கேள்வி: மருத்துவர் அவர்களுக்கு வணக்கம், 35 வயது திருமணமான பெண் நான். கடந்த 5 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் உடலுறவில் நாட்டம் இல்லாத நிலை, எனக்கும் எனது கணவருக்கும் சண்டை வருகிறது. எனது விருப்பமின்மையை அவர் புரிந்து கொள்ளவே மாட்டேங்கிறார். நீரிழிவு நோயால் பெண்மைக் குறைவு ஏற்படுமா? இதற்கு தீர்வு என்ன?
மருத்துவர் பதில்:
- பெண்களை பொறுத்த வரையில் பாலுறுப்புகளுக்கு வரும் பல ரத்த நாளங்கள், நரம்புகள், மிக மென்மையானவை, இவையே பாலுறவின் போது விரிந்து சுருங்கி உணர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
- இந்த நரம்புகள், நாளங்கள் சர்க்கரை வியாதியால் எளிதில் பாதிக்கப்படும். இந்த பாதிப்பால் பூரண உணர்ச்சி இல்லாத நிலை ஏற்பட்டு பெண் உறுப்பு ஈரமாகி விரிவாவது எளிதில் நடக்காது. இதனால் உடலுறவின் போது வலி ஏற்படுகிறது. இதனால் பெண்களுக்கு உடலுறவு பிடிக்காமல் போய்விடுகிறது.
- பெண்மைக்குறைவு ஏற்படாமல் தவிர்க்கவும் குறைபாடு இருப்பின் அவை அதிகரிக்காமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை அவசியம் தக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்வது அவசியம்.
- ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம். கட்டுப்பாடான வாழ்க்கை, சத்தான அதே சமயம் சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவு முறை, உடற்பயிற்சி, தக்க இடைவெளியில் பரிசோதித்துக் கொள்வது, தகுந்த மருத்துவ ஆலோசனை, ரத்த அழுத்தம் இருப்பின் அதனையும் கட்டுப்பாட்டிற்குள் வைப்பது போன்றவை மிக முக்கியம்
- சர்க்கரை வியாதி இல்லாதவர்களை விட சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு பெண்மைக்குறைவு ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்
- முறையான சிகிச்சை மூலம் இத்தகைய பிரச்சனையிலிருந்து விடுபடலாம். மருத்துவரை காலம் தாழ்த்தாமல் கலந்து ஆலோசித்து சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.
சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==


You must be logged in to post a comment.