கேள்வி: மருத்துவர் அவர்களுக்கு வணக்கம், குடும்பப்பிரச்சனையினாலும், கடன் தொல்லையினாலும், தொழில் நஷ்டத்தினாலும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இதனால் படபடப்பு, தலைவலி, வயிற்றுவலி, பசியின்மை, எளிதில் சோர்வு, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் புதிதாக எனக்கு வந்துள்ளது. மன உளைச்சல் ஏற்பட்டால் என்ன என்ன விளைவுகள் உடலிலும் மனதிலும் தோன்றும்? மன உளைச்சலை தவிர்ப்பது எப்படி?
பதில்: நீங்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிஉள்ளீர்கள். இதனால் தான் உங்களுக்கு இந்த பிரச்சனைகள் உருவாகிஉள்ளது.
தீவிர மன உளைச்சலின் அறிகுறிகள்,
- தீவிர மன உளைச்சல், இதயத்தை வேகமாக துடிக்க வைக்கலாம்.
- தசைகளை இறுக வைக்கலாம். தலைவலி, வயிற்றுவலி போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
- பசியின்மை ஏற்படலாம் அல்லது அதிகமாக சாப்பிட வைக்கலாம்.
- தூக்கம் வராமல் தவிக்க வைப்பதும் உண்டு.
- எளிதில் சோர்வு உண்டாகும்.
- தேவையில்லாமல் பிறரிடம் எரிந்து விழத்தோன்றும்.
மாரடைப்பு, நரம்புத் தளர்ச்சி, மனநோய் என்று பல பிரச்சனைகளை நமக்கு ஏற்படுத்தக்கூடிய மனஉளைச்சலை தவிர்ப்பது எப்படி என்று பார்ப்போம்.
உங்கள் நேரத்தை நன்கு திட்டமிட்டுச் செலவிடுங்கள்
- உங்கள் வாழ்க்கையை மேலும் ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யவேண்டிய எல்லா காரியங்களையும் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். முக்கியத்துவப்படி அவற்றை வரிசைப்படுத்துங்கள். ஒவ்வொரு காரியத்துக்கும் எவ்வளவு நேரத்தைச் செலவிடுவது என்பதை முடிவு செய்யுங்கள்.
மாற்றங்களைப் படிப்படியாக மேற்கொள்ளுங்கள்
- ஒரு மாற்றத்திலிருந்து இன்னொரு மாற்றத்திற்குப் போதுமான இடைவெளி கொடுங்கள். உதாரணத்திற்கு, திருமணம் செய்வது, வீடு வாங்குவது, வேலையை மாற்றுவது ஆகிய எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டாம்.
உங்களால் முடிந்ததை மட்டும் செய்யுங்கள்
- உங்கள் திறமை, ஈடுபாடு ஆகியவற்றை உணர்ந்துகொண்டு அவற்றிற்கு ஏற்ற வேலையைத் தேர்ந்தெடுங்கள். சாதிக்கக்கூடிய இலக்குகளை வகுத்துக் கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் எரிச்சலையும், சோர்வையும் தவிர்க்கலாம்.
விவேகத்துடன் முடிவெடுங்கள்
- தேவைப்படும் எல்லா தகவல்களையும் முதலில் திரட்டிக் கொண்டு பிறகு முடிவெடுங்கள். முக்கிய முடிவுகளை நன்கு ஆலோசித்துவிட்டு எடுக்க வேண்டும். உங்கள் முடிவால் பாதிக்கப்படுவோரையும் கலந்து ஆலோசியுங்கள்.
நீங்கள் எப்படி இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளுங்கள்
- உங்கள் தோற்றம், உயரம், நிறம் இவற்றைப் பற்றி அதிகம் கவலைப்படாதீர்கள். மாற்ற முடியாததை ஏற்கப் பழகிக் கொள்ளுங்கள்.
ஆக்கப்பூர்வமாகச் சிந்தியுங்கள்
- தேவையில்லாத எண்ணங்களை வளர்த்துக் கொள்ளாதீர்கள். அந்த எண்ணங்களுக்கான காரணத்தை அறிய முயற்சி செய்து அவற்றைக் களையுங்கள். சிறு நிகழ்ச்சிகளை அளவுக்க மீறி பெரிதுபடுத்த வேண்டாமே.
உங்கள் பிரச்னைகளை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
- உங்களது கவலைகளையும், பிரச்னைகளையும் மனதுக்குள் தேக்கி வைக்காதீர்கள். உங்கள் மனைவி அல்லது கணவர், நண்பர், மேலதிகாரி அல்லது சமயத்தலைவர் ஆகியோரிடம் பேசுங்கள். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சூழ்நிலை ஒருவேளை அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். பிரச்னை தீர அவர்கள் யோசனை வழங்கலாம்.
மகிழ்ச்சிகரமான குடும்பத்தை உருவாக்குங்கள்
- குடும்ப உறுப்பினர்களிடம் அன்பும் பரிவும் அடக்கமும் காட்டுங்கள். நண்பர்களிடம் எப்படி நடந்துகொள்வீர்களோ, அதேபோல் அவர்களிடம் நடந்து கொள்ளுங்கள். சிரமமான நேரங்களில் அவர்கள் ஆதரவு வழங்குவார்கள். அவர்களுடன் பேச, விளையாட அல்லது உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க நேரத்தை ஒதுக்குங்கள்.
நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்
- மகிழ்ச்சிகரமான குடும்பம் தேவைப்படுவது போலவே, நண்பர்களும் தேவை. அவர்களின் கருத்துக்களை மதியுங்கள். குறைகளைப் பொறுமையுடன் அணுகுங்கள். சில நேரங்களிலாவது விட்டுக்கொடுங்கள் – நீங்கள் சொல்வதுதான் சரியென்ற போதிலும்.
ஆரோக்கியமாக வாழுங்கள்
- உடற்பயிற்சி, முறையான உணவு, போதுமான தூக்கம் ஆகியவற்றின் மூலம் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். மன உளைச்சலைப் போக்க என்றபடி சிகரெட்டையோ, மதுவையோ ஒருபோதும் நாடிச் சொல்லவேண்டாம்.
உங்களுக்காகக் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள்
- நாணயம் சேகரிப்பதோ, எழுதுவதோ அல்லது விளையாடுவதோ – உங்களுக்கு உண்மையிலேயே பிடித்த ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள். ஓய்வெடுத்துக் கொள்வதுகூட உங்களுக்கான நேரம்தான்.
சில ஆசுவாச முறைகளைப் பழகிக் கொள்ளுங்கள்
ஆழமாக மூச்சுவிடுவது, தியானம், தசைகளின் இறுக்கத்தைக் குறைப்பது, மூளைக்கு ஓய்வு கொடுப்பது போன்ற நடவடிக்கைகள் மன உலைச்சலைக் குறைக்க உதவும். இவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
ஆழமாக மூச்சுவிடுவது:
- உங்கள் கால்களை அகற்றிவைத்து கைகளைத் தொளதொளவென்று பக்கவாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
- கண்களைமூடி தலையை முன்னே சாயுங்கள்.
- மூக்கு வழியே மெதுவாக மூச்சை உள்ளே இழுங்கள். காற்றை ஆழமாக சுவாசியுங்கள். முதலில் வயிற்றுப் பகுதியையும், பிறகு சுவாசப் பகுதியையும் விரிவடையச் செய்யுங்கள்.
- கொஞ்ச நேரத்துக்கு லேசாக மூச்சைப் பிடியுங்கள்.
- மூக்குவழியே மெதுவாக மூச்சை வெளியே விடுங்கள். உங்களுக்கு வேண்டிய நேரத்தை எடுத்துக் கொள்ளலாம்.
- ஆசுவாசப்படும்வரை ஆழமாக மூச்சுவிடும்வரைத் தொடருங்கள்.
- பின்னர் மெதுவாகக் கண்களைத் திறவுங்கள்.
தசைகளின் இறுக்கத்தைக் குறைப்பது:
- வசதியான நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.
- கண்களை மூடிக்கொள்ளுங்கள்.
- ஒரு கையை இறுக்கமாக மடக்குங்கள். சில விநாடிகளுக்கு அப்படியே வைத்துக் கொண்டு அதில் கவனம் செலுத்துங்கள்.
- பிறகு மிக மெதுவாக அந்த இறுக்கத்தைத் தளர்த்துங்கள். பதற்றங்கள் பறந்தோடுவதை நீங்கள் உணர்வீர்கள்.
- முகம், கண்கள், தோள்பட்டை, வயிற்றுப்பகுதி, புட்டம், கை, கால் ஆகிய எந்தப் பகுதிக்குமே இந்தப் பயிற்சி பொருந்தும்.
மூளைக்கு ஓய்வு கொடுக்க சில வழிகள்:
மூளைக்கு ஓய்வு கொடுத்தால் மன உளைச்சல்கள் பலவற்றிற்குத் தீர்வு காணலாம். அது எப்படி மூளைக்கு ஓய்வு கொடுப்பது?
- சுகமான மெல்லிசையைக் கேளுங்கள்.
- வசதியான நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளலாம். அல்லது கீழே படுத்துக்கொள்ளலாம்.
- கண்களை மூடிக்கொள்ளுங்கள்.
- தசைகள் அனைத்தையும் தொய்வாக்கி உங்கள் உடலை லேசாக்கிக் கொள்ளுங்கள்.
- மலை அருவி, அலைகள், தென்றல் தொடும் இலைகள் இப்படி மனதுக்கு இதமான காட்சியைக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.
- விருப்பப்பட்டால் ஆழமாக மூச்சுவிடுங்கள்.
- மிக அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் உணரும் வரை, மேலே கூறப்பட்டுள்ளவற்றைத் தொடர்ந்து செய்யுங்கள்.
மன உளைச்சலை தவிர்க்க..
மன உளைச்சல் என்பது ஓரளவுக்குத் தேவைதான். அப்போதுதான் நாம் மேலும் சிந்தித்து திறமையாகச் செயல்படுவோம். ஆனால், இது அளவை மீறினாலோ, நீண்ட காலத்துக்குத் தொடர்ந்தாலோ அது உடலுக்கும் கேடு, மனதுக்கும் கேடு.
அளவுடன் கூடிய மன உளைச்சலினால் எந்த பிரச்சனையும் இல்லை, அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் கொண்டு அதீத மன உளைச்சலுக்கு ஆட்படாமல் இருப்போம்
உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பிரச்சனைகளுக்கு உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள்.
மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு:உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது திருமணத்திற்கு பிந்தய ஆலோசனை) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 28 – 99******00 – தாழ்வுமனப்பாண்மை – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==–==
Feel Free to Contact us
==–==
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.