SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
பெண்களுக்கு கை கால்களில் அதிக முடி வளர்ச்சி இருந்தால் பாலுணர்வு குறையுமா? இதற்கு சிகிச்சை உண்டா?
February 14th, 2014 by Dr.Senthil Kumar

 

Hair leg women treatment in chennai velachery, vivekanantha clinic, dr.senthil kumar panruti,

 

கேள்வி: மருத்துவர் அவர்களுக்கு வணக்கம். 23 வயது திருமணமாகாத பெண் நான், எனக்கு கை, கால்களில் அடர்த்தியான கருமையான முடி உள்ளது. இதனால் எனக்கு பாலுணர்ச்சியே இருக்காது என்று என் நண்பர்கள் கூறுகிறார்கள். ஆனால் எனக்கு காம உணர்வுகள் சாதாரணமாகவே உள்ளது. இதுவரை உடலுறவு கொண்டதில்லை, இதனால் உடலுறவு கொள்ளும் போது ஏதேனும் பாதிப்பு வருமா? பெண்களுக்கு கை கால்களில் அதிக முடி வளர்ச்சி இருந்தால் பாலுணர்வு குறையுமா? இதற்கு சிகிச்சை உண்டா? தயவுசெய்து பதில் கூறவும். நன்றி.

 

பதில்: பெண்களுக்கு இயல்பாக தலையில்தான் அடர்த்தியான முடி வளர்ச்சி இருக்கும். அக்குள், பெண்ணுறுப்பு பகுதியிலும் முடி வளரும். கை கால்களின் மெல்லிய பூனை முடி போன்றிருப்பதும் இயல்பானது. ஆனால் பெண்களின் மேலுதட்டிலும், தாடையிலும் வேறு சில  பாகங்களிலும் உண்டாகும் அடர்த்தியான முடி வளர்ச்சி இயல்புக்கு மாறானது.

 

பெண் ஹார்மோன்களும், ஆண்  ஹார்மோன்களும் இரு பாலினரிடமும் சுரக்கும். இவற்றின் விகிதங்களில்  வேறுபாடுகள் உண்டாகும்போது ஆண் ஹார்மோன்களின் செயல்பாட்டினால் பெண்களின்  முகத்திலும் வேறு சில இடங்களிலும் முடி வளர்கிறது. இதற்கு மரபுக் கூறுகளும்  ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஸ்டீராய்டு மருந்துகள், கர்ப்பத்தடை  மாத்திரைகள், போன்றவற்றை தொடர்ந்து உட்கொண்டாலும் இதைப்போன்ற தேவையற்ற முடிவளர்ச்சி உண்டாகலாம். அட்ரீனல் சுரப்பி கோளாறு காரணமாக சில  ஹார்மோன்கள் அதிகப்படியாக சுரப்பதால் அதிக முடி  வளர்ச்சியுண்டாகிறது. அட்ரீனல் சுரப்பிக் கோளாறை சிகிச்சையினால்  சரிசெய்யலாம். மேலும் மேற்குறிப்பிட்ட மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்க  வேண்டும்.

 

அதிக முடி வளர்ச்சியுள்ள பெண்களுக்குப் பாலுணர்வு ஆசைகள் குறையவும் வாய்ப்புண்டு.

 

சரியான சிகிச்சை மேற்கொண்டால் நல்ல பலன் பெறலாம்.

 

தயங்காமல் மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை மேற்கொள்ளவும்

 

வாழ்த்துகள்

 

 

 

 

சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்

சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை &  சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

 

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

புதுச்சேரி:- 9865212055

பண்ருட்டி:- 9443054168

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

 

 

Get Appointment

==–==

Feel Free to Contact us 
* indicates required field

 

low libido women having more hair in hand and leg, excessive hair in female body  sex problem, more hair in hand leg sex issue, low sex activities women hair in body.


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India