SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளும் பாலியல் உணர்வுகளும்
April 10th, 2014 by Dr.Senthil Kumar

 

இன விருத்திக்கான உடலுறுப்புகள் பொதுவாகவே அந்தரங்கமான ஒன்றாகவே எங்கும் கருதப்படுகிறது.ஒரு பெண்ணுக்கு பெண் என்பதற்கு அடையாளமான இனவிருத்தி உறுப்புகள் உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் அமைந்துள்ளன. இவை பிறப்புறுப்புகள் அல்லது இனவிருத்திக்கான உறுப்புகள் என அழைக்கப் படுகின்றன. வெளிப்பாகத்தை உல்வா என்றழைப்பர். இந்த பாகம் முழுவதையும் சிலர் யோனி என்றழைப்பதுண்டு. ஆனால் யோனி என்பது உல்வாவின் திறப்பிலிருந்து உள்ளே கர்ப்பப்பை வரை போகின்ற வழியாகும். யோனியை சில நேரங்களில் பிறப்பு வழி என்றும் அழைப்பதுண்டு.

 

பிறப்புறுப்பு– Vagina

பெண்ணுக்கு பெண் உடல் வித்தியாசப்படும். உறுப்புகளின் அளவு, வடிவம் நிறம்கூட வித்தியாசப்படும். குறிப்பாக வெளி மற்றும் உள் மடிப்புகள் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசப்படும். 

 

மார்பகங்கள் – Breasts

மார்பகங்கள் எல்லா வடிவிலும் எல்லா அளவிலும் காணப்படும். ஒரு பெண்ணுக்கு 10 முதல் 15 வயது ஆகும் போது இது வளர ஆரம்பிக்கிறது. அதாவது சிறுமியாயிருந்து பூப்படையும் பருவத்தில் இது வளர ஆரம்பிக்கிறது. கருத்தரித்த பின் குழந்தைக்கான பால் இங்குதான் உற்பத்தியாகிறது. உடலுறவின் போது இதைத்தொட்டால் பெண்ணின் யோனிக்குழாய் ஈரமாகி பெண்ணை உடலுறவுக்கு தயார்படுத்துகிறது.

 breast enlargment treatment specialist dr.senthil kumar vivekanantha clinic, velachery, chennai

மார்பகத்தின் உள்பாகம்

 

சுரப்பிகள்: குழந்தைக்கான பாலை உற்பத்தி செய்கிறது.

 

சுரப்பி குழாய்கள்: இவை பாலை மார்புக் காம்புக்கு கொண்டு செல்கிறது.

 

திறவு (Sinuses): குழந்தை பால் குடிக்கும் வரை பால் இங்குதான் சேமித்து வைக்கப்படுகிறது.

 

மார்புக்காம்பு: இதன் வழியே பால் வெளிவருகிறது. சில நேரம் இது விரைத்து வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். சில நேரம் இது தட்டையாக இருக்கும்.

 

ஏரியோலா (Areola): மார்புக் காம்பை சுற்றிய கருத்த மேடான பகுதி. கருவட்டத்தில் உள்ள மேடுகள் எண்ணெய் பசையை உற்பத்தி செய்கின்றன. அவை மார்புக்காம்பை சுத்தமாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.

 

பருவமாற்றங்களும் ஹார்மோன்களும்

ஹார்மோன்கள் உடலில் சுரக்கும் விஷேச வேதிப்பொருட்களாகும். இவை உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுப்படுத்துகிறது. ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிடாய்க்கு சற்று முன்பு எஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டெரோன் என்ற இரு ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்கள். இந்த இரு ஹார்மோன்களால் தான் பெண் பருவமடைகிறாள்.

 

பருவமடைந்த பின் மாதவிடாய் நிற்கும் வரை, ஹார்மோன்கள் பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தரிப்பதற்கான வாய்ப்பிற்கு தயார்படுத்துகிறது. இந்த ஹார்மோன்களின் ஆணைப்படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் ஒரு முட்டையை வெளியிடுகின்றன. ஒரு பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாய் விளங்குகின்றன. பல குடும்ப கட்டுப்பாட்டு வழிமுறைகள் இந்த ஹார்மோன்களை கட்டுப்படுத்துவது மூலம் நடக்கிறது. கருத்தரித்த பின்பும், தாய்பால் ஊட்டும் போதும் கூட ஹார்மோன்கள் பல மாற்றத்தை உண்டாக்குகின்றன. இந்த ஹார்மோன்களால் தான் கர்ப்பமாயிருக்கும்போது மாதவிடாய் வருவதில்லை. குழந்தை பிறந்த உடனே பால் சுரக்க வைப்பதும் இந்த ஹார்மோன்கள்தான்.

 

ஒரு பெண் இன விருத்திக்கான கட்டத்தை கடக்கும்பொழுது, இந்த இரு ஹார்மோன்களும் சுரப்பது படிப்படியாக குறையும். சினைப்பைகளும் முட்டையை வெளியிடாது. அவள் உடலில் கருத்தரித்த லுக்கான நிலை முடிந்து போகும். மாதவிடாய் முற்றிலுமாக நின்று போகும். இதற்கு பெயர் தான் “மாதவிடாய் நின்றுவிடுதல்” (Menopause)

 

அதைத் தொடர்ந்து பெண்ணின் உட லில் சுரக்கும் ஹார்மோன்களின் தன்மை மற்றும் அளவுக்கேற்ப அவளின் மனநிலை, காம உணர்வு, எடை, உடல்சூடு, பசி மற்றும் எலும்பின் சக்தி ஆகியவற்றிலும் மாற்றம் ஏற்படும்.

 

மாதவிடாய் – Menses

ஒரு பெண் இனவிருத்திக்கான காலக்கட்டத்தில் இருக்கும்பொழுது, ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் அவளின் கர்ப்பப் பையிலிருந்து இரத்தம் யோனிக் குழாய் வழியாக உடலை விட்டு வெளியேறு கிறது. இதற்கு பெயர்தான் மாதவிடாய். மாதவிடாய் நடப்பது உடல் நல்ல நிலையில் இருப்பதற்கு அடையாளம். இதன் மூலம் உடல் கருத்தரித்தலுக்கு தயாராகிறது. இந்த மாதவிடாயை பல பெண்கள், தங்கள் வாழ்வின் ஒரு அம்சமாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் பலநேரங்களில் அவர்களுக்கு இது ஏன் நிகழ்கிறது? இந்த மாற்றம் ஏன் ஏற்படுகிறது என்றெல்லாம் தெரிவதில்லை.

 

மாதாந்திர சுற்று  – மாதவிடாய் சுற்று –  Menstrual Cycle

மாதாந்திரச் சுற்று ஒவ்வொரு பெண் ணுக்கும் வித்தியாசப்படும். இரத்தப்போக்கு வரும் முதல் நாள் இது தொடங்குகிறது. பெரும்பாலான பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை இந்த ரத்தப்போக்கு ஏற்படும். சில பெண்களுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை கூட இது ஏற்படும். சில பெண்களுக்கோ 45 நாட்களுக்கு ஒருமுறைதான் இது நிகழும். மாதவிடாய் சுற்றின்போது, ஒவரியில் சுரக்கும் எஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ் டெரான் ஹார்மோன்களின் அளவு மாறிக் கொண்டேயிருக்கும். மாதச்சுற்றின் முதல் பாதியில் பெரும்பாலும் சினைப்பையில் ஈஸ்ட்ரோஜன்தான் சுரக்கும். இதனால் கருப்பையின் உட்சுவரில் ரத்தம் மற்றும் திசுக்களாலான மிருதுவான படலம் உருவா கிறது. ஒரு வேளை பெண் கருத்தரித்தால் உருவாகும் குழந்தை இந்த மிருதுவான கூட்டில் சுகமாக இருக்கும்.

 

மாதச்சுற்றின் மத்தியில், கருப்பையின் மிருதுவான உட்சுவர் தயார் ஆன உடன், ஏதாவது ஒரு சினைப்பையில் இருந்து முட்டை ஒன்று வெளியேறும். இம்முட்டைஃபெலோப்பியன் குழாய் வழியாக கருப்பையை அடையும். அப்போது பெண் கருத்தரிக்க ஆயத்த நிலையில் இருப்பாள். அப்போது பெண் உடலுறவுக் கொண்டாள், ஆணின் உயிரணு முட்டையோடு சேர வாய்ப்புண்டு. இதற்கு கருத்தரித்தல் எனப்பெயர். அது கர்ப்ப காலத்தின் தொடக்கமும் ஆகும். மாதச்சுற்றின் இரண்டாம் பாகத்தில், அதாவது அவளது அடுத்த மாதவிடாய் தொடங்கும் வரை அவள் உடல் புரோஜெஸ்டொரோன் ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹர்மோனும் கருத்தரிதலுக்கு ஏதுவாக கருப்பையின் மிருதுவான உட்சுவரை உருவாக்குகிறது.

 

பெரும்பாலான மாதங்களில் பெண்ணின் முட்டை கருத்தரிக்காது. எனவே கருப்பையின் சுவர்ப்படலத்துக்கு தேவையிருக் காது. சினைப்பைகளும், ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்தி விடும். இதன் விளைவாய் சுவர்படலமானது உடைந்து சிதையும். உடைந்து சிதைந்த இரத்தக்குழம்பு கருப்பையிலிருந்து மாதவிடாயின்போது, உடலை விட்டு வெளியேறும். இதனோடு கூடவே முட்டையும் வெளியேறும். இது புதியமாதாந்திர சுற்றின் தொடக்கமாகும். மாதவிடாய் நின்ற உடன் சினைப்பைகள் சுவர்ப்படலம் உருவாகும். பெண்களுக்கு வயதாகி, மாதவிடாய் முற்றிலுமாக நிற்பதற்கு முன்பு இரத்தப்போக்கு அடிக்கடி ஏற்படலாம். இரத்தப்போக்கின் அளவும், இளமையாய் இருந்தபோது உண்டானதைவிட அதிகமாக இருக்கலாம். மாதவிடாய் நிற்கப் போகும் காலத்தில் (மெனோபாஸை நெருங்கும் சமயத்தில்), மாதவிடாய் சில மாதங்கள் நின்று மீண்டும் தொடங்கலாம்.

 

பெண்ணின் இனவிருத்தி உறுப்பின் வெளிப்பாகங்கள்

 


female sexual dysfunction treatment specialist Vivekanantha homeopathy clinic & psychological counseling center, Velachery, Chennai, panruti, cuddalore, Pondicherry, villupuram, Dr.senthil kumar best homeopathy specialist & famous psychologist in tamilnadu, india,

 

உல்வா (Vulva): உங்கள் இரு தொடைகளுக்கு இடையே காணப்படும் இனவிருத்தி உறுப்புகள்

 

வெளிமடிப்புகள் (Labia Majora): தடித்த சதைப் பகுதி கால்கள் ஒன்றாக இருக்கும்பொழுது இவை மூடிக்கொள் ளும். இது உள் பாகங்களை பாதுகாக்கிறது.

 

உள்மடிப்புகள் (Labia Minora): இது மிருதுவான தோல்பகுதி. இதில் முடி இருக்காது. தொட்ட உடனே உணர்ச்சி வரும். உடலுறவின் போது இப்பாகம் விரிவடையும். இதன் நிறம் கருமையாகும்.

 

யோனிக் குழாயின் திறப்பு (Vaginal Opeoing): யோனியின் திறப்பு வாயில்

 

ஹைமன் (Hymen): யோனியின் திறப்பில் உள்ளே அமைந்துள்ள மெல்லிய சதைப் பகுதி. கடின வேலை விளையாட்டு போன்ற நடவடிக்கைகளின் போது இத்தோல் பகுதி விரிவடையும் அல்லது கிழிபடலாம். அப்போது லேசாக இரத்தம் வரும். முதன்முறையாக உடலுறவின் போதும் இது கிழிபடலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஹைமன் வித்தியாசப்படும். சில பெண்களுக்கு ஹைமன்னே இருக்காது.

 

மோன்ஸ் (Mons): முடிகள் அடர்ந்த, உல்வாவின் தடித்த மேல் பகுதி.

 

கிளிட்டோரிஸ் (Clitoris): மலர்மொட்டு போன்று சிறு பாகம். உல்வாவின் பாகங்களிலேயே மிகுந்த உணர்ச்சி தரக்கூடியது. இதையும் இதைச் சுற்றியுள்ள பகுதியையும் தேய்த்தால் பெண்ணுக்கு பாலியல் வேட்கை அதிகமாகி உச்சக் கட்டத்தை அடைவாள்.

 

சிறுநீர்த்துவாரம்(Urethral Opening): சிறுநீர் குழாயின் வெளித்திறவு வாயில். சிறுநீர்ப் பையில் சேமிக்கப்பட்டுள்ள சிறுநீர் இக்குழாய் வழியேதான் உள்ளிருந்து வெளியே வருகிறது.

 

ஆசனவாய் (Anus): குடல்வாய் திறப்பு, கழிவு (மலம்) இதன் வழியாக வெளியேறும்

 

பெண்ணின் இனவிருத்தி உறுப்புகளின் உட்பாகங்கள்

 

female sexual dysfunction treatment specialist Vivekanantha homeopathy clinic & psychological counseling center, Velachery, Chennai, panruti, cuddalore, Pondicherry, villupuram, Dr.senthil kumar best homeopathy specialist & famous psychologist in tamilnadu, india, Female Reproductive System

 

சினைப்பை (Overies): ஒவ்வொரு மாதமும் சினைப்பையிலிருந்து ஒரு முட்டை பெலோப்பியன் குழாய்க்கு அனுப்பப்படுகிறது. ஒரு ஆணின் விந்தணு இதோடு இணையும் பொழுது அது குழந்தையாக உருப்பெற துவங்கு கிறது. ஒரு பெண்ணுக்கு இரு சினைப்பைகள் இருக்கும் கருப்பையின் இரு புறமும் ஒவ்வொன்றும் இருக்கும். ஒவ்வொரு சினைப்பையும் ஒரு திராட்சைப்பழ அளவில் இருக்கும்.

 

கர்ப்பப்பைவாய் (Cervix): கருப்பையின் வாயைத் தன் கர்ப்பப்பைவாய் என சொல்கிறோம். கருப்பையின் இத்திறப்பு யோனிக்குள் செல்கிறது. ஆணின் உயிரணு கர்ப்பப்பைக்குள் கர்ப்பப்பை வாயில் உள்ள சிறுதுவாரம் வழியே உள்ளே நுழைகிறது. அதே நேரத்தில் ஆண்குறி போன்ற மற்றவை கருப்பையில் நுழைய முடியாதபடி இது தடுக்கிறது. குழந்தைப் பிறப்பின்போது, இது திறந்து குழந்தை வெளியே வர உதவுகிறது.

 

.ஃபெலோப்பியன் குழாய்கள் (Fallopian Tubes): இக்குழாய்கள் சினைப்பையையும் கர்ப்பப்பையையும் இணைக்கிறது. சினைப்பை ஒரு முட்டையை வெளியிடும் போது, அம்முட்டை இக்குழாயில் பயணம் செய்து கருப்பையை அடைகிறது.

 

கர்ப்பப்பை (Uterus): உள்ளே வெற்றிடத் தைக் கொண்ட தசையாலான பகுதி மாதவிடாயின் போது இங்கிருந்து தான் இரத்தம் வெளியேறுகிறது. கருத்தரித்த பின் குழந்தை இங்குதான் வளர்கிறது.

 

யோனிக் குழாய் அல்லது பிறப்புவழி (Vaginal Wall) : உல்வா (Vulva)விலிருந்து கர்ப்பப்பைக்கு செல்லும் பாதைதான் யோனிக் குழாய். இதன் தோல் பகுதி விஷேசமானது. உடலுறவின் போதும் குழந்தைப் பிறப்பின்போது இத்தோல் பகுதி சுலபமாக விரிவடை கிறது. இதிலிருந்து வெளிப்படும் திரவம் அல்லது ஈரம் யோனிக்குழாயை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், கிருமிகள் தாக்காமலும் பாதுகாக்கிறது.

 

 

பெண்களின் பாலியல் உணர்வுகள்

வளர்கின்ற பருவத்தில் பெரும்பாலான பெண்களுக்கு காதல் மற்றும் காம உணர்வுகள் வரத்தான் செய்யும். தாங்கள் யாரையாவது தொடவேண்டும் அல்லது யாராவது தங்களை தொடவேண்டும் என்று அவர்கள் இச்சையுடன் நினைப்பது சாதாரண விஷயம்தான்.

 

பெண்கள் உடலுறவில் ஈடுபட பல காரணங்கள் உண்டு. சிலர் குழந்தைவேண்டி உடலுறவில் ஈடுபடுகிறார்கள். சிலருக்கு உடலுறவு சந்தோஷம் அளிப்பதாய் உள்ளது. சிலருக்கு அது தேவைப்படுகிறது என்பதனால் உடலுறவில் ஈடுபடுகிறார்கள். சிலர், அதில் விருப்பம் உண்டோ, இல்லையோ, மனைவி என்ற அடிப்படையில், கடமை போல் அதில் ஈடுபடுகிறார்கள். சிலர் பணத்திற்காக அல்லது வாழ்க்கையில் உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு அல்லது தனது குழந்தைகளுக்கு உடைகள் வாங்குவதற்காக அல்லது தங்க இடம் வேண்டி கட்டாயப்படுத்தப்பட்டு அதில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

 

மற்ற பெண்கள் தன்னுடைய துணைவன் தன்னை அதிகம் நேசிக்கவேண்டும் என்பதற்காக உடலுறவில் ஈடுபடுகிறார்கள். சில நேரங்களில், பெண்ணின் நண்பனோ அல்லது காதலனோ, பெண் தயாராக இல்லாதபோது கூட அவனுடன் உடலுறவு கொள்ளவேண்டும் என வலியுறுத்தி அவளை ஏற்றுக்கொள்ளச் செய்கிறான்.

 

தான் விரும்பாத பொழுது, எந்த ஒரு பெண்ணும் உடலுறவின் ஈடுபடக்கூடாது. தான் அதற்கு தயார் என்று பெண்ணாகிய நீங்கள் முடிவு செய்த பின்னரே அதில் ஈடுபட வேண்டும். உடலுறவு என்பது, அதில் ஈடுபடும் இருவருக்குமே மகிழ்ச்சி தரக்கூடியது. ஆனால் அதில் பயமோ, வெட்கமோ இருக்கும் பட்சத்தில் அந்த மகிழ்ச்சி கிடைப்பது கடினம். உடலுறவுக்கு நீங்கள் தயாரானவுடன், கருத்தரித்தல் மற்றும் பால்வினை நோய்களி லிருந்து உங்களை எப்போதும் பாதுகாத்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

 

 

 

 

 

 

==–==

 


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India