கேள்வி; எனக்கு அதிகாலையில் ஆணுருப்பில் நல்ல விரைப்புத்தண்மை ஏற்படுகிறது. விந்தும் வந்துவிடுகிறது. ஆனால் உடலுரவின் போது விரைப்பு வரமாடேன்கிறது. இதனால் எனது மனைவியுடன் தினமும் சண்டை வருகிறது. இதற்கு சிகிச்சை உண்டா?
மருத்துவர் பதில்; ஆண்கள் தவறாக புரிந்து கொண்டு அச்சப்படும் விஷயங்களில் ஒன்று,அதிகாலை நேரத்தில் அவர்களின் ஆணுறுப்பில் இயல்பாக ஏற்படுகின்ற விறைப்புத் தன்மை ஆகும்.
அதாவது அதிகாலை வேலை அவர்கள் விழித்துக் கொள்ளும் போது எந்த வித பாலியல் உணர்ச்சியும் இல்லாமல் தாமாகவே விறைத்திருக்கும் ஆணுறுப்பைப் பார்த்து தங்களுக்கு ஏதோ நோய் இருப்பதாய் கற்பனை செய்து , வெளியில் சொல்லவும் வெட்கப்பட்டு மனரீதியாக அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். சிலர் தனக்கு ஆண்மைதன்மை அதிகம் வந்துவிட்டது எனவும் பெருமிதப்படுகிறார்கள்.
உண்மையில் இது வெட்கப் பட வேண்டியதோ அல்லது அச்சப்பட வேண்டியதோ,அல்லது பெருமைபடக்கூடியதோ அல்ல. சாதாரணமாக இது எல்லா ஆண்களிலும் காணப்படும் உடற் தொழிற்பாட்டு மாற்றமாகும்.
அதிகாலை நேரத்தில் ஆணுறுப்புக்கு அதிகம் ரத்தம் போவதாலே இது ஏற்படுகின்றது.
இந்த விறைப்புத் தன்மையுடன் சில வேளைகளில் விந்து நீர் வெளியேற்றமும் இயல்பாக ஏற்படலாம்.அதுவும் இயல்பானதுதான்!
இந்த அதிகாலை விறைப்பு மருத்துவ ரீதியாக முக்கிய பங்கு வகிக்கின்றது.
அதாவது தங்களால் உடலுறவின் போது சரியான விறைப்பினை அடையமுடியவில்லை எனும் ஆண்களிலே உண்மையான காரணத்தை கண்டு பிடிப்பதற்கு இது உதவுகின்றது.
சரியான விறைப்பினை அடையா முடியாதத்திற்கு முக்கிய காரணம் உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும்.
இவ்வாறு தங்களால் சரியான விறைப்புத் தன்மையை அடைய முடியவில்லை எனும் ஆண்களின் ஆணுறுப்புக்கள் மற்ற ஆண்களைப் போல அதிகாலையில் தானாக விறைககுமானால் , அதன் அர்த்தம் அவர்களின் உடலிலோ அல்லது ஆணுருப்பிலோ எந்த விதமான பிரச்சினையும் இல்லை , உளவியல் பிரச்சினைகளாலே உடலுறவின் போது அவர்களின் ஆணுறுப்புக்கள் விறைக்க மறுக்கின்றன என்பதாகும்.
அதைவிடுத்து உடலுறவின் போது ஆணுறுப்பு விறைப்படையவில்லை எனும் ஆணில் இந்த அதிகாலை விறைப்பும் ஏற்பட வில்லை என்றால உளவியல் பிரச்சினைக்கு அப்பால் அவரின் உடலிலே வேறு பிரச்சினை இருக்கலாம் .
ஆகவே ஆண்களே உங்களுக்கு அதிகாலை விறைப்பு மற்றும் விந்து நீர் வெளியேற்றம் ஏற்பட்டாலோ அச்சப்பட வேண்டாம் , சந்தோசப்படுங்கள் நீங்கள் ஆண்மைத்தன்மையானவர் என்று.!
உடலுறவின் போது ஆணுறுப்பு சரியான முறையில் விறைக்கவில்லை என்றால், உளவியல் ரீதியான அச்சம் மற்றும் மருத்துவ ரீதியான குறைபாடுகள் தான் உடலுறவின் போது ஆணுறுப்பு விறைக்க மறுப்பதற்கான காரணமாகும். இந்த பிரச்சனை உங்களுக்கு இருந்தால் மருத்துவரை நேரில் சந்திக்கவும். மருத்துவர் நிச்சயம் உங்களுக்கு சரியான ஆலோசனை வழங்குவார்!
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 28 – 99******00 – anmai kuraivu, small penis, sex problem, – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==–==
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.