரு உடலில் இரு இனப்பெருக்க உறுப்பு:
- ஒரு சில குழந்தைகளுக்கு ஆணின் உட்பாலுறுப்பும், பெண்ணின் உட்பாலுறுப்பும், ஆக ஒரு உடலிலேயே இருபாலின், உறுப்புகள் இருக்கும். இப்படிப்பட்ட பிறவிகளுக்கு ட்ரூ ஹெர்மாபோரோடைட்டுகள் – True Hermaphorodite என்று பெயர். ஆனால் இப்படி பிறப்பது அரிது.
உள்ளே வேறு, வெளியே ஒன்று
- ஒரு சில சமயங்களில் பெண்ணுக்கு உண்டான XX குரோசோம்களில் ஒரு குறையும் இருக்காது. ஆனால் சில ஹார்மோன்கள் குறைபாடுகளை உண்டாக்குகின்றன. அதாவது ஹார்மோன்கள் ஏற்படுத்தும் குறைபாடுகளால், அந்த நபருக்கு பெண்ணுக்குறிய உட்பாலுறுப்பும், ஆணுக்குரிய வெளிப்பாலுறுப்பும் அமைந்து விடுவது உண்டு.
- இந்த குறை ஆணுக்கும், பெண்ணுக்கும் அதாவது இருவருக்கும் ஏற்படலாம். ஆணுக்கு ஏற்பட்டால் Male Pseudo Hermaphroditism என்றும் பெண்ணுக்கு ஏற்பட்டால் Female Pseudo Hermaphroditism என்றும் அழைக்கிறார்கள்.
- மேலே விளக்கிய இரு வகையை சேர்ந்தவர்களே, அலிகள் என்று அழைக்கப்படும் திருநங்கைகள். பத்து லட்சத்தில் ஒருவருக்கு தான் இக்குறை ஏற்படும்.
‘டிரான்ஸ் வெஸ்டிடெஸ்’ : (Trans Vestites)
- இவர்கள் ஆணா பெண்ணா என்ற மனக்குழப்பத்தில் இருப்பார்கள், இந்த மனக்குழப்பத்தால், எதிர்பாலினர் போலவே கருதிக்கொண்டு ஆடை, அணி கலன்கள், நடை, உடை, பாவனைகளை மாற்றிக்கொள்வார்கள். அப்படி எதிர்பாலினர் போல நடந்துகொள்வதில் அவர்களுக்கு அப்படியொரு மகிழ்ச்சி.
டிரான்ஸ் செக்ஸுவல்ஸ் (Trans sexuals)
- இவர்களுக்கு தங்களின் பாலினை உணர்ந்து கொள்வதிலேயே, அப்படியொரு குழப்பமிருக்கும். ஆடை, அணிகலன்களில் மட்டுமில்லாமல், உடல் அளவிலும் எதிர்பாலினர் போல மாற வேண்டும் என்கிற உணர்வுகளின் உந்துதல் தொடர்ந்து உறுத்திக் கொண்டேயிருக்கும். உறுத்தலை மாற்றிக்கொள்ள முடியாத மனதால் ஊனமுற்ற இவர்கள் உணர்வுகளுக்கு அடிபணிந்து ஆபரேஷன் செய்துகொண்டு, பாலினத்தை மாற்றிக்கொள்வார்கள்.
யூனுச்ஸ் (Eunuchs)
- இந்த வகையைச் சேர்ந்த ஆண்கள், வயதுக்கு வரும் முன்னே தங்களின் பாலுறுப்புகளை வெட்டி விடுவார்கள். அதனால் வயதுக்கு வந்தபின்னரும் ஆண்மை தன்மை வராமல், ‘பெண்மை’ மிகுதியாக இருக்கும். வெட்டி விடுவதற்கான காரணத்தைக் கேட்டால் கடவுளையும், மதத்தையும் இன்னும் சில காரியத்தையும் சொல்வார்கள். இதனால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.
ஒரினச் சேர்க்கை – ஹோமோசெக்ஸ் (கே – லெஸ்பியன்ஸ்)
- ஒரினச் சேர்க்கை உடைய சிலரும் இந்தக் கூட்டத்தில் சமயங்களில் சேர்ந்து கொள்வார்கள்.
பாலியல் தொழில் :
- இவர்களில் பெரும்பாலானோர் இன்றைக்கும் கூட, வட இந்தியாவில் ‘கடவுளின் குழந்தைகள்’ என்று நம்பப்பட்டு பலர் தங்கள் குழந்தைகளுக்கு இவர்களிடம் ஆசி வாங்குகிறார்கள். இப்படிப்பட்ட இவர்கள் சமூக சூழலால் இன்றைக்கு பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எய்ட்ஸ் பரவ இவர்கள் முக்கிய காரணம் என கருதப்படுகிறார்கள். இவர்களிடம் பாலுறவு கொள்வதன் மூலம் எய்ட்ஸ் நோய் பரவுவதற்க்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆண் – பெண் தன்மை கலப்பு
- ஆண்குழந்தை பெண் தன்மையுடனும், பெண்குழந்தை ஆண் தன்மையுடனும் பிறப்பதனை மருத்துவதில் Intersex disease என்கிறார்கள்.
இந்த ஆண் – பெண் தண்மை கலப்பைத்தடுப்பது சாத்தியமா ?
- கர்ப்பிணிகள், குழந்தையை எதிர்நோக்கி இருக்கும் நிலையில் வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிடக் கூடாது.
- மாதவிடாய் வருவதை தள்ளிப் போடுவதற்கும், கருக்கலைப்பிற்கும், கண்ட மாத்திரைகளையும் சாப்பிடக் கூடாது.
- கருத்தரித்திருக்கும் போது அடிக்கடி எக்ஸ் – ரே எடுக்கக் கூடாது.
- கர்ப்பகாலத்தில் மருத்துவரின் ஆலோசனையைப் பெறாமல் மருந்துகளை சுயமாக சாப்பிடக் கூடாது.
- சிலவகை மாத்திரைகளில் ஆண் ஹார்மோன் சக்தி உள்ளதால், கருவில் பெண் குழந்தைகள் உருவாகும் நிலையில் தீய விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிறக்கும் பெண்குழந்தை ஆண் குறிகளுடன் பிறக்கவும் வாய்ப்பு உண்டு.
- எனவே கர்ப்பகாலத்தில் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த ஒரு மருந்தினையும் உட்கொள்ளக்கூடாது.
உறவு முறை திருமணம்
- உறவுமுறை திருமணத்தை தவிர்த்துவிடுங்கள் ஏனெனில், கருவின் பாலுறுப்புகள் சரியாக வளர்வதற்கான ஹார்மோன் உற்பத்தியில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் உடல் ரீதியான மன ரீதியான குறைபாடுகள் வர அதிக வாய்ப்புண்டு.
சமூக பிரச்சனைகள்
- மற்றவர்களின் பேச்சுக்கு ஆளாகிவிடுவோமோ என்று பெற்றவர்களே இவர்களை வீட்டை விட்டு துரத்துவது.
- நமது சமூகம் இவர்களை புரிந்துகொள்ளாமல் கேலியும், கிண்டலும் செய்வது,
- பாலியல் தொழிலுக்கு அழைப்பது,
- அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும் இவர்களை வேலைக்கு அமர்த்தாதது.
- ஆண் – பெண் கலப்புத்தன்மை கொண்டவர்கள் விளையாட்டுகளில் கலந்து கொள்ள முடியாது. தேசிய போட்டிகளில் வீரர்களாகட்டும், வீராங்கனைகளாகட்டும் இருவருமே மரபியல் மருத்துவரிடம் குரோமோசோம் சோதனை செய்துக் கொண்டு சான்றிதழ் பெற வேண்டும். நன்றாக இருந்தால் விளையாடலாம்.
- திருநங்கைகளும் தங்களின் போக்கை மாற்றி பிச்சை எடுப்பதையும், பாலியல் தொழிலில் ஈடுபடுவதையும் விட்டுவிட்டு சமூகத்தில் பொறுப்புள்ள மனிதராக வலம் வர வேண்டும்.
சிகிச்சை
- ஆண் – பெண் கலப்பு கோளாறுகளுடன் குழந்தை பிறந்தால் ஹார்மோன், குரோசோம் கோளாறை கண்டுபிடிக்க – அதாவது ஹார்மோன் அளவு,. குரோமோசோம்களின் எண்ணிக்கை, வடிவமைப்பு ஆகியவற்றை கண்டுபிடிக்க சோதனை செய்ய வேண்டும்.
- மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் இச்சோதனைகள் செய்ய வேண்டும். அல்டரா சவுண்ட் சோதனையும் செய்வார்கள்.
- அறுவை சிகிச்சை மூலம் கோளாறுள்ள பாலுறுப்புகளை சரி செய்யலாம்.
- அதே தாய் இரண்டாவது முறை கர்ப்பம் அடையும் போது, கர்ப்ப காலத்திலேயே அனைத்து சோதனைகளும் செய்து, தேவையானால் ஹார்மோன் ஊசிகளை செலுத்தி இரண்டாவது குழந்தை கோளாறுடன் பிறப்பதைத் தடுக்க முடியும்.
- ஆரம்ப நிலையிலேயே பெற்றோரும், மற்றோரும், மருத்துவரும் குழந்தைகளின் பால் உறுப்புகளை கவனித்தால், கோளாறிருந்தால் எளிதாக உடன் சரிசெய்யலாம்.
- குழந்தைப் பருவத்தில் பார்க்கத் தவறி, பெரிய வயதில் கண்டுபிடித்தால் கூட ஒரு பெண்ணுக்கு, ஆண் தன்மையை அகற்றி, பூரண பெண்ணாக வாழும் வகையில், வழி செய்ய மருத்துவம் இருக்கிறது. ஒருவருக்கு எதிர் பாலுறுப்புகளோ (அ) அறிகுறியோ (அ) மனநிலை மாற்றாமோ இருந்தால் மருத்துவரிடம் மறைக்காமல், தயங்காமல் வெட்கமின்றி, கூறி சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். சிகிச்சை இல்லாத பிரச்சனைகளுக்கு உளவியல் ஆலோசனை நல்ல பலனலிக்கும்.
”இவர்களில்” பலர் மனதாலும், பல்வேறு காரணங்களாலும் சிதைந்து போகிறார்கள். இப்படி சிதைந்த மனிதர்களை சீர்தூக்கி நிறுத்த சிறப்பான மருத்துவமும், உளவியல் ஆலோசனையும் கை கொடுக்கும், நல்ல விடிவைத்தரும் என்பதை அவர்கள் அறிய வேண்டும்.
உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:– 9786901830
பண்ருட்டி:– 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.