கேள்வி: மூல நோயின் அறிகுறிகள் என்ன? மூல நோய் பாதித்தவர்களுக்கு அறுவை சிகிச்சை தான் தீர்வா? உணவுப்பழக்கம், மாற்று மருத்துவ முறையில் தீர்வு உண்டா?
மருத்துவர் பதில்: ஆசனவாய் பகுதியில் ரத்தக்குழாய் வீக்கமடைவதன் மூலமாக மூல நோய் வருகிறது. இதன் அறிகுறியாக முதலில் அரிப்பு ஏற்படும். மலம் கழிக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.
வழக்கத்துக்கு மாறாக மலச்சிக்கல் இருக்கும். சில நேரங்களில் ரத்தம் வெளியேறும். அதன்பிறகு சில மணி நேரம் வரை தொடர்ந்து வலி, எரிச்சல் போன்றவை இருக்கும்.
மலம் கழிக்கும்போது அழுத்தம் அதிகமாக கொடுப்பதால் ஆசனவாயின் வெளிப்பகுதிக்கு சதை தள்ளப்படும். ஆசனவாயின் உள் பகுதி வீக்கமடைவதை உள் மூலம் என்றும், சதை வெளித்தள்ளும் போது வெளிமூலம் என்றும் அழைக்கிறோம்
மூலம் உண்டாவதற்கு முக்கிய காரணமாக இருப்பது மலச்சிக்கல் தான். பரம்பரையாகவும் இந்நோய் வரலாம். உடல் எடை, தொப்பை உள்ளவர்களுக்கு வயிறு அழுத்தம் அதிகரித்து மூலம் உண்டாகிறது. பொதுவாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இது வரும்.
ஆரம்பக்கட்டத்திலேயே உடலில் ஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்னை உள்ளதா என்பதை அறிந்து கொண்டு அதனை சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பிரச்னை பெரிதாகி விடும்.
முதலில் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். மலச்சிக்கலைப் போக்கும் உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.பலர் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின்னரும் சிலருக்கு மீண்டும் வளர்ந்து தொல்லை கொடுக்கும்.
நார்ச்சத்து உள்ள உணவு வகைகள் மற்றும் பழங்கள், கீரைகள் சாப்பிடுவதன் மூலம் இதை தவிர்க்கலாம். மேலும் மூலப்பிரச்னை உள்ளவர்கள் அசைவம் மற்றும் மசாலா உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.
மாற்று மருத்துவத்தில் இதற்கு சிகிச்சை இருக்கிறது.முறையான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் ஆசன வாய்ப்பகுதியில் வெடிப்பு போல புண் தோன்றி ஆறாமல் தொந்தரவு செய்யும். அதில் இருந்து ரத்தம் வெளியேறும்.
எனவே மூலப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்வது அவசியம்.
மூலம் / ஆசன வாய் வெடிப்பு / பெளத்திரம் சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் மூலம் / ஆசன வாய் வெடிப்பு / பெளத்திரம் போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==

