SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
பிறப்புறுப்பு HPV மருக்கள்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை மற்றும் தடுக்கும் வழிகள் | ஒரு முழுமையான வழிகாட்டி
August 23rd, 2025 by Dr.Senthil Kumar

 

 

அனைவருக்கும் வணக்கம்!

இப்போது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான,  நம்முடைய பாலியல் நன்மைக்கான, பலரும் பேசத் தயங்கும், ஒரு விஷயம்தான் பால்வினை நோய் மருக்கள் எனப்படும்  பிறப்புறுப்பு HPV மருக்கள் அல்லது பாலுறுப்பு மருக்கள்.

Human Papilloma Virus HPV எனப்படும் வைரஸால் ஏற்படும் இந்த பாதிப்பு, பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளில் STI மிகவும் பொதுவான ஒன்றாகும்.

இந்த பால்வினை நோய் மருக்கள் குறித்து உங்களுக்கு சரியான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம்.

பிறப்புறுப்பு HPV மருக்கள்

இப்போது பால்வினை நோய் மருக்களை பற்றி மிகவும் விரிவாக பார்க்கலாம்.

பிறப்புறுப்பு HPV மருக்கள் என்றால் என்ன?

பிறப்புறுப்பு மருக்கள் என்பவை, ஆண் உறுப்பின் மேலோ, பெண் உறுப்பின்  மேலோ, ஆசனவாயிலோ, விதைப்பையிலோ அல்லது பிறப்புறுப்பை சுற்றியோ வரக்கூடிய மென்மையான, சதைப்பற்றுள்ள மருக்கள் ஆகும்.

இவை HPV வைரஸ் தொற்றினால் ஏற்படுகின்றன. இந்த வைரஸில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும், மிகச் சில வகைகளே பிறப்புறுப்பு மருக்களை உண்டாக்குகின்றன.

 

பால்வினை நோய் மருக்கள் எப்படி இருக்கும்: 

இவை பொதுவாக தோல் நிறத்திலோ அல்லது சற்று அடர்ந்த நிறத்திலோ காணப்படும். பார்ப்பதற்கு சிறிய மிளகு மாதிரியோ, காலிஃபிளவர் போன்ற தோற்றத்திலோ, கொத்தாகவோ அல்லது தனித்தனியாகவோ இருக்கலாம். சில நேரங்களில் அவை மிகவும் சிறியதாகவும், தட்டையாகவும் இருப்பதால் ஆரம்ப கட்டத்தில் சுலபமாக கண்டுபிடிக்க முடியாமலும் போகலாம். 

அந்தரங்க பகுதியில் மரு,

பால்வினை நோய் மருக்கள் எந்தெந்த பகுதியில் வரலாம்?:

    • ஆண்களுக்கு: ஆண்குறி, விதைப்பை, மற்றும் ஆசனவாய் ஆகிய பகுதிகளில் மருக்கள் தோன்றலாம்.
    • பெண்களுக்கு: பெண்ணுறுப்பின் மேல் பகுதி, பெண்ணுறுப்பின் உட்பகுதி, கருப்பை Cervix வாயிலோ, ஆசனவாயிலோ இந்த மருக்கள் ஏற்படலாம்.
    • பொதுவாக:  பொதுவாக ஆண் பெண் இருவருக்கும் தொடை மற்றும் பிறப்புறுப்பு, அந்தரங்கப் பகுதிகளில் பால்வினை நோய் மருக்கள் வர வாய்ப்புகள் உள்ளது.

 

பால்வினை நோய் மருக்கள் எப்படி பரவுகிறது?

HPV தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எப்படிப் பரவுகிறது என்பதை தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம்.

  • பாலியல் தொடர்பு: பெண்ணுறுப்பின் வழியாகவோ, ஆசனவாய் வழியாகவோ, வாய் வழியாகவோ, ஒருவர் பாதுகாப்பற்ற உடலுறவு வைக்கும் போது பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து அடுத்தவருக்கு இந்த மருக்கள் எளிதில் தொற்றும்
  • தோலுடன் தோல் உரசுதல்: மருக்கள் உள்ள நபருடன்  தோலோடு தோல் உரசும்போது  ஏற்படும் நேரடித் தொடர்பினாலும் இது பரவக்கூடும். ஆணுறை அணிவது ஓரளவிற்குப் பாதுகாப்பளித்தாலும், அது மூடாத பகுதிகளில் தொற்று இருந்தால், அதன் மூலமும் எளிதில் பரவ வாய்ப்புள்ளது.
  • அறிகுறிகள் இல்லாமலும் பரவும்: தொற்று உள்ள பலருக்கு எந்தவிதமான மருக்களோ அல்லது அறிகுறிகளோ வெளியில் தெரியாது. ஆனாலும், அவர்களால் இந்த வைரஸை மற்றவர்களுக்குப் பரப்ப முடியும்.
  • பிரசவத்தின் போது: மிகவும் அரிதாக, தாய்க்கு பிறப்புறுப்பில் தொற்று இருந்தால், குழந்தை பிறக்கும்போது குழந்தைக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

Human Papillomavirus Tamil,

HPV ஹெச் பி வி பால்வினை நோய் மருக்கள் எத்தனை வகைகள் உள்ளது? Types of HPV Warts

HPV வைரஸில் பல வகைகள் இருந்தாலும், பிறப்புறுப்பு மருக்களுக்கு முக்கிய காரணமானவை இரண்டு வகைகளாகும்.

  1. குறைந்த ஆபத்துள்ள HPV வகைகள் Low Risk HPV: HPV வகை 6 மற்றும் 11 ஆகியவை சுமார் 90% பிறப்புறுப்பு மருக்களுக்குக் காரணமாகின்றன. இவை பொதுவாக புற்றுநோயை உண்டாக்குவதில்லை. அதனால் “குறைந்த ஆபத்துள்ளவை” என்று அழைக்கப்படுகின்றன.
  2. அதிக ஆபத்துள்ள HPV வகைகள் High Risk HPV: HPV வகை 16 மற்றும் 18 போன்றவை அதிக ஆபத்துள்ள வகைகளாகும். இவை பிறப்புறுப்பு மருக்களை உண்டாக்குவது அரிது. ஆனால், இவை கருப்பை வாய், ஆசனவாய், மற்றும் தொண்டைப் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்தும் அபாயம் கொண்டவை.

ஆகவே, பிறப்புறுப்பில் மருக்கள் இருந்தால், அது பெரும்பாலும் குறைந்த ஆபத்துள்ள வகையாகவே இருக்கும். இருந்தாலும், அலட்சியப்படுத்தாமல் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியமாகும்.

 

பால்வினை நோய் மருக்களுக்கான அறி குறிகள் எப்படி இருக்கும்? Signs and Symptoms of HPV warts,HPV in Tamil,

பலருக்கு HPV தொற்று இருந்தாலும் எந்த அறிகுறியும் தெரிவதில்லை. அறிகுறிகள் தோன்றினால், அவை பின்வருமாறு இருக்கலாம்:

  • சிறு சதை வளர்ச்சிகள்: பிறப்புறுப்பு அல்லது ஆசனவாய்ப் பகுதியில் ஒன்று அல்லது பல சிறிய, வலியற்ற சதை வளர்ச்சிகள் தோன்றுவது.
  • அரிப்பு மற்றும் அசௌகரியம்: பாதிக்கப்பட்ட பகுதியில் அரிப்பு, எரிச்சல் அல்லது ஒருவித அசௌகரியம் ஏற்படலாம்.
  • காலிஃபிளவர், மிளகு போன்ற தோற்றம்: பல மருக்கள் ஒன்று சேர்ந்து கொத்தாகவோ, ஒரு சிறிய மிளகு, காலிஃபிளவர் போலவோ காட்சியளிக்கும். ஒரு சிலருக்கு வெள்ளை நிறத்தில் கூட இருக்கலாம்.
  • ரத்தப்போக்கு: உடலுறவின் போது மருக்கள் மீது உராய்வு ஏற்படுவதால் லேசான ரத்தப்போக்கு வர வாய்ப்புள்ளது.
  • ஒரு சிலருக்கு மருக்கள் தட்டையாகவும், மென்மையாகவும், கண்ணுக்குத் தெரியாத அளவிலும் இருக்கலாம்.

 

பால்வினை நோய் மருக்களுக்கான வீட்டு வைத்தியம் என்ன? Home Managements,

 STI in Tamil, மருத்துவரின் ஆலோசனையின்றி நீங்களாகவே மருக்களை அகற்ற முயற்சிப்பது மிகவும் ஆபத்தானது. வீட்டு வைத்தியம் என்பது, நோயின் தீவிரத்தைக் குறைக்கவும், உடல் நலத்தை மேம்படுத்தவும் உதவும் சில வழிமுறைகளையே குறிக்கும்.

  • சுத்தமாக உடலை வைத்திருப்பது மிகவும் அவசியம்: பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்திருப்பது அவசியம். மென்மையான, கெமிக்கல் & வாசனை இல்லாத சோப்புகளைப் பயன்படுத்தலாம்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் நிறைய காய்கறி, கீரை, பழங்கள் மற்றும் உலர் பழங்கள் சாப்பிடுவது மிகவும் அவசியம். தேவையான அளவு உடற்பயிற்சி, சரியான நேரம் தூங்க வேண்டும், தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு, வைரஸை எதிர்த்துப் போராட உதவும்.
  • மன அழுத்தத்தைக் குறைத்தல்: அதிகப்படியான மன அழுத்தம் நோயெதிர்ப்பு தண்மையைபலவீனப்படுத்தும். தியானம், யோகா போன்ற பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
  • மருத்துவர் பரிந்துரைக்காத மருந்துகளைத் தவிர்க்கவும்: கடைகளில் கிடைக்கும் சாதாரண மருக்களுக்கான களிம்புகளை ஒருபோதும் பிறப்புறுப்பு மருக்களுக்குப் பயன்படுத்தக்கூடாது. அப்பகுதியின் தோல் மிகவும் மென்மையானது என்பதால், அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

 

பால்வினை நோய் மருக்கள் வராமல் தடுப்பது எப்படி? Precautions.

“வருமுன் காப்பதே சிறந்தது” என்பதற்கேற்ப, HPV தொற்றைத் தடுக்க சில முக்கிய வழிமுறைகள் உள்ளன.பிறப்புறுப்பு அரிப்பு, சதை வளர்ச்சி,

  • பாதுகாப்பான உடலுறவு: ஆணுறை பயன்படுத்துவது தொற்று ஏற்படும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும். இருப்பினும், இது 100% பாதுகாப்பை அளிக்காது.
  • ஒரு துணை பழக்கம்: ஒருவருடன் மட்டுமே பாலியல் உறவு வைத்துக்கொள்வது, தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
  • புகைப்பிடித்தலைத் தவிர்த்தல்: புகைப்பிடிப்பது நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பாதிப்பதோடு, மருக்கள் மீண்டும் மீண்டும் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
  • மருத்துவப் பரிசோதனை: நிறைய பேர்களுடன் பாலியல் ரீதியாக தொடர்பில் இருப்பவர்கள்,அடிக்கடி பால்வினை நோய் மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது.

 

ஹெச் பி வி மருக்கள் ஹோமியோபதி சிகிச்சை – HPV Warts Homeopathy Treatment

ஹோமியோபதி  மருந்துகள், நோயின் மூல காரணத்தைக் கண்டறிந்து, உடலின் இயற்கையான குணப்படுத்தும் ஆற்றலைத் தூண்டிவிடுவதன் மூலம் செயல்படுகிறது. பிறப்புறுப்பு மருக்களுக்கு ஹோமியோபதியில் நல்ல தீர்வுகள் இருக்கிறது.

தகுதிவாய்ந்த, அனுபவம் மிக்க  ஹோமியோபதி மருத்துவர், நோயாளியின் உடல் மற்றும் மன அறிகுறிகள், வாழ்க்கை முறை, மற்றும் நோயின் தன்மை ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்து, அதற்கேற்ற மருந்தைத் தேர்வு செய்வார். மருந்துகள் ஒவ்வொரு நோயாளிக்கும் மாறுபடும்.

முக்கிய குறிப்பு: எந்தவொரு ஹோமியோபதி மருந்தையும் சுயவிருப்பத்தின் பேரில் எடுத்துக்கொள்ளக் கூடாது.  ஹோமியோபதி மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனைப்படி மட்டுமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

HPV வராமல் தடுப்பது எப்படி

பிறப்புருப்பு மருக்கள் இருக்கிறதா?. கவலைப்படாதீர்கள்;

பிறப்புறுப்பு HPV மருக்கள் என்பது மிகவும் பயப்பட வேண்டிய ஒரு விஷயமல்ல. இது ஒரு பொதுவான மருத்துவ நிலையே. சரியான நேரத்தில் மருத்துவரை அணுகி, முறையான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகளைப் பின்பற்றினால், இதிலிருந்து முழுமையாக விடுபடலாம். விழிப்புணர்வுடனும், சரியான தகவல்களுடனும் இந்த பிரச்சனையை எதிர்கொள்வோம்.

 

For more details, Treatments & Appointments

Please call 9443054168 / 9786901830

Vivekananda Homeopathy Clinic & Psychological Counseling Center,

விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் உளவியல் ஆலோசனை மையம்

B-12, Second Floor, Paramount Park (Dr Plaza) – B Block,

Velachery Main Road,

Direct Opposite to Saravana Stores,

Near Vijayanagar Bus Stand,

Velachery,

Chennai 42,

Cell: 94430 54168, 86102 15947, 97869 01830

https://maps.app.goo.gl/q9KMo4EwkArPY7qG9

https://homeoall.com/

https://www.psychologistcounselingcenter.com/

https://www.vivekananthahomeoclinic.com/

 

 

பிறப்புறுப்பு மருக்கள், HPV மருக்கள், Genital Warts in Tamil, HPV Warts Tamil, பாலுறுப்பு மருக்கள், HPV in Tamil, HPV வைரஸ், Human Papillomavirus Tamil, பாலியல் தொற்று, STI in Tamil, அந்தரங்க நோய், பிறப்புறுப்பு அரிப்பு, சதை வளர்ச்சி, அந்தரங்க பகுதியில் மரு, Genital Warts Symptoms Tamil, HPV அறிகுறிகள், HPV மருக்கள் சிகிச்சை, பிறப்புறுப்பு மருக்கள் தீர்வு, Warts Treatment Tamil, மருக்கள் உதிர வீட்டு வைத்தியம், ஹோமியோபதி சிகிச்சை, Homeopathy for HPV warts, Genital warts removal Tamil, HPV தடுப்பூசி, HPV Vaccine Tamil, பாதுகாப்பான உடலுறவு, HPV வராமல் தடுப்பது எப்படி

 

 

#HPVமருக்கள் #GenitalWartsTamil  #HPVTamil #பாலுறுப்புமருக்கள் #HPVwarts #HPVAwarenessTamil #HPVவிழிப்புணர்வு #பாலியல்நலம்  #SexualHealthTamil  #பெண்கள்நலம் #PengalNalam #ஆண்கள்நலம் #AangalNalam  #HPVசிகிச்சை #WartsTreatmentTamil #ஹோமியோபதிமருத்துவம் #HomeopathyTamil #மருக்கள்நீங்க #HPVதடுப்பூசி #HPVvaccineTamil #PreventHPV


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India