SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
வெள்ளைப்படுதல் விளக்கமும் சிகிச்சையும் – Leucorrhoea Treatment in Chennai, Tamil nadu, India
February 26th, 2014 by Dr.Senthil Kumar

 

Leuchorrhoea Vaginal white discharge specialty Homeopathy Treatment Vivekanantha homeopathy clinic & psychological counseling center, Velachery, Chennai, panruti, cuddalore, Pondicherry, villupuram, Dr.senthil kumar best homeopathy specialist & famous psychologist in tamilnadu, india,  

 

கேள்வி: எனக்கு 23 வயதாகிறது, திடீரென வெள்ளைபடுதலின் அளவு அதிகரிப்பதோடு, உடன் வெள்ளை நிறத்தில் கட்டி தயிர் / பால் போன்று வெள்ளைபடுகிறது. இதற்கு காரணம் என்ன ?

  • மருத்துவர் பதில்: இது பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒருவகையான நோய். வெள்ளைப்படுதல் சிறிய வயது பெண்கள் முதல் வயதான பெண்கள்வரை அனைவருக்கும் வருகிறது. இது வெள்ளை நிறமின்றி பல தன்மைகளிலும், பல நிறங்களிலும் வெளியாகிறது.
  • சாதாரணமாக வெளியாகும் வெள்ளைப்படுதல் மூக்கிலிருந்து நீர் வருவதுபோல் இருக்கும். மேலும் சிலருக்கு தயிர்போல கட்டியாகவும், முட்டையின் வெண்கரு போன்று வழுவழுப்பாகவும் வருவதுண்டு. வியாதியின் காரணமும் குணமும் மாறுபட அதன் நிறமும், தன்மையும் மாறுபடும்.
  • இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் கருப்பையின் ஒருபகுதியையோ அல்லது பலபகுதியையோ பாதித்து தீவிரமான நோய்களுக்கு அடிப்படையாக மாறிவிடும்.
  • இந்நோய் உள்ளவர்களுக்கு சிறுநீர் போவதற்கு முன்போ பின்போ வெண்ணிறத்துடன் சீழ்போல் வெளிப்பட்டு, சிறுநீர் போகும்போது எரிச்சலை ஏற்படுத்தும்.
  • உடல் மெலிந்து வரும். இடுப்பு, கை, கால்கள், உடல், கணுக்கால், தசை அனைத்து முட்டுகளிலும் அதிகவலியை உண்டாக்கும்.உஷ்ணம் அதிகமாவதால் வயிற்றைப்பிடித்து இழுப்பது போன்ற உணர்வு, மலச்சிக்கல், அடிக்கடி தலைவலி ஏற்படுவதோடு, பிறப்பு உறுப்புகளில் அரிப்பு, புண் ஆகியவையும் ஏற்படும்.
  • தவறான உணவுப்பழக்கங்கள், சுகாதாரமற்ற உள்ளாடைகள், ரத்தசோகை உள்ளவர்களுக்கு, சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் அதிக மனஉளைச்சல் மனபயம், போன்றவற்றால் இந்த நோய் வர வாய்ப்புண்டு.
  • இதனை ஆரம்பத்தில் கவனிக்காமல்விட்டால் மிகப்பெரிய நோய்களுக்கு கரணமாக வந்துவிடும் மேற்குறிப்பிட்ட இவ்வறிகுறிகளும் இணைந்து ஏற்படின் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவதன் மூலம் பின்விளைவுகளிலிருந்து தவிர்த்துகொள்ளலாம்.

 

கேள்வி: எனக்கு மாதவிடாய் நின்று 6 மாதங்கள் ஆகிறது கடந்த 2 வாரங்களாக அதிகமாக வெள்ளைப்படுகிறது, இதனால் எனக்கு மூட்டு வலி, உடல் வலி உண்டாகிறது இதை எப்படி சரி செய்வது ?

  • மருத்துவர் பதில்: பெண்கள் பருவம் அடைந்தது முதல் மாதவிடாய் நின்ற பிறகும் கூட அனுபவிக்கும் பல்வேறுபிரச்னைகளில் ஒன்று வெள்ளைபடுதல். ஆனால் அவர்கள் இதை பெரிதாககருதுவதில்லை.
  • அதனால் ஏற்படும் சிரமங்களையும் சாதாரணமாக விட்டுவிடுகின்றனர். வெள்ளைப்படுதல் என்பது கவனிக்கவேண்டிய விஷயம். கர்ப்பப்பை வாய்ப்பகுதியில் ஏற்படும் அலர்ஜியின் காரணமாகவும் வெள்ளைபடுதல் ஏற்படலாம்.
  • மேலும் கருப்பை பகுதியில் உள்ள கோழைப்படலம் அரிக்கப்படுவதால் அங்கிருந்து வெள்ளை திரவம் வெளிப்படுகிறது. 
  • உள்பகுதியில் சின்னச்சின்ன சீழ்கட்டிகள் உருவாகலாம். அரிப்பு ஏற்படலாம். வெள்ளைப்படுதலின்போது எரிச்சலான உணர்வு ஏற்படும்.
  • வெள்ளைப்படும் காலங்களில் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கைகால் வலி உண்டாகுதல். இடுப்புவலி, முதுகுவலி போன்றவை இந்நோயின் அறிகுறிகள்.
  • இப்பிரச்னை உள்ளவர்களுக்கு உடல் எடை கூடலாம் அல்லது இளைக்கலாம். அடிவயிற்றில் கனமான உணர்வு இருக்கும். இந்த பிரச்னை உள்ள பெண்கள் எப்போதும் எரிச்சலுடன் இருப்பார்கள்.
  • வெள்ளைப்படுதல் பிரச்னை உள்ளவர்கள் பாதுகாப்பு இன்றி உடலுறவு கொண்டால் ஆணுக்கும் தொற்ற வாய்ப்புள்ளது.
  • உங்களுக்கு போதுமான அளவு தூக்கம் அவசியம். இரவு விழித்திருப்பது நேரம் சென்று தூங்குவது என்பவற்றையும் தவிர்ப்பது நல்லது.
  • ஆகவே வெள்ளைபடுதலுடன் மேற்குறிப்பிட்ட அறிகுறிகளும் இணைந்து காணப்படின் உடனடியாக மருத்துவரை பார்த்து உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.

 

கேள்வி:  நான் வேலைக்கு போகும் பெண் எனக்கு சில மாதங்களாக வெள்ளைப்படுகிறது, இதனால் என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியாவில்லை. இதிலிருந்து விடுபட வழி சொல்லுங்கள்.

  • மருத்துவர் பதில்: பெண்களுக்கு இயற்கையாகவே பல உபாதைகள் ஏற்படுகின்றன. அதில் வெள்ளைப்படுதலும் ஒன்று. வெள்ளைப்படுதல் பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒரு நோய்.
  • பொதுவாக ஒருசில பெண்களுக்கு பூப்பெய்திய காலம்தொட்டே வெள்ளைப்படுதல் இருக்கும். வெள்ளைபடுதலிருந்து தவிர்த்துகொள்வதற்கும், அது கிருமித்தொற்றுகளுக்கு உள்ளாவதை தடுப்பதற்குமான சிலவழிகளை கடைபிடிக்க வேண்டும்
  • இனிப்பு உணவுகள், புளிப்பு வகை உணவுகள், கொழுப்பான உணவு வகைகள், நிலக்கடலை மற்றும் எண்ணெயில் வறுத்த பொரித்த உணவுகள், இறைச்சி போன்ற உணவுகளை தவிர்க்கவேண்டும்..
  • மேலும் நீங்கள் அணியும் உள்ளாடைகளின் சுத்தம் மிகவும் முக்கியம். உள்ளாடைகள் விசயத்தில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். நைலான் உள்ளாடைகளை தவிர்த்து பருத்தியிலான உடைகளையும், ஈரத்தை உறிஞ்சக்கூடிய உள்ளாடைகளை உடுத்த வேண்டும்.
  • அத்துடன் உள்ளாடைக வெள்ளை நிறத்தில் இருப்பது சிறந்தது .இறுக்கமான உள்ளாடைகளை அணியக்கூடாது. உள்ளாடைகளை துவைக்கும்போது சோப்பு நுரைகள் நீங்கும்வரை நன்கு அலச வேண்டும்.
  • நேரடியாக சூரியகதிர்கள் படும்படி காயவைத்து அணிய வேண்டும். ஒரே உள்ளாடையை தொடர்ச்சியாக நீண்டநேரத்திற்கு அணியக்கூடாது. மனப்பதற்றம், மனஅழுத்தம்  போன்ற மனநிலை வெள்ளைபடுதலை மிகவும் அதிகரிக்கச்செய்யும்.
  • எனவே நீங்கள் உடனே மருத்துவரை அணுகி நோயின்தன்மை தெரிந்து சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

 

கேள்வி: எனக்கு துர்நாற்றத்துடன் வெள்ளைபடுவதோடு அதன் நிறமும் மாறி வருகிறது, இதனால் எனக்கு எரிச்சலாக உள்ளது. இதை யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கிறேன், எனக்கு தீர்வு சொல்லுங்கள்.

  • மருத்துவர் பதில்: இந்த வெள்ளைப்படுதலால் பாதிக்கப்படும் பல பெண்கள் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு மருத்துவரை அணுகுவதில்லை. அதனால் கர்ப்பபையில் வரும் நோயின் தாக்கம் அதிகரிக்கலாம்.
  • சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல், கருப்பை மற்றும் யோனியில் புண், புற்றுநோய் போன்றவற்றால் வெள்ளைப்படும் நோய் ஏற்படலாம். சிலசமயம் அந்தப்பகுதியில் நமைச்சலும் துர்நாற்றமும் ஏற்படும்.
  • உங்களுக்கு திருமணமாகியிருந்தால் மிகுதியானஉடலுறவு, அடிக்கடிபிள்ளைப்பேறு, முறையற்ற புணர்ச்சி, மனக்கவலை, கடினவேலை, போன்றவைகளினால்கூட உங்களுக்கு இந்த வெள்ளைப்படுதல் நோய் ஏற்படக்கூடும்.
  • பெண்களுக்கு வெள்ளைப்படுதலில் வித்தியாசம் இருக்கும். மஞ்சள் நிறத்தில் சிலருக்கும், பச்சைநிறமாக ரத்தத்துடனும் சிலருக்கு வெள்ளைப்படுதல் வெளியேறும்.
  • சிலருக்கு நிணநீருடன் ரத்தமும் கலந்து துர்நாற்றத்துடன் வெளிவரும். குறைந்தபட்சம் துர்நாற்றம் ஏற்படும்போதாவது கவனித்தாக வேண்டும். இல்லையெனில் வெள்ளைப்படுதல் மோசமான விளைவுகளை உங்களிடம் ஏற்படுத்திவிடும்.
  • பிறப்புறுப்பின் செல்களை அழிக்கும். நுண்ணுயிர்த்தாக்குதலை ஏற்படுத்தும். எனவே வெள்ளைப்படுதலுக்கு உடன் சரியான சிகிச்சை பெற்றால் இந்தபிரச்சனைகளில் இருந்து தப்பிக்காலம்.
  • எனவே தாமதிக்க்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.

 

 

 

வெள்ளைப்படுதல் நோய் சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்

சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற வெள்ளைப்படுதல் நோய் பிரச்சினைகளுக்கு அலோசனை &  சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

 

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

புதுச்சேரி:- 9865212055

பண்ருட்டி:- 9443054168

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

 

 

Get Appointment

==–==

Feel Free to Contact us 
* indicates required field

 

white discharge treatment. vellai paduthal vaginal discharge, waite paduthu, yeast infection, east infection, discharge in women private part, mega vettai, water comes female private part, 


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India