SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
மதுப்பழக்கம் ஆண்மையை குறைக்குமா?
January 31st, 2014 by Dr.Senthil Kumar

 

alcoholism-do-not-cross-the-line_1

கேள்வி: மருத்துவருக்கு வணக்கம். எனக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. மது அருந்திவிட்டு உடலுறவில் ஈடுபட்டால் நீண்ட நேரம் ஈடுபடுவது போல இருக்கிறது. ஆனால் என் மனைவிக்கோ திருப்தியே இல்லை இது ஏன்? மேலும் எனக்கு இப்போது விரைப்புத்தண்மை குறைவாக உள்ளது. நான் மது அருந்தும் பழக்கத்திலிருந்து விடுபடவேண்டும். மேலும் எனக்கு ஆண்மை அதிகரிக்கவேண்டும். இதற்கு மருந்துகள் இருக்கிறதா டாக்டர்?

 

மருத்துவர் பதில்: மதுபானங்கள்  உடலில் ஹார்மோன்களை வேகமாக சுரக்கச் செய்யும் தன்மை வாய்ந்தவை. இயற்கைக்கு மாறாக நரம்புகளைச் சுண்டிவிடும். அதனால்தான் போதை மருந்து உட்கொண்டு விளையாட்டில் வெற்றி பெறுபவரை வெளியேற்றி விடுகின்றனர்.

 

அதேபோல் செக்சிலும், மதுபானங்கள்  சில நேரங்களில் உணர்ச்சியைத் தூண்டினாலும் தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது, நம் உடல் தன் நிலையை மறந்துவிடத் தொடங்குகிறது.

ஆல்கஹால் உணர்ச்சியைத் தூண்டுவது போன்று தெரிந்தாலும் மன நிறைவை ஏற்படுத்தாது. அதேபோல் உச்சகட்டத்தைப் பெறவும் உதவாது. சில சமயங்களில், அந்த நிலையையே தடுத்துவிடும் ஆற்றல் படைத்தது.

 

மன உளைச்சலை தவிர்க்க சிலர் மதுபானங்களை அருந்துவார்கள். மன உளைச்சலைக் குறைக்கும் சில மருந்துகளுக்குக் கூட செக்ஸ் உணர்வை குறைக்கும் தன்மை உள்ளது. இதுபோன்ற மருந்து வகைகள், ‘சிரோட்டி னின்’ அளவைக் கூட்டுகின்றன. அதேசமயம்,‘டெஸ்ட்ரோன்கள்’ வேலையைக் குறைக்கிறது. ‘டெஸ்ட்ரோனே‘ செக்சைத் தூண்டும் முக்கிய ஹார்மோன் என்பது நாம் அறிந்ததே. அண்மைக் காலங்களில், கருத்தரிப்பைத் தடுக்க பல்வேறு கருத்தடை மருந்துகள் உட்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக ‘புரோஜஸ்டின்’ எனப்படும் மருந்து வகையை உட்கொள்ளும் பொழுது, செக்ஸ் உணர்வு, குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.

 

மதுவும் உடலின் நரம்புடன் நேரடியாக தொடர்பு கொள்வதால், முதலில் மகிழ்ச்சியாக இருக்கும்.ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, நரம்பு மண்டலத்தை  சோர்வடையச் செய்துவிடும். குறிப்பாக, ஆண்கள் அதிக அளவில் மதுவை உட்கொள்ளும்பொழுது அவர்களை மயக்க மடையச் செய்கிறது. என்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல் அவர்களை மாற்றி விடுகின்றது.

 

நரம்புமண்டலத்தை தூண்டி விருப்ப மற்ற  உச்சக்கட்டத்தை செக்சில் ஏற்படுத்தி விடுகிறது. மது நேரடியாகவே அந்த குறிப்பிட்ட மண்டலத்தை தாக்குகின்றது. எனவேதான் “மது அருந்தியவர்களால் இரவில் செக்சில் ஈடுபட முடியும். ஆனால் அதுமுடிந்ததும் துனைவிக்கு மகிழ்ச்சி  இருக்குமோ என்று பார்த்தால் இல்லை என்றே கூறுவார்கள்.  

 

செக்சில் இருவரும் தங்கள் விருப்பங்களைத் தெளிவான முறையில் தெரிவித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், சிக்கல்தான்! சிக்கல் தோன்றிவிட்டால் பிறகு எப்படி முழுமையான இன்பத்தைப் பெறமுடியும்? மன உளைச்சல் ஏற்படும். மன உளைச்சல் ஏற்பட்டால் மற்ற வேலைகளையும் பாதிக்கும். செக்சில் நிறைவைப் பெற விடாமல் தடுக்கக்கூடிய முக்கிய காரணிகளில் ஒன்றான மதுபானத்தை தவிர்ப்பது செக்சிற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பயனளிக்கக் கூடியதாகும்.

 

மேலும் தற்போது மதுபானத்தை நிறுத்தவும், உடலுறவின் நேரத்தை நீட்டிக்கவும், விந்து முந்துதலை தவிர்க்கவும், விரைப்புத்தண்மையை அதிகரிக்கவும் பாதுகாப்பான பக்கவிளைவுகளற்ற மருந்துகள் உள்ளன. மருத்துவரின் பரிந்துரை பேரில் இவற்றை உட்கொண்டால் மது பழக்கத்திலிருந்து விடுபட்டு, உடலுறவில் எந்த குறையுமின்றி ஈடுபடலாம். எனவே உடன் மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை பெறவும்.

 

 

 

சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்

சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் பலர் சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

 

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை: 9786901830

புதுச்சேரி:- 9865212055

பண்ருட்டி:- 9443054168

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

 

Get Appointment

==–==

Feel Free to Contact us 
* indicates required field

 

alcohol sex problem, drinking and sex problem, drinks panna sex panna mudiyala, impotency alcohol problem, 


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India