நிலையாக இல்லற இன்பம் நீடிக்க
ஓரவிழிப் பார்வையாலேயே ஆண்களை கவர்ந்துவிடுகிற சக்தி பெண்களுக்கு உண்டு. ஆனால், ஆண்களால் அவ்வாறு பெண்களை தங்கள் வலையில் எளிதில் வீழ்த்த முடியாது. சிலருக்கு தான் அந்த பாக்கியம் கிடைக்கும். ஆண்களைப் பொறுத்தவரை அழகான பெண்ணைத் தான் பெரும்பாலும் விரும்புகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி அல்ல. பெர்சனாலிட்டியுடன் தகுந்த பாதுகாப்பும் அவசியம் என்பதே பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.
இவை ஒரு புறம் இருக்கட்டும். கணவன் மனைவியாக வாழ்க்கையில் இணைந்த பிறகு, “மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள்” என்ற வரையறையையும் தாண்டி கணவன்- மனைவியர் மிகவும் அன்யோன்யமாக வாழ்வது என்பது இன்றைய காலக்கட்டத்தில் குறைந்து விட்டது என்றே கூறலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கணவன், மனைவியையும், மனைவி கணவனையும் புரிந்து கொண்டு வாழும்போது தான் தம்பதியர் வாழ்க்கையில் சந்தோஷம் பூக்கும். இல்லையென்றால் வாழ்க்கையே பிரச்சினையாகி விடும்.
மனைவி சொல்லே மந்திரம் என்று சொல்லுவார்கள். அதாவது, மனைவி சொல்வதை அப்படியே சில கணவன்மார்கள் கேட்பார்கள். அதனால் தான் அப்படிச் சொன்னார்கள். இதேபோல், கணவன்மார்கள் சொல்வதை அப்படியே அவர்களது மனைவியர் கேட்க வேண்டும் என்றால் அதற்கும் வழிமுறை இருக்கிறது. அன்பாக, எல்லா வகையிலும் பாது காப்பு தரும் உணர்வுடன் ஒரு கணவன் தனது மனைவியிடம் பழகினால் அந்த மனைவி அவன் என்ன சொன்னாலும் கேட்பாள்.
அதுபற்றிதான் உளவியல்ரீதியாக நாம் இங்கே பார்க்கப் போகிறோம் …
செக்சில் திருப்தி
- தம்பதியர் வாழ்க்கையில் செக்சும் முக்கிய இடம் பெறுகிறது. இதில், ஒருவரது எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை என்றால், அதற்கான எதிர் விளைவை அடுத்த நாள் எதிர்பார்க்கலாம். செக்ஸ் வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைத்தால், அந்த மகிழ்ச்சியையும் அவர்களது முகத்தில் மறுநாள் பார்க்கலாம்.
- செக்ஸ் விஷயத்தில் கணவனின் அன்பான அணுகுமுறையைத்தான் ஒரு மனைவி எதிர்பார்க்கிறாள். ஒரு ஆண் தனது செக்ஸ் ஆசையை மனைவியிடம் எளிதில் சொல்லி விடலாம். ஆனால், பெண் அப்படி அல்ல. அவள் வளர்ப்பு முறையே வேறு. இப்படித்தான் எல்லோரிடமும் பழக வேண்டும் என்று சிறுவயது முதலே அவள் சொல்லி சொல்லியே வளர்க்கப் பட்டு இருக்கிறாள். அதனால், நாசூக்காகத் தான் அவள் தனது விருப்பத்தை வெளிப்படுத்த முடியும். இதை ஒவ்வொரு கணவனும் புரிந்து கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.
- “இன்றைக்கு வேண்டாம்” என்று மனைவி சொன்னால்கூட கொஞ்சமும் வெறுப்பை அவள் மேல் காண்பிக்கக் கூடாது சரி என்று பாசமாகவே சொல்லிவிட்டு, அவள் அப்படிச் சொல்ல என்ன காரணம் என்பதை கேளுங்கள். உடல்நலம் சரியில்லையா? டாக்டரை பார்க்க செல்லவேண்டுமா? என்றெல்லாம் பாசத்தோடு கேளுங்கள். உங்களது அந்த பாசமான கேள்வியே, அவள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் 50 சதவீதம் சரியாக்கிவிடும். அன்புக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.
உறவில் மகிழ்ச்சி
- உறவின் போது மென்மையான அணுகுமுறையையே பின்பற்றுங்கள். அவள் விருப்பத்தை கேளுங்கள். ஓரிரு நிமிடங்களில் உறவை முடித்து விட்டு படுத்துத் தூங்கிவிடாதீர்கள். உறவுக்கு பின்னரும் அன்பாக அவளை வருடிவிடுங்கள். ஆதரவாக பேசுங்கள். உறவின் போது அவள் மகிழ்ச்சியாக இருந்தாளா என்பதையும் கேளுங்கள்.
- ஒரு வேளை அவள் அந்த நேரத்தில் மகிழ்ச்சியாக இல்லாவிட்டாலும் கூட, உங்களது அந்த அன்பான – ஆதரவான பேச்சில் அவள் சந்தோஷமாக இருந்தேன் என்று தான் தலையாட்டி புன்னகை பூப்பாள். எதிலும் விட்டுக் கொடுத்தே பழகியவள், உங்களது அன்பான பேச்சுக்கு எதையுமே விட்டுக்கொடுப்பாள். அதனால் தான் அன்பின் வடிவானவள் பெண் என்கிறோம்.
- செக்ஸ் விஷயத்தில் உங்கள் அவசரம் மட்டுமே பிரதானமாக இருந்தால் அவளுக்கு விரக்தி தான் மிஞ்சும். என்ன வாழ்க்கை இது? என்று யோசிப்பவள், எனக்குப்போய் கணவன் இப்படி அமைந்து விட்டாரே? என்று நாளடைவில் எண்ணத் தொடங்கிவிடுவாள். ஒருவேளை அப்படி நிகழ்ந்துவிட்டால் வாழ்க்கையே பிரச்சினைகளின் கூடாரமாகிவிடும். நரகத்தின் வேதனைதான் உங்களுக்கு மிஞ்சும்.
இதெல்லாம் தேவைதானா
- செக்ஸ் விஷயத்தில் மட்டுமல்ல, எல்லா விஷயத்திலுமே உங்கள் மனைவியிடம் அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள்.
மனைவியை வெல்லும் மந்திரங்கள்
- அலுவலகத்தில் இருந்து வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வீட்டில் மனைவியைபார்த்ததும் அவளை பாசத்தோடு கட்டித் தழுவுங்கள் (அருகில் யாரும் இல்லாத நேரத்தில்). சில முத்தங்களையும் கொடுங்கள். அவளும் தன் பங்குக்கு உங்கள் மீதுபாசத்தை கொட்டுவாள்.
- அலுவலகத்தில் டென்ஷனை சந்தித்தாலும் அதை அலுவலகத்தோடு விட்டுவிடுங்கள். வீட்டில் உங்கள் மனைவி, பிள்ளைகளை மட்டும் நினையுங்கள், அலுவலகத்தில் உள்ள கோபத்தை எக்காரணம் கொண்டும் மனைவியிடம் பிரயோகித்து விடாதீர்கள்.
- சமையல் செய்யும்போது நீங்களும் மனைவிக்கு உதவி செய்யுங்கள். விடுமுறை நாளில்நான் சமைக்கிறேன் என்று சின்ன பொய்யையாவது சொல்லி முயற்சி செய்யுங்கள். நீங்கள் சொன்னதே போதும் என்று திருப்திகொள்வாள் உங்கள் மனைவி.
- சாப்பிடும்போது ஒன்றாகவே சாப்பிடுங்கள். அப்போது உங்களவளுக்கு சாப்பாட்டைஊட்டி விடுவதில் தவறே இல்லை. அவ் வாறு செய்தால் அவள் ஒரு குழந்தை யாகவே மாறிவிடுவாள். அந்த குழந்தைத் தனத்தில் அவளது செய்கைகள் உங்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு போய்விடும்.
- வெளியில் மனைவியுடன் செல்லும்போது அவளை நெருங்கியபடியே செல்லுங்கள். முடிந்தால் அவளது கரத்தை பற்றிக் கொண்டே செல்லுங்கள். இந்த பாதுகாப்பை எல்லா பெண்களுமே கணவனிடம் எதிர்பார்ப்பார்கள்.
- வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு ஒரு நாளாவது சினிமாவுக்கு அழைத்துச்செல்லுங்கள். சிரித்துப் பேசுங்கள், மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளுங்கள்.
- எதிர்காலம் பற்றி முடிவு எடுக்கும் போது உங்கள் மனைவியிடமும் விஷயத்தை சொல்லி, அவளது கருத்தை கேளுங்கள். அவள் அப்போது கூறும் அறிவுரைகளையும் பின்பற்றிப் பாருங்கள்.
- சிலநேரங்களில், அவளே எதிர்பார்க்காத வகையில் பரிசுப் பொருட்களை வாங்கிக்கொடுத்து அசத்துங்கள்.
- எந்த விஷயத்திலும் ஈகோ பார்க்காதீர்கள். இதைப்போய் நான் அவளிடம் கேட்க வேண்டுமா? என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களுக்காகவே வாழ வந்தவளிடம், நீங்கள் எந்த விஷயத்தையும் சொல்லலாமே! மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே!
- எக்காரணத்தைக் கொண்டும் கோபத்தை அவளிடம் வெளிப்படுத்தாதீர்கள். அப்படியே கோபப்பட்டாலும், உடனே சமாதான மாகிவிடுங்கள். அப்போது உங்கள் கோபத்தை நியாயப்படுத்திப் பேசாதீர்கள். ஏதோ தவறாக பேசிவிட்டேன். இனி கண்டிப்பாக பேச மாட்டேன் என்று சமாதானமாகவே பேசவேண்டும். பின் மனைவி தரப்பில்அமைதி ஏற்படுவதை உணரமுடியும்.
இப்படியெல்லாம் உங்கள் மனைவியை வைத்திருந்தால் உங்கள் இல்லமே ஒரு சொர்க்கலோகம் தான். வாழ்க்கை முழுக்க சங்கீத சந்தோஷம்தான்.
இனி உங்கள் வாழ்க்கையும் பூத்துக் குலுங்கும்.
வாழ்த்துக்கள்.
திருமணத்திற்கு முந்தைய / பிந்தைய, ஆலோசனைக்கும், குடும்ப நல ஆலோசனை & உளவியல் ஆலோசனை பெற தொடர்பு கொள்க
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
==–==
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.