கேள்வி: டாக்டர் அவர்களுக்கு வணக்கம். 24 வயது பெண் நான், எனக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. 2 மாதங்களில் திருமணம். முதலிரவை நினைத்தால் மிகவும் பயமாக உள்ளது. அவருக்கும் இதுதான் முதல் அனுபவம் என்கிறார். இந்த பயத்தை போக்கவும் முக்கியமாக பின்பற்ற வேண்டியவைகளையும் தயவு செய்து கூறுங்கள்
பதில்: முதலில் வாழ்த்துக்கள், முதலிரவு என்பது மறக்க முடியாத அனுபவம். வாழ்க்கையில் அது முதன்முறையாக மட்டும் இருக்கும்போது எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருக்கும். பின்வரும் தகவல்கள் தங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
- முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் சத்திரத்திலா, ஹோட்டலிலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதியஇடம் உங்களுக்குப் படபடப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் விரும்புகிற இடத்தை அவர் களிடம் தெரிவியுங்கள்.
- மனித உடலைப் பற்றிய, செக்ஸ் பற்றிய, உடலுறவு பற்றிய புத்தகங்களைப் படியுங்கள். தேவைப்பட்டால் மருத்துவரிடமோ உளவியல் ஆலோசகரிடமோ திருமணத்திற்க்கு முந்தைய கவுன்சிலிங் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கலாம்.
- முதலிரவு தினத்தன்று மாதவிடாய் வராமலிருக்க மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். நீங்களாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம்.
- அன்றைய தினம் அதிகம் சாப்பிட வேண்டாம். அதிக மணமும், மசாலாவும் சேர்க்கப்பட்ட உணவுகளையும் தவிர்த்து விடவும்.
- முடிந்தால் இன்னொரு முறை குளியுங்கள். குளிக்க நேரமில்லா விட்டாலும், பழைய மேக்கப்பை அகற்றி விட்டு, புதிதாக அதே சமயம் ரொம்பவும் மிதமாக மேக்கப் போட்டுக் கொள்ளுங்கள்.
- உடலை உறுத்தாத உடையை அணிந்து கொள்ளுங்கள்.
- நகைகள் குறைவாகவே இருக் கட்டும். கூரிய முனைகளைக் கொண்டதும், கனமானதுமான நகைகள் வேண்டாம்.
- காதுகளுக்குப் பின்புறம், மணிக்கட்டு போன்ற இடங்களில் மிதமான சென்ட் தடவிக் கொள்ளுங்கள்.
- உடல் முழுவதும் மாயிச்சரைசிங் லோஷன் தடவிக் கொள்ளுங்கள்.
- கனமான, ஆடம்பரமான கூந்தல் அலங்காரத்தைத் தவிர்க்கவும்.
- படுக்கை விரிப்பை இரு முறை சரி பார்க்கவும். அலங்காரம் செய்யப்பட்ட பூக்களிலிருந்து முட்களோ, பூச்சிகளோ உதிர்ந்திருக்க வாய்ப்புண்டு.
- முதல் ஸ்பரிசம் என்பது படபடப்பாகத்தான் இருக்கும். உங்கள் கணவரது செய்கைகள் உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினால் அதை அவரிடம்தெரிவியுங்கள்.
- முதலிரவன்றே உறவில் ஈடுபட்டுத் தானாக வேண்டும் என்றுஅவசியமில்லை. நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் எனில், முதலில் உங்கள் விருப்பு, வெறுப்புகளைப் பற்றிப் பேச அந்த இரவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
- அடுத்தவர்களது அனாவசிய அனுபவங்களையும், அறிவுரைகளையும் கேட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். ஒவ்வொருவரது அனுபவம் ஒவ்வொருமாதிரியாக இருக்கும்.
- உணர்ச்சி வேகத்தில் உடனடியாக உறவில் ஈடுபடாமல் சிறிது நேரத்தை முன் விளையாட்டுகளில் செலவழியுங்கள்.
- முதல் முறை உறவில் ஈடுபடும் பெண்களுக்கு வலி இருக்க லாம். அதைப் பற்றியே நினைப்பது வலியை இன்னும் அதிகமாக்கத்தான் செய்யும்.
- பெண்ணுறுப்பில் வலியையும், வறட்சியையும் ஏற்ப்பட்டால் அதைக்குறைக்க குறைக்க பெட்ரோலியம் ஜெல்லி அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.
- உங்களுக்குள் உங்கள் முதலிரவு பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். உங்களது அனுபவம் அதை மிஞ்சவும் செய்யலாம். ஏமாற்றமாகவும் அமையலாம். போகப் போக அது சரியாகி விடும்.
- பெரும்பாலும் முதலிரவு திருமணம் ஆன அன்றே நடத்தப்பட்டு விடுகிறது. உங்களுக்கு அதில் இஷ்டம் இல்லையென்றால், தாராளமாக – பக்குவமாக அதை உங்கள் கணவரிடம் எடுத்துக்கூறுங்கள். நிச்சயம் அவர் ஓ.கே. சொல்லிவிடுவார்.
- முதலிரவு மணமகன் வீட்டில் நடப்பதுதான் நல்லது. ஸ்டார் ஹோட்டல் என்றால் உஷாராக இருங்கள். அங்கே உங்களுக்கு தெரியாமல் கேமரா இருக்கலாம்.
உங்களின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக துவங்க வாழ்த்துகள்.
திருமணத்திற்கு முந்தைய உளவியல் ஆலோசனை பெற – For Pre Marital Counseling Pls Contact Us
==–==
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.