மூலம் என்றால் என்ன?
ஆசன வாயில் உள்ள இரத்த குழாய்களில் ஏற்படும் வீக்கமே மூலம் எனப்படும். Inflammation of Anal veins is so called Piles.
மூலம் நோய் வகைகள்
- உள்மூலம் – Internal Piles
- வெளிமூலம் – External Piles
உள் மூலம் – Internal Piles
- ஆரம்ப நிலையில் மலம் கழிக்கும் போது லேசான வலியுடன் இறுக்கமான உணர்வு இருக்கும்.
- மலக்குடலில் சிறிய உருண்டையாக வளர்ச்சி பெறும்போது முக்கி மலம் கழிக்கும் போது உருண்டை சதையானது மலக்குடலிருந்து வெளியே வரும்போது ஆசன வாயில் வலி அதிகமாகும்.
- இதனால் ஆசன வாயிலிருந்து இரத்தம் வரும். ஆசனவாய்க்கு வெளிப்புறமாக வந்த உருண்டை சதையை விரல்களின் உதவியால் உள்ளே தள்ளிவிட வேண்டியதிருக்கும்.
- உள்மூலம் முற்றிய நிலையில் ஆசனவாயின் உட்புறம் வீங்கியிருந்த வீக்கம் பெரியதாகி விட்டால் மலம் கழிக்கும்போது தாங்க முடியாத வலியும், இரத்தப் போக்கும் ஏற்படும்.
- மூல வீக்கம் ஆசனவாய்க்கு வெளியே முழுமையாக வந்துவிட்டால் விரலை வைத்து உள்ளே தள்ளமுடியாது. இதில் ஒருவிதமான ஈரமான சவ்வுப்படலம் மூலக் கட்டியை மூடியிருக்கும்.
- இந்நிலையில் ஆசன வாயில் புண் போன்ற வலியும், இரத்தக் கசிவும், ஈரப்பதமும் இருக்கும்.
வெளிமூலம் – External Piles
- ஆரம்ப நிலையில் ஆசனவாய் துவாரத்தை சுற்றி பரவி இருக்கும் சிரைநாளங்களில் ஃ ஆயுத எழுத்து போன்ற மிளகு போன்ற வடிவத்தில் மூன்று சிறிய வீக்கமிருக்கும். இதனால் மலம் கழிக்கும் போது வலி இருக்கும்.
- இரண்டாவது நிலையின் போது மிளகு வடிவில் இருந்த மூன்று வீக்கமும் வெளிப்பார்வைக்கு தெரியும்படி சற்று பெரிய வீக்கமாக காணப்படும் போது வலியும் வேதனையும் முன்பு இருந்ததை விட அதிகரிக்கும்.
- மலம் கழிக்கும் போது மேலும் கடுமையாகும்.
- மலம் கழிக்கும் நேரத்தில் வேதனையால் அலறுவார். மலங்கழிக்க வேண்டுமென்ற நினைப்பு வந்தாலே பயப்படுவார். வீக்கத்திலிருந்து ஒருவித நிறமற்ற திரவக்கசிவு ஏற்பட்டு ஆசனவாயில் நமைச்சல் ஏற்படும்.
- இந்நிலையில் நோயாளி உட்காரவும், நிற்கவும் முடியாமல் சிரமப்படவேண்டியதிருக்கும்.
- வலியுடன் கூடிய ஒரு பந்தின் மீது உட்கார்ந்துள்ள உணர்வு ஏற்படும். ஆசனவாய்ப் பகுதியில் வெடிப்பும், இறுக்கமும் ஏற்படும்.
- 4வது நிலையில் மூலம் முற்றிலும் வெளியே வந்து விடும்-இதுவே கடைசி நிலையாகும்—Prolapsed Piles.
மூலத்தின் அறிகுறிகள் – Piles Symptoms
- இரத்த கசிவு – மலம் கழிக்கும் முன்போ பின்போ மலத்துடனோ இரத்தம் வருதல்.
- வலி – மலம் கழிக்கும் போதும் கழித்த பிறகும் தாங்கமுடியாத வலி. சிலருக்கு மணிக்கணக்கில் கூட வலி நீடிக்கும். இதனால் உட்கார முடியாமல் கூட தவிப்பார்கள்,
- எரிச்சல் – மலம் கழிக்கும் போதும் கழித்த பிறகும் தாங்கமுடியாத எரிச்சல். சிலருக்கு மணிக்கணக்கில் கூட எரிச்சல் நீடிக்கும்.
- அரிப்பு – சிலருக்கு ஆசன வாயில் அரிப்பு இருந்துகொண்டே இருக்கும், எப்போதும் ஆசனவாயில் கை வைத்து சொரிய வேண்டும் போல இருக்கும்.
- சதை வெளியே வருதல் – பட்டாணி அளவோ அல்லது அதிகமாகவோ சதை வெளியே வரும். இது முற்றிய நிலை.
- சிலருக்கு சளி போன்ற திரவம் கசியும்
- மலச்சிக்கல் – மலம் சரியாக போகாது, இருக்கமாக கல் போல இருக்கும், சிலருக்கு பசை போல மலம் வரும் – சிலர் மலம் கழிக்கும் போது ஏற்படும் வலி, எரிச்சலை தவிர்க்க கழிப்பறைக்கே செல்ல மாட்டார்கள்.
மூல நோய்க்கான காரணம் – Piles Reasons
- நாட்பட்ட மலச்சிக்கல்
- அதிக அசைவ உணவு உட்கொள்தல்
- அதிக காரம் புளிப்பு, மசால உணவு உட்கொள்ளுதல்
- நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல்
- புகை மற்றும் மதுப் பழக்கம்
- அதிக உடல் பருமன்
- தைராய்டு மற்றும் சர்க்கரை வியாதிகள்
- மலக்குடல் நரம்பு/ தசை கோளாறு
- மலம் கழிக்கும் உணர்ச்சி ஏற்படும் போது மலத்தை வெளியேற்றாமல் அடக்கி வைத்தல்.
- கோடைகாலங்களில் உடலில் தேவைக் கேற்ப தண்ணீர் அருந்தாமை,
- நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களையும், கீரை வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளாமை,
- கர்ப்பகாலத்தில் 6, 7வது மாதத்தில் கர்ப்பப்பை விரிவடையும் போது மலக்குடல் அழுத்தப்படுவதால், அப்போது மலச்சிக்கல் தோன்றும்.
- உட்கார்ந்தே பணிபுரிபவர்கள், ஓட்டுனர்கள், அடிக்கடி நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள், அதிக எடைகளை தனது சக்திக்கு மீறி தூக்குபவர்களுக்கு, சிரைகளில் அழுத்தம் உண்டாகி வீக்கம் ஏற்பட்டு மூலம் உருவாகிறது.
- உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, நாட்பட்ட தீராத இருமல் இதர வேறுசில நோய்களுடன் அஜீரணத்துடன் மலச்சிக்கலும் தோன்றுவதால் மூலம் நோய் உருவாகிறது.
- உடலுழைப்பு உடற்பயிற்சி இல்லாத மனிதர்கள் மூல நோயிலிருந்து தப்புவது கடினம்.
மூல நோய் சிகிச்சைகள் –Piles Treatment:
ஆங்கில மருத்துவ முறையில் பொறுத்த வரையில் ஆண்டிபயாட்டிக்ஸ், மாத்திரைகளும், வீக்கத்தைக் குறைப்பதற்கான மாத்திரைகளும் மலச்சிக்கலை போக்கி வயிற்றுப்போக்கு ஏற்படுத்துகிற மாத்திரைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. அதன்பின்பும் பிரச்சனை தீரவில்லையெனில் அறுவை சிகிச்சை மூலம் தற்காலிக நிவாரணம் பெறலாம்.
மூலநோய் ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை – Homeopathy Treatment for Piles :
ஹோமியோபதி மருத்துவமுறையில் நோயின் தன்மைக்கேற்ப ஒத்த அறிகுறிகளுடன் கூடிய மருந்துகள் அளிக்கப்படுகிறது. நோயறி குறிகளை மனதில் கொண்டும் சிகிச்சை அளிக்கப்படுவதால் நல்ல பலன் பெறலாம்.
தயங்காது தாமதிக்காது ஹோமியோபதி மருத்துவரை கலந்தாலோசித்து தகுந்த சிகிச்சையும் ஆலோசனையும் பெற்றால் மூல நோயிலிருந்து நல்ல பலனை பெறலாம்.
மூலம் நோய் சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற மூலம் பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு:உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 28 – 99******00 – மூலம்(Moolam) – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==–==
Feel Free to Contact us
==–==
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.