பொதுவாக மலச்சிக்கல் என்று நாம் எப்போது குறிப்பிடுகிறோம்?
- பெரும்பாலும் பலரும் ஒரு நாள் ஒரு தடவை, அதுவும் காலை நேரத்தில் காலைக்கடன் கழிக்கிறார்கள். சிலர் இரு நாட்களுக்கு ஒருமுறை கழிப்பதும் உண்டு. நாளுக்கு ஒரு முறையோ, இருநாளுக்கு ஒரு முறையோ அது இயல்பாக நெருக்கடி இன்றி வெளியேறாமல் முக்க வைப்பதும், ரொம்ப இறுக்கமாகி வெளியேற அவஸ்தை படுத்துவதும் மலச்சிக்கலாகும். அடிக்கடி மலம் கழிக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதும், ஒரே நேரத்தில் வெளியேறாமல் மீண்டும் தங்கியிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதும் மலச்சிக்கல்தான்.
மலச்சிக்கல் ஏற்பட என்ன காரணம்?
- சாதாரண காரணங்களும் இருக்கின்றன. அசாதாரண காரணங்களும் இருக்கின்றன. பொதுவாக தினமும் 2 முதல் 3 லிட்டருக்கு குறைவாக தண்ணீர் பருகுவது. பழம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடாதது. எண்ணை அதிகம் கலந்த வறுத்த, பொரித்த உணவுகளை உண்பது. சிவப்பு நிற இறைச்சி வகைகளை அதிகமாக சாப்பிடுவது. உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது..
- இப்படிப்பட்டவை எல்லாம் சாதாரண காரணங்கள். இவை பெரும்பாலும் இளம் வயதினருக்கு உருவாகும் ‘லைப் ஸ்டைல்’ பிரச்சினைகள். அவைகளை தவிர்த்து மலக்குடலில் புற்றுநோயோ, கட்டிகளோ இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும். மலம் சரியாக வெளியேறாமல் இருந்தாலோ, மீண்டும் மீண்டும் கழிக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டாலோ, அந்த நேரத்தில் வலி ஏற்பட்டாலோ அதற்குரிய சிறப்பு மருத்துவர்களை சந்திக்கவேண்டும்.
- மலத்தோடு ரத்தம் கலந்து வந்தால், குடலிலே ரத்தக்கசிவு இருப்பதாக அர்த்தம். குடல் புண், பெருங்குடல் புற்றுநோய் போன்றவைகளின் அறிகுறியாகவும் இது இருக்கலாம். மலக்குடலில் இரு பகுதிகளிலும் மெல்லிய தசைப்பகுதி இருக்கிறது. மலத்தை வெளியேற்ற இதன் பங்களிப்பு மிக அவசியம். மலச்சிக்கல் ஏற்பட்டு, முக்கும்போது இந்த மென்மையான பகுதி அழுத்தப்பட்டு நெருக்கடிக்கு உள்ளாகி கீழே இறங்கிவிடும்.
- இதைத் தான் நாம் உள்மூலம், வெளிமூலம் என்று இரண்டு வித பாதிப்புகளாக குறிப்பிடுகிறோம். இந்த மூலநோய் நான்குவிதமான நிலைகளைக்கொண்டது. முதல் இருகட்ட பாதிப்பு வெளியே தென்படாமல் உள்ளேயே இருக்கும். 3, 4-ம் நிலை பாதிப்பு ஆசன வாய் வழியாக வெளியே தெரியும்.
மூல நோயின் அறிகுறி என்ன?
- மலம் கழிக்கும்போது ரத்தம் கொட்டும். ஆனால் பெரும்பாலும் வலிக்காது. அசவுகரியமாக இருக்கும்.
ஆசன வாய் வெடிப்பு என்பது என்ன?
- இறுகிய மலத்தை, முக்கி வெளியேற்றும் நிலை தொடரும்போது அது ஆசன வாய் பகுதியில் வெடிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பாதிப்பு கொண்டவர்கள் மலம் கழிக்கும்போது கத்தியால் குத்திக் கிழித்தது போன்ற வலியால் துடிப்பார்கள். அரைத்த கண்ணாடியை வைத்து தேய்த்ததுபோன்ற கொடுமையை அனுபவிப்பார்கள். ரத்தம் கொட்டும். புண்ணாகி அதிக தொந்தரவை ஏற்படுத்தும்.
‘பவுத்ரம்’ என்ற நோய் எதனால் ஏற்படுகிறது?
- மலக்குடலின் இறுதிப்பகுதியும்- ஆசனவாய் தொடங்கும் பகுதியும் இணைந்த இடத்தில் ‘ஏனல் கிளான்ட்’ எனப்படும் சுரப்பிகள் உள்ளன. அவை ஈரத்தன்மையை உருவாக்குவதற்காக அமைந்துள்ளன. அந்த சுரப்பிகளில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சீழ் பிடித்து, கட்டியாக மாறி ஆசன வாயின் சுற்றுப்பகுதிக்கு வந்து வெடித்து, குழாய் போன்று உருவாகிவிடும்.
- மலம் கழிக்கும்போது அந்த குழாய்க்குள்ளும் இறங்கிவிடும். சீழ்கட்டி மீண்டும் மீண்டும் உருவாகி வெடிக்கும். அந்த நிலையைத்தான் பவுத்ரம் என்கிறோம். இந்த நோய் ஏற்பட்டால் ஆசனவாய் வலிக்கும். சீழ் கசியும். ரத்தமும் வெளியேறும். மூல நோய், ஆசன வாய் வெடிப்பு நோயை விட இது கடுமையானது.
- 20 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களை அதிகம் தாக்கும். ஆண், பெண் இருபாலரும் இதனால் பாதிக்கப்படுவார்கள். பெண்கள் கூச்சம் கொள்ளாமல் அறிகுறிகள் தென்பட்டால் உடனே கவனிக்கவேண்டும். பெண்களின் கூச்சம் இந்த நோயின் பாதிப்பை அதிகரிக்கச் செய்துவிடும்.
அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்களுக்கு மூல நோய் ஏற்படும் என்பது சரியா?
- சரியல்ல. அதிக உடல் சூடு கொண்டவர்களை மேற்கண்ட நோய்கள் தாக்கும் என்பதும் சரியல்ல. தேவையான அளவு தண்ணீர் பருகாமல் இருப்பது, உணவு முறை முரண்பாடுகள், வாழ்க்கை முறை முரண்பாடுகள், மனஅழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகள்தான் இத்தகைய நோய்களுக்கு காரணமாக இருக்கின்றன.
- தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் இதர தொழில்துறைகளில் பணியாற்றும் இளம் தலைமுறையினர் இந்த நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வாழ்க்கை முறைகளை சரிசெய்து வருமுன் காப்பதும், வந்த உடன் சரியான சிகிச்சைகள் பெறுவதுமே இந்த நோய்களிடம் இருந்து தப்பிக்க சிறந்த வழி.
மூலம் / ஆசனவாய் வெடிப்பு / பெளத்திரம் சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற மூலம் / ஆசனவாய் வெடிப்பு / பெளத்திரம் பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.