கேள்வி: எங்கள் குடும்பத்தில் நிறையபேருக்கு மூலம் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இதற்கு தீர்வு உண்டா?
மருத்துவர் பதில்: மூல நோய் என்பது ஆசனவாயில் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் காணப்படும் சிறு இரத்தக் கட்டிகளாகும். ஒரே இடத்தில் உட்கார்ந்து மணிக்கணக்கில் வேலை செய்வதால் ஆசனவாயில் சூடு ஏற்படுகிறது. அது வெளியேறமுடியாமல் ஆசனவாயின் உட்புறத்தை தாக்குகிறது. இதனால் மூலத்தில் சூடு ஏற்பட்டு மூல நோய் உண்டாகிறது.
இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. நாட்பட்ட மலச்சிக்கல் முக்கிய காரணம் , தாய் தந்தை வழியாகவும், பட்டினி கிடத்தல், பசியின்மை இவை போன்றவற்றால் கீழ் நோக்கி மலத்தை தள்ளும் குடல் தன்னுடைய வேலையை சரியாக செய்யவில்லை என்றாlலும் வருகிறது.
மீண்டும் மலம் மலக்குடலில் இருப்பது போன்ற உணர்வு, ஆசன வாயில் எரிச்சல், காந்தல் வலி, உண்ட உணவு சரியாக செரிமானம் ஆகாதது, சோம்பல், மனச்சோர்வு, அடிக்கடி கோபம் கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
உடலுழைப்பு, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை, உட்கார்ந்தே வேலை செய்வது. நாற்காலியில் மணிக்கணக்காக உட்கார்ந்திருப்பது. குடலில் புண் இருந்தாலும் மூலம் உண்டாகும்.
முதல் கட்ட மூலநோயில் அவ்வளவாக அறிகுறிகள் தெரியாது. வலி இருக்காது. மலம் கழிக்கும் போது, சில சமயங்களில் சிரமமாக இருக்கும். சிறிது ரத்தக்கசிவு இருக்கலாம். இரண்டாவது கட்டத்தில் சதை வீங்கி வெளியே வரும்.
தினசரி உணவு வகைகளில் நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளையும், கீரைகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவிற்கு முன் ஏதாவது ஒரு பழவகையை சேர்த்துக் கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் :
- கருணைக்கிழங்கு தவிர அனைத்து கிழங்கு வகைகள், பாசிப்பயிறு தவிர அனைத்து பயிர்வகைகள், முட்டை முதல் அனைத்து அசைவ உணவுகள், காரம், மசாலாப் பொருட்கள் இவைகளைத் தவிர்க்க வேண்டும்.
- பகலில் தூக்கம், புகைபிடித்தல், மது வகைகள், வெயிலில் அதிகம் செல்வது, காற்றுப் புகாத கடினமான இருக்கையில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்தல்இவைகளைத் தவிர்க்க வேண்டும்.
- உணவு முறை முரண்பாடுகள், வாழ்க்கை முறை முரண்பாடுகள், மனஅழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகள்தான் இத்தகைய நோய்களுக்கு காரணமாக இருக்கின்றன.
- தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் இதர தொழில்துறைகளில் பணியாற்றும் நபர்களுக்கு இந்த நோய் அதிகம் தாக்கப்படுகிறது. வாழ்க்கை முறைகளை சரிசெய்து வருமுன் காப்பதும், வந்த உடன் சரியான சிகிச்சைகள் பெறுவதுமே இந்த நோய்களிடம் இருந்து வெளிவர சிறந்த வழி.
- முறையான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் ஆசன வாயில் வெடிப்பு போல புண் ஏற்பட்டு ஆறாமல், அதில் இருந்து ரத்தம் வெளியேறும். இது ஆறாமல் தொடரும் போது நாட்பட்ட மூலமாக மாற வாய்ப்புள்ளது.
- இதில் ஏற்படும் கொப்பளங்கள் குடல் பகுதியில் துளையை உருவாக்கும். எனவே மூலப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஆரம்பத்திலேயே இதற்கு தீர்வு காண்பது அவசியம்.
மூலம் / ஆசன வாய் வெடிப்பு / பெளத்திரம் சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் மூலம் / ஆசன வாய் வெடிப்பு / பெளத்திரம் போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==


You must be logged in to post a comment.