இல்லறத்தை தாண்டிய தொடர்புகள் உளவியல் ஆலோசனை, சென்னை – Extra Marital Relationships Counseling at Chennai

 

cheating-partner 26 வயதான திருமணமான, மிகவும் அழகான (நான் ரொம்ப அழகு என்று பார்ப்பவர்கள் அனைவரும் கூறுவார்கள்) பெண் நான், டிகிரியும் முடித்து ஒரு பொறுப்பான மதிப்பு மிகுந்த அரசு பதவியில் உள்ளேன். பணம், தேவையான பொருட்கள், சொத்து அனைத்தும் உள்ளது. கணவரும் பொறுப்பான பதவியில் இருக்கிறார். இரண்டு அழகான அன்பான குழந்தைகள் உள்ளது. ஒரே குறை எனது கணவர் நிறைய பெண்களுடன் உடல் ரீதியாக தொடர்புவைத்துள்ளார். இத்தனைக்கும் நான் படுக்கையில் அவருக்கு எந்த ஒரு குறையும் வைத்ததில்லை, அவரின் தேவைக்கேற்பவும், விருப்பப்படியும், படுக்கையில் நடந்துகொள்கிறேன். இருந்தபோதும் அவர் வெளியே பல பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்கிறார். அவரிடம் சிலமுறை இதைபற்றி கேட்டுள்ளேன் அவரும் அதை ஒப்புக்கொள்கிறார். ஆனால் நடத்தையை மட்டும் மாற்றிக்கொள்ளவில்லை. அவர் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்? அவரை மாற்ற முடியுமா?

 

கேள்வி: 26 வயதான திருமணமான, மிகவும் அழகான (நான் ரொம்ப அழகு என்று பார்ப்பவர்கள் அனைவரும் கூறுவார்கள்) பெண் நான், டிகிரியும் முடித்து ஒரு பொறுப்பான மதிப்பு மிகுந்த அரசு பதவியில் உள்ளேன். பணம், தேவையான பொருட்கள், சொத்து அனைத்தும் உள்ளது. கணவரும் பொறுப்பான பதவியில் இருக்கிறார். இரண்டு அழகான அன்பான குழந்தைகள் உள்ளது. ஒரே குறை எனது கணவர் நிறைய பெண்களுடன் உடல் ரீதியாக தொடர்புவைத்துள்ளார். இத்தனைக்கும் நான் படுக்கையில் அவருக்கு எந்த ஒரு குறையும் வைத்ததில்லை, அவரின் தேவைக்கேற்பவும், விருப்பப்படியும், படுக்கையில் நடந்துகொள்கிறேன். இருந்தபோதும் அவர் வெளியே பல பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்கிறார். அவரிடம் சிலமுறை இதைபற்றி கேட்டுள்ளேன் அவரும் அதை ஒப்புக்கொள்கிறார். ஆனால் நடத்தையை மட்டும் மாற்றிக்கொள்ளவில்லை. அவர் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்? அவரை மாற்ற முடியுமா?

 

 

உளவியல் ஆலோசகர் பதில்: எது கிடைத்தாலும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற ஆழ்மனதின் ஆசைதான் இதற்கெல்லாம் காரணம். இது செக்ஸுக்கும் பொருந்தும். ஆண்களைப் பொறுத்தவரை போதும் என்ற மனமே இல்லை.

 

கிளி மாதிரி மனைவி இருந்தாலும், குரங்கு போல ஒன்று கேட்குதாம் என்ற சொலவடை ஒன்றுண்டு. இது உண்மைதான். எவ்வளவு அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், சில ஆண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் வேறு பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளத் தயங்க மாட்டார்கள்.

 

ஒரு சிலர் என்னதான் அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும்,  சந்தர்ப்பம் அமையும் போதும், வாய்ப்பு கிடைத்தாலும், தொடர்பினால் பாதிப்பு வராது என உறுதியாகத் தெரிந்தாலும் இன்னொரு பெண்ணுடன் உறவு வைக்க தயங்க மாட்டார்கள். 

 

பெண்களின் ஷாப்பிங் ஆசையும், ஆண்களின் செக்ஸ் ஆசையும் முற்றுப்புள்ளி இல்லாத தொடர் கதையாகவே உள்ளது. எவ்வளவு கிடைத்தாலும் அதை அனுபவிக்கவே அவர்கள் முயலுகிறார்கள். போதும் என்று நிறுத்திக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. வேடிக்கைக்காகவும், ஆசைக்காகவும்தான் இதை அவர்கள் செய்கிறார்கள்.

 

தங்களது கணவர்கள் நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள், பிறன் மனை நோக்காதவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். ஆனால் சில ஆண்கள் வாய்ப்பு கிடைத்தால் உபயோகப்படுத்திக்கொள்ளும் மன நிலை உடையவர்கள் என்பதை அவர்கள் பெரும்பாலும் உணர்வதில்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். குறிப்பாக மனைவிகள்.

 

ஒரு பெண்ணுடன் உடலுறவுக்குத் துடிக்கும் ஆண்கள், அவளை உண்மையாக காதலிப்பதில் கவனம் செலுத்துவதில்லை, முக்கியத்துவம் தருவதில்லை. அந்தப் பெண்ணே அழைத்தாள் எனக்கு வாய்ப்பு கிடைத்தது, , அதனால்தான் உறவு வைத்துக் கொண்டேன் என்று கூறும் ஆண்களே அதிகம். அதாவது பழியை பெண்கள் பக்கம் சாமர்த்தியமாக திருப்பி விட்டு விடுகிறார்கள். 

 

ஆண்களுக்கும், பெண்களுக்கும் செக்ஸ் உணர்வுகள் வேறுபாடானவை. பெண்கள் நம்பிக்கை அடிப்படையிலும், நீண்ட கால உறவின் அடிப்படையிலும்தான் பிறரிடம் தங்களை உடல் ரீதியாக ஒப்புவிக்க முன்வருவார்கள். இவன் நமக்கு நல்ல பாதுகாப்பாக இருப்பான், இவனை நாம் நம்பலாம், இவனிடம் நம்மைக் கொடுத்தால் நலமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் ஒரு ஆணிடம் தங்களைக் கொடுக்க முன்வருகிறார்கள்.

 

ஆனால் நிறைய ஆண்கள் அப்படி இல்லை. யாருடனும் நாம் உறவு கொள்ளலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். அதை உரிமையாகவும் கருதிக் கொள்கிறார்கள். இதுதான் ஆண்களுக்கும், பெண்களுக்கும் செக்ஸ் விஷயத்தில் உள்ள ஒரு வேற்றுமை. 

 

தவறே செய்யாத பல ஆண்களிடம் எடுத்த சர்வே ஒன்று இவ்வாறு தெரிவிக்கிறது – ”நானும் ஒரு சராசரி ஆண்தான். எனது மனமும் அதுபோன்ற எண்ணங்களில் அலை பாய்ந்ததுண்டு. எனக்கும் வாய்ப்பு கிடைத்தால், பின்விளைவுகள் இல்லாவிட்டால் நானும் அந்த தவறை செய்வேன்தான்,. ஆனால் நான் தவறு செய்தால் அதற்கான பின்விளைவுகள் உடனே என்னைத் தேடி வந்து விடும். எனவேதான் இதுவரை நான் அந்தத் தவறைச் செய்யவில்லை. செய்யும் வாய்ப்பும் இல்லை என்றே கருதுகிறேன்” – என்று. 

 

எனவே சந்தர்ப்பமும் வாய்ப்பும் அமைந்தால் ஆணும் பெண்ணும் தவறுகள் செய்ய நிறையவே வாய்ப்பு உண்டு. அத்தகைய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ளாமல் இருப்பது நலம். அவ்வாறு ஏற்படும்போது அவர்களின் துணையைப்பற்றியும் சிந்திக்கவேண்டும்.

 

எது எப்படி இருந்தாலும், செக்ஸ் என்பது உடல் வேட்கைக்காக மட்டுமல்ல, அதில் சற்று உண்மையான உணர்வும் இருக்க வேண்டும் என்பதை இரு பாலினரும், குறிப்பாக ஆண்கள் புரிந்து கொள்ளுதல் நலம்.

 

நீங்கள் இருவரும் உளவியல் / குடும்ப நல ஆலோசகரை தயக்கமின்றி சந்தித்து ஆலோசனை பெற்று மகிழ்ச்சியுடன் இல்வாழ்க்கையை தொடருங்கள்

 

வாழ்த்துக்கள்

 

 

குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு  தொடர்பு கொள்ளவும்

உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.

விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

பண்ருட்டி:- 9443054168

புதுச்சேரி:- 9865212055

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

 

 

 

Get Appointment

==–==

Feel Free to Contact us 
* indicates required field

Scroll to Top