SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
விந்தணுக்கள் குறைதல் அல்லது இல்லாமல் போதல் – Low Sperm Count
May 11th, 2012 by Dr.Senthil Kumar

விந்தணுக்கள் குறைதல் அல்லது இல்லாமல் போதல்

ஆண்களின் விந்தில் உயிரனுக்களின் அளவு (Sperm count) குழந்தை உருவாக்கத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.இந்த விந்தணுக்கள் ஆண்களின் விதைகளிலே உற்பத்தி செய்யப்பட்டு மற்றைய பல சுரப்பிகளின் சுரப்புகளோடு சேர்ந்து விந்து நீராக (Seminal fluid) வெளியேறும்.

விந்தணுக்களின் உற்பத்தியிலே பாதிப்பு ஏற்பட்டாலும் மற்றைய சுரப்பிகள் சாதாரணமான முறையிலே செயல்படுவதால் உடலுறவின் போது அவர்களுக்கு விந்து நீர் வெளியேறலாம். அனைவரின் விந்துகளிலும் விந்தனுக்களின் எண்னிக்கை தேவையான அளவு இருக்கும் என்றில்லை.

ஆகவே திருமணத்திற்கு முன்போ, குழந்தை உருவாவதில் தாமதம் ஏற்பட்டாலோ ஆண்களின் விந்து நீர் சோதிக்கப்பட்டு அதிலே உள்ள விந்தனுக்களின் வீரியத் தன்மை  கணக்கடுக்கப் பட வேண்டும். விந்தனுக்களின் வீரியத்தன்மை முக்கியமாக மூன்று விதங்களில் இருக்கவேண்டும்.

1.விந்தனுக்களின் எண்ணிக்கை -சாதாரணமாக 1மில்லி லிட்டர் விந்து நீரில் 20 மில்லியன் விந்தணுக்கள் இருக்க வேண்டும்

2.விந்தனுக்களின் முன்னோக்கி செல்லும் தன்மை (active motile)மொத்தமாக உள்ள விந்தனுக்களில் .குறைந்தது 50 சதவீதமானவை முன்னோக்கி செல்லும் தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்

3.விந்தனுக்களின் உருவ அமைப்பு(Morphology) மொத்த எண்ணிக்கையில் குறைந்தது 30 சதவீதமானவை சரியான உருவ அமைப்பில் இருக்க வேண்டும்

அதோடு ஒரு தடவையில் வெளியேறும் விந்து நீரின் அளவு 2 மில்லி லீட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.   இவ்வாறு மேலே சொன்ன நிலையில் உள்ள விந்தனுக்களே கருத்தரித்தலுக்கு மிகவும் பொருத்தமானவையாக கருத்தப்படும்.

விந்தனுக்களின் எண்ணிக்கை குறைதல் – Oligospermia
விந்தனுக்களின் எண்ணிக்கை குறைதல் ஒலிகோ ஸ்பெர்மியா (Oligospermia)எனப்படும். இவர்களுக்கு கருத்தரிக்கும் சந்தர்ப்பம் இருந்தாலும் அது குறைவாகவே இருக்கும். முறையான சிகிச்சை பலனலிக்கும்.

விந்தனுக்களே இல்லாமல் இருத்தல் – Azoospermia
விந்து நீரில் சிலருக்கு விந்தனுக்களே இல்லாமல் இருக்கலாம். இது  Azoospermia  எனப்படும். இவர்களுக்கு கருத்தரித்தலை ஏற்படுத்த முடியாது. சில நோய்களால்  விந்தனுக்கள் முற்றும் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டிருக்கலாம். அந்த நோயை கண்டுபிடித்து சரி செய்தால் விந்து உற்பத்தி ஏற்பட்டு  கருத்தரித்தல் நடைபெறலாம். இது ஒரு சிலருக்கே சாத்தியம்.   எனவே விந்தனு குறைபாடு உள்ளவர்கள் தயங்காமல் மருத்துவரை அனுகி தாமதமின்றி மருத்துவ ஆலோசனை பெற்று சிகிச்சை மேற்கொண்டால் குழந்தை பேறு பெறலாம்.

மேலும் ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கு மருத்துவரை தொடர்பு கொள்ளவும்


விவேகானந்தா கிளினிக்


மருத்துவர்.அ.தண்டபானி,

அரசு பதிவுபெற்ற சித்த மருத்துவர்

சித்த மருத்துவ அலுவலர்(ஓய்வு)

ஊரக சித்த மருந்தகம்.



மருத்துவர்.த.செந்தில் குமார்B.H.M.S., M.D(Alt Med).,M.phil(Psy)பட்டதாரி மருத்துவர் & உளவியல் ஆலோசகர்


மருத்துவரை நேரில் சந்திக்க முன் பதிவுக்கு அழைக்கவும்: 9443054168                
                

 

         

Feel Free to Contact us 
* indicates required field

 
 

 

–==–


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India