கேள்வி: எனக்கு ஹைப்பர் தைராய்டு என்று டாக்டர் கூறியிருக்கிறார். அதற்கு அலோபதியில் மருந்து சாப்பிட்டு வருகிறேன். எனக்கு உடலுறவில் நாட்டமில்லை. தைராய்டு அதிகம் சுரப்பதால் உடலுறவில் நாட்டம் குறையுமா? இதற்கு சிகிச்சை உண்டா?
பதில்:
- உங்களின் வயதை நீங்கள் குறிப்பிடவில்லை. மனித உடலில் நாளமில்லா சுரப்பிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. ஹார்மோன்களை உற்பத்தி செய்து அதை உடலில் உள்ள செல்களுக்கு செலுத்தி, அந்த செல்களை வேலை செய்ய வைப்பதே அவற்றின் பணி. அதில் ஒன்றுதான் தொண்டை பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பி. இது சுரக்கும் தைராக்ஸின் ஹார்மோன்தான் நமது உடலின் சீதோஷ்ணநிலையை சீராக வைத்திருக்கும். தோலின் மென்மைத்தன்மையை பாதுகாப்பது, மாதவிடாயை ஒழுங்கு படுத்துவது, முடி வளர்ச்சியை கட்டுப்படுத்தவது, குழந்தைகளின் வளர்ச்சி இவை அனைத்தையும் பராமரிக்கும்.
- இந்த தைராய்டு சுரப்பியில் பிரச்சனை இருந்தால் குறைவாக சுரக்கும். அல்லது அதிகமாக சுரக்கும். இதனால் உடல் நலம் பாதிக்கும். இது தவிர தைராய்டு சுரப்பினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபாடு குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் தைராய்டு நோயினால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.
- நீரிழிவு, இதயநோய், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு சத்து, புகைபிடித்தலால் தோன்றும் உடல் பருமன் போன்ற நோய் தாக்கிய பெண்கள் ஆண்களைக் காட்டிலும் உடலுறவில் ஈடுபாடு குன்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- தைராய்டு குறைபாடினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு அதனால் இல்லற வாழ்க்கையில் விருப்பமின்றி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
- தைராக்ஸின் குறைந்தால் உடல் எடை அதிகரிப்பு, அதிக ரத்த போக்கு, முறையற்ற மாதவிடாய், தோலின் மிருதுத் தன்மை குறைவு, அதிகமான முடி உதிர்தல், மலச்சிக்கல், உடல் வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
- இதன் காரணமாகவே உறவில் ஈடுபாடு குறைவதாகவும் மருத்துவ அறிவியல் கூறுகிறது. உடலில் பிரச்சினைகள் ஏற்படும்போது முறையான சிகிச்சை பெறாவிட்டால், உடல் எடை அதிகரித்து மேலும் பல நோய்களுக்கு வழிவகுக்கலாம்.
- அதிகமான தைராய்டு சுரந்தால் எடை குறையும்! இதயத்துடிப்பு அதிகமாகும், கோபம், தூக்கமின்மை, மாதவிடாய் கோளாறுகள், வயிற்று போக்கு என பல சிக்கல்கள் ஏற்படும்.
- மெனோபாஸ் உடன் தைராய்டு குறைபாடும் இணைந்து கொள்வதால் உறவில் ஈடுபாடு குறைய அதிக வாய்ப்புண்டு.
- பிரசவத்திற்கு பின்னர் குறிப்பிட்ட சில மாதங்கள் கழித்தும் முறைபடி மாதவிடாய் வராவிட்டால் மருத்துவரிடம் சென்று தைராய்டு பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
- குழந்தையின்மைக்கு தைராய்டும் ஒரு காரணம் என்பதால், பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
- மெனோபாஸ் காலத்திற்கு பின்னரும் தைராய்டு பிரச்சினை தோன்றும். ஆனால் அதற்கான அறிகுறிகள் அதிகம் தெரியாது. ஆதலால், ஐம்பது வயது கடந்த பெண்கள் தைராய்டு பரிசோதனை எடுத்துக் கொள்வது அவசியம்.
- சரியான சிகிச்சை மேற்கொள்வதன் மூலமும் உளவியல் ஆலோசனை மூலமும் உடலுறவில் நாட்டத்தை அதிகப்படுத்திக்கொள்ள முடியும்.
தயங்காமல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை & சிகிச்சை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை தொடருங்கள்.
வாழ்த்துக்கள்
சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==–==
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.