மாதவிடாய் கோளாறுகள் – Irregular Menstruation
மாதந்தோறும் பெண்களுக்கு ஏற்படும் இயற்கையான நிகழ்வுதான் மாதவிலக்கு. ஆனால் இது சீராக இல்லாவிட்டாலும் உடல் உபாதைகளை ஏற்படுத்தினாலும் பெண்களின் உடல் மற்றும் மனம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. சிறுமிகளுக்கும், கர்ப்பம் தரித்தவர்களுக்கும், பூப்பு முதிர்வு ஏற்பட்டவர்களுக்கும் மட்டுமே தடைபட்டு இருக்க வேண்டிய மாத விலக்கானது, சாதாரண இளம்பெண்களுக்கு சீராக வரவில்லையெனில் கருப்பை, சினைப்பை மற்றும் நாளமில்லா சுரப்பிகள் போன்றவற்றின் ஹார்மோன் குறைபாடுகள் காரணமாக இருக்கலாம். அது மட்டுமின்றி அதிக எடை, உடல்பருமன், ஊட்டச்சத்தின்மை, பரம்பரை, மன அழுத்தம் போன்ற பல காரணங்களாலும் மாதவிலக்கு தடைபடலாம். சில நேரங்களில் மாதவிலக்கு ஏற்பட்டாலும் ரத்தப் போக்கு குறைவாகவே இருக்கலாம். இதனால் பெண்களின் இயல்பான உடல்வாகு மற்றும் உடல் செயல்பாடு மாற்றமடைந்து, தோற்றத்திலும் குணத்திலும் பல தொல்லைகள் உண்டாகின்றன.
மாதவிலக்கு சீராக இல்லையெனில் உடல் பெருத்தல், தேவையற்ற கொழுப்பு இடுப்பு, கழுத்து, மார்பு, தொடை போன்ற பகுதிகளில் அதிகரித்தல் ஆகியன ஏற்படுகின்றன. திருமணமான பெண்களுக்கு இதனால் குழந்தைப்பேற்றிலும் தாமதம் ஏற்படுகின்றன. மாதவிலக்கின்பொழுது ரத்தப்போக்கு சீராக இல்லையெனில் கருப்பையின் தசைப்பகுதிகள் தடித்து, அழற்சி ஏற்பட்டு, கடுமையான வலி மற்றும் மார்பு இறுக்கம் ஏற்படலாம்.
இயல்பான பெண்களுக்கு 3 முதல் 7 நாட்கள் சீரான ரத்தப்போக்குடனும் லேசான வயிறு மற்றும் தொடை வலியுடன் கூடிய மாதவிலக்கு இருக்கவேண்டியது அவசியமாகும்.
அதிகமான கொழுப்பு சார்ந்த உணவுகளையும், நொறுக்குத் தீனிகளையும் தவிர்த்து, மாதவிலக்கான நாட்களைத் தவிர பிற நாட்களில் சீரான நடைப்பயிற்சியும், உடற்பயிற்சியும் இருந்தால் மாதவிலக்கில் சிக்கல்கள் ஏற்படுவதில்லை. மாதவிலக்கில் தொல்லை உள்ளவர்கள் உடல்பருமன் அதிகரிக்காமல், பன்முறை உணவு உண்ணாமல் இருப்பது நல்லது.
மாதவிடாய் கோளாறுகள் – Irregular Menstruation ஹோமியோபதி சிகிச்சை
நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சைமாதவிடாய் கோளாறுகளுக்கு– Irregular Menstruation
நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.
மாதவிடாய் கோளாறுகள் – Irregular Menstruation ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற மாதவிடாய் கோளாறுகள் – Irregular Menstruation நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு:உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 28 – 99******00 – குழந்தையின்மை – மாதவிடாய் கோளாறுகள் – Irregular Menstruation – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.