இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தம் என்பது இரத்தக் குழாயின் வழியாக பாய்ந்தோடும் இரத்தமானது இரத்தக்குழாய் சுவர்களில் ஏற்படுத்தும் விசையாகும். தமனி (ஆர்ட்ரீஸ்) என்பது இதயம் இறைக்கும் இரத்தத்தினை உடலில் உள்ள திசுக்கள் மற்றும் உடல் உறுப்புகளுக்கு எடுத்துச்செல்கிறது. இதயம் இரத்தத்தை தமனிக்குள் இறைப்பதினால் இந்த அழுத்தம் உண்டாகிறது. மேலும் தமனி, அதன் வழியாக செல்லும் இரத்த ஓட்டத்தைத் தேவையான அழுத்தததை செலுத்தி முறைப்படுத்துகிறது.
வழக்கமாக இரத்த அழுத்தத்தினை, இதய தசைகள் சுருங்கும்போது ஏற்படும் அழுத்தம் (சிஸ்டோலிக்) / இதய தசைகள் விரியும்போது ஏற்படும் அழுத்தம் (டயாஸ்டோலிக்) என குறிப்பிடுவர். உ-ம் 120/80. இதயம் சுருங்கும்போது காணப்படும் இரத்த அழுத்தம் எப்பொழுதும் இதயம் விரியும்போது இருக்கும் அழுத்தத்தைவிட உயர்வாகவே இருக்கும்.
சிஸ்டோலிக் இரத்த அழுத்தம் ஒரு ஆரோக்கியமான நபருக்கு 90க்கும் 120மில்லி மீட்டர் பாதரச அழுத்தம் (மிமீ பாதரசம்) இடையே உள்ள அளவிலேயே இருக்கும். அதேபோல டையாஸ்டோலிக் இரத்த அழுத்தம் 60லிருந்து 80 மிமீ பாதரச அழுத்தம் என்ற அளவில் இருக்கும். தற்போதைய பரிந்துரையின் படி, ஒருவரின் சாதாரண இரத்த அழுத்தம் 120/80 மிமீ பாதரசம் என்ற அளவிற்கு கீழாக இருக்கும் என வரையறுக்கப்பட்டுள்ளது.
குறைந்த இரத்த அழுத்தம் என்றால் என்ன?
குறைந்த இரத்த அழுத்தம் என்பது இரத்தத்தில் உள்ள அழுத்தத்தின் அளவு இருக்க வேண்டிய அளவைவிட குறைவாகவே காணப்படும்.
இரத்தக்குழாய்களின் வழியாக செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து காணப்படுவதால் இரத்த அழுத்தம் குறைந்து அதற்கான அறிகுறிகள் ஏற்படுகின்றன. இரத்தத்தின் அழுத்தம் குறையும்போது மூளை, இதயம் மற்றும் சிறுநீரகம் போன்ற முக்கிய உடல் உறுப்புகளுக்கு செல்லும் பிராணவாயு மற்றும் உணவுப்பொருட்களின் அளவு குறைவதினால் மேற்கூறிய உடல் உறுப்புகளில் நிரந்தர பாதிப்பு / சிதைவு ஏற்படுகிறது.
உயர் இரத்த அழுத்தத்தை போல் இரத்த அழுத்தம் எண்ணைக் கொண்டு, குறைந்த இரத்த அழுத்தம் வரையறுக்கப்படுவதில்லை. மாறாக, உடல் உறுப்புகளுக்கு செல்லும் இரத்தம் அளவு குறைவதினால் ஏற்படும் அறிகுறிகளைக் கொண்டு குறைந்த இரத்த அழுத்தம் வரையறுக்கப்பட்டுள்ளது. சிலருக்கு, எந்த வித குறைந்த இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் இன்றி, இரத்த அழுத்தத்தின் அளவு 90/50 (மிமீ பாதரசம்) என்ற அளவிலேயே இருக்கும். உயர் இரத்த அழுத்தம் கொண்ட நபர்களில், இரத்த அழுத்தத்தின் அளவு 100/60 (மிமீ பாதரசம்) என்ற அளவிற்கு குறையும் போது, குறைந்த இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் ஏற்படுகிறது.
குறைந்த இரத்த அழுத்தம் உள்ள நபர்கள், எழுந்து நிற்கும் போது லேசான தலைவலி, தலைச்சுற்றல் அல்லது மயங்கி விழுதல் போன்றவை
ஏற்படுகின்றன. இதனை ஆர்த்தோஸ்டாடிக் ஹைபோடென்ஷன் (எழுந்து நிற்பதினால் ஏற்படும் குறைந்த இரத்த அழுத்த நிலை) என்பர். சாதாரணமாக ஆரோக்கியமான நிலையில் உள்ள நபர்களிலும் இதுபோல் எழுந்து நிற்கும் போது இரத்தத்தின் அழுத்தம் குறையும். ஆனால் அது விரைவாக சமன்செய்யப்படுகிறது. இதயத்திற்கு இரத்தத்தை ஏந்திச்செல்லும் இரத்தக் குழாய்களில் இரத்த அழுத்தத்தின் அளவு குறையும்போது, இரத்தத்தின் அளவு குறைந்து, இதயத்தில் வலி அல்லது இதயத்தின் திசுக்களில் பாதிப்புகளும் எற்படக்கூடும். சிறுநீரகங்களுக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறையும்போது சிறுநீரகத்தின் மூலம் நம் உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படாமல் போகிறது. உதாரணமாக, யூரியா மற்றும் கிரியாட்டினின் போன்ற கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படாமல், அவற்றின் அளவு இரத்தத்தில் அதிகரிக்கிறது. தொடர்ந்து இரத்த அழுத்தத்தின் அளவு குறைந்து காணப்படுவதால், சிறுநீரகங்கள், ஈரல், இதயம், நுரையீரல் மற்றும் மூளை போன்றவை மிக விரைவாக தங்கள் செயலை இழக்கின்றன.
உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?
இரத்த அழுத்தத்தின் அளவு 130/80 என்ற அளவை விட அதிகமாக இருந்தால் அதனை உயர் இரத்த அழுத்தநிலை என கருதலாம். உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக்கொதிப்பு என்பது தமனிகளில் இரத்த அழுத்தத்தின் அளவு இயல்பை விட அதிகமாக இருக்கிறது என்று பொருட்படுத்துகிறது. உயர் இரத்த அழுத்தம் என்பது உணர்ச்சிவசப்படும் போது இரத்த அழுத்தத்தில் ஏற்படும் உயர்வினைக் குறிக்காது. இருந்தாலும் உணர்ச்சிமிக்க சூழ்நிலைகள் மற்றும் மனஅழுத்தம் இரத்த அழுத்தத்தினை தற்காலிகமாக உயர்த்துகிறது.
சாதாரணமாக இரத்த அழுத்தத்தின் அளவு 120/80 என்ற நிலையில் இருக்கும். இரத்த அழுத்தத்தின் அளவு 120/80 மற்றும் 139/89 என்ற அளவுகளுக்கு இடைப்பட்டு காணும்போது இதனை “ப்ரி-ஹைப்பர்டென்சன்” அதாவது உயர்இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முன் நிலை என்பர். இரத்த அழுத்தம் 140/90 என்ற அளவில் அல்லது அதற்கு மேல் இருந்தால் அதனை உயர் இரத்த அழுத்தம் என்பர்.
உயர் இரத்த அழுத்த நிலையில் இதய நோய்கள், சிறுநீரக நோய்கள் தமணிகளின் நீளும் தன்மை குறைந்து தமனி சுவர்கள் கடினமாதல், கண் மற்றும் மூளை பாதிக்கப்படுதல் போன்றவை ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் அதிகமுள்ளன. எனவே உயர் இரத்த அழுத்தத்தினை ஆய்ந்தரிந்து அதனை சாதாரண நிலைக்கு கொண்டுவருவதால் மேற்கூறிய சிக்கலான பாதிப்புகளை தடுக்கலாம்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 36, 90******99 ஹைப்பர் டென்சன், ரத்த அழுத்தம், பி பி, பிளட் பிரசர், Blood Pressure, Hypertension, BP, – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.