பெண்களின் சின்ன சின்ன எதிர்பார்ப்புகள்
அன்பும், அரவணைப்பும் நிறைந்த வாழ்க்கைதான் நிறைவானது என்று பெரும்பாலான பெண்கள் கருதுகின்றனர். தன் வாழ்க்கைத் துணைவரிடம் இருந்து வெறும் உடல்ரீதியான தொடர்பை மட்டுமே அவர்கள் விரும்புவதில்லை. நேசம் மிகுந்த வார்த்தைகளைத்தான் பெண்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். இந்த விசயம் ஆண்களுக்குத் தெரியாமல் போகும்போதுதான் கருத்து மோதல்கள் ஏற்பட்டு விரிசல்கள் தோன்றுகின்றன. பெண்களின் மனதை புரிந்து கொண்டு உரிமையோடு நேசத்தை வெளிப்படுத்தினால் உறவுகள் வலுப்படும்.
ஆறுதலாய் பேசுங்கள்
- பேச்சுதான் பெண்களின் விருப்பத்திற்குரிய செயல். திருமணத்திற்கு முன்பு வரை உறவுகளோடும், நண்பர்களோடும் சந்தோசமாய் பேசிக்கழித்த பொழுதுகள் அடிக்கடி பெண்களின் நினைவுகளில் நிழலாடும். இது போன்ற சமயங்களில் ஆறுதலாய் பேசினால் அது பெண்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும். உங்களின் காதலையும், அன்பையும் முதலில் பேச்சின் மூலம் வெளிப்படுத்துங்கள். நடந்து கொண்டே படிப்பது எத்தனை சுகமானதோ, அதுபோல இல்லறத் துணையுடன் நடந்து கொண்டே பேசுவது இனிமையானது. நீண்ட தூரம் நடந்தபடி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த நடை பேச்சு உதவும்.
இதய சிம்மாசனம்
- திருமணம் செய்தவர்களின் வாழ்க்கையில் உடலுறவு என்பது பிரிக்க முடியாதது. எந்த வித வருத்தமும், வலியும் இன்றி அதனை அனுபவிக்க வேண்டும். இந்த விசயத்தில் பெண்களை ஜெயித்த ஆண்கள் நிரந்தரமாக பெண்களின் இதய சிம்மாசனத்தில் அமரலாம். தனது வாழ்க்கைத் துணைவர் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து பெண்களுக்குமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். பல விசயங்களை அவர்கள் மனதுக்குள் கற்பனை செய்து பார்த்திருப்பார்கள். எனவே எனவே உறவுக்கு முன்பும் சரி, உறவின்போதும் சரி ஆண்கள் பெண்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.
விளையாட்டாக விளையாடுங்கள்
- பெண்களைப் பொறுத்தவரை மன ரீதியான திருப்தியையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஆண்களோ, காரியம் முடிந்தவுடன் மறந்து விடுவார்கள் சற்று முன் நடந்ததை. ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அந்த இனிய உணர்வின் நினைவுகளில் சில மணி நேரங்களாவது மூழ்கிக் கிடப்பார்கள். மடியில் தலைசாய்ப்பது, விரலால் தலைகோதுவது, அன்பான, ஆறுதலான முத்தம், என சின்னச் சின்ன ரொமான்ஸ்கள் பெண்களுக்குப் பிடித்தமானவை.
இவற்றை நிறைய பேர் நிறைய செய்வதில்லை. இதில்தான் சிக்கலே ஆரம்பிக்கிறது. நேரடியாக விஷயத்தை தொடங்குவதை விதம் விதமான முன் விளையாட்டுகளை விளையாடுங்கள். இந்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்தாலே உறவுகளில் விரிசல் விழ வாய்ப்பில்லை.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:– 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
==–==
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.