விவாகரத்தை எப்படி தவிர்ப்பது
“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்ற பழமொழி உண்டு. இந்த வரத்தை கடைசி வரைக்கும் காப்பற்றுவதற்கு ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் முக்கிய பொறுப்பு உண்டு.
பெற்றோர் மற்றும் சொந்தங்கள் முன் நின்று நடத்திய திருமணமோ அல்லது காதல் திருமணங்கள் கூட சில சமயத்தில் சரியான புரிதலும், அனுசரனையும், விட்டு கொடுத்தலும் இல்லாத காரணத்தால் நீதிமன்றம் வாயிலில் நிற்கின்றனர்.
பிரச்சினைகள் பெரும்பாலும் ஆண்கள் வழியாகவே வருகின்றன. கணவனது குடிப்பழக்கம், வேலையின்மை, வருமானமின்மை, கணவரின் தாய், தங்கை மற்றும் பாலியல் பிரச்சனைகள் போன்றவை அப்பெண்ணிற்கு வெறுப்பை உருவாக்குகிறது.
இதற்காக ஆண்களை மட்டுமே குறை கூற இயலாது. பெண்களும் காரணமாகலாம். குடும்பத்திற்கு ஒத்ுது வராத பெண், குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ுப மாற்றி அமைத்துக் கொள்ளாத பெண், ஊதாரித் தனம், பல ஆண்களின் சகவாசம், குடும்பத்திற்கு அடங்காத பெண் போன்றவை ஆணின் முன் நிற்கும் முக்கிய காரணியாக இருக்கின்றன
திருமணத்திற்கு முன்பு கணவர் / மனைவி வீட்டார் கூறும் பொய்கள் கூட நிறைய விவாகரத்துக்கு மிக முக்கிய காரணியாக இருக்கிறது.
விவாகரத்தை தவிர்க்க சில வழிமுறைகள்
பிரச்சினைகளை சாவல்களாக்குங்கள்
- பிரச்சினை எதுவாக இருந்தாலும் முதலில் கோபப்படமாலும், பதட்டப்படாமலும் இருந்து இருவரும் ஒன்றாக நின்று சமாளிக்க வேண்டும். இதைதவிர்த்து அப்பிரச்சினைக்காக கணவன் மனைவி இருவரும் மோதிகொண்டால் பிரச்சினை இன்னும் பெரிதாகுமே தவிர பிரச்சினை தீராது. எனவே பிரச்சினைகளை ஆரம்பத்திலயே இருவரும் மனம் விட்டு பேசி தீர்த்தால் இல்லறம் என்றும் சந்தோஷம்தான்.
விட்டுக்கொடுங்கள்
- இன்றைய காலக்கட்டத்தில் விட்டுகொடுத்து போவது என்பது இல்லை, இதனாலேயே பல தம்பதிகள் விவாகரத்து கேட்கின்றனர். விட்டு கொடுங்கள், ஒருவர் கோபமாக இருக்கும் போது மற்றொருவர் அமைதியாக இருங்கள், அச்சமயம் வார்த்தைகள் நீள்வதும் குறையும், பிரச்சினையும் குறையும். இதற்கு மாறாக இருவரும் ஒரே சமயம் கோபப்பட்டால் அது வளர்ந்து விவாகரத்து வரைக்கும் போகும்.
அன்பு – அரவணைப்பு
- ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லுங்கள். தவறு செய்தால் ஒத்துக் கொள்ளுங்கள், அதற்காக மன்னிப்பும் கேளுங்கள். நடந்த தவறுகளை மீண்டும் மீண்டும் சுட்டி காட்டாதீர்கள். அன்புடன் விமர்சியுங்கள் மற்றும் மேலும் சில ரொமான்ஸ்களை செய்யுங்கள். குடும்ப சந்தோஷம் நீடிக்க அன்பு, அரவணைப்பு, விட்டுக் கொடுத்தல், மனம் விட்டு பேசுதல் இவற்றை பின்பற்றி பாருங்கள். மண வாழ்க்கை என்றும் மகிழ்ச்சிதான்.
நீதிமன்றத்தில் விவாகரத்து இன்று கேட்டவுடன் நாளை கொடுத்து விடுவதில்லை, நீதிமன்றமும் ஜோடிகளை சேர்த்து வைக்க சில முயற்சிகளை எடுக்கும், சில பல ஆலோசனைகள் மூலமாக. ஆனால் சிலர் விவாகரத்து வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தால் நீதிமன்றம் விவாகரத்து வழங்குகிறது. ஆனால் வாழ்க்கையில் விட்டு கொடுத்து வாழ்வதில் இருக்கும் சந்தோஷம் வேறு எங்கும் இல்லை என்பதை இருவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
குடும்ப நல ஆலோசனை
அப்படியும் பிரச்சினை நீடித்தால் தயங்காமல் ஒரு குடும்ப நல உளவியல் ஆலோசகரை சந்தித்து இருவரும் கலந்து ஆலோசித்து நல்ல வழிகாட்டுதலுடன் இல்வாழ்க்கையை தொடருங்கள்
வாழ்த்துகள்
குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.