SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
Acne / Pimples முகப்பருக்கள் ஹோமியோபதி சிறப்பு சிகிச்சை நிலையம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா, Pimples Specialty Treatment in Homeopathy at Chennai, Tamilnadu, India
May 1st, 2014 by Dr.Senthil Kumar

 

Pimples Acne Homeopathy Specialty treatment Dr.Senthil Kumar, Vivekanantha homeopathy clinic, Velachery, Chennai, Panruti, pondichery, Cuddalore முகப்பரு (Acne / Pimples) முகப்பரு எதனால் உண்டாகிறது? தோலில் ஒவ்வொரு முடி வேர்காலிலும் (Hair Follicle) உள்ள செபம் (Sebum) எனப்படும் எண்ணை தண்மையுள்ள பொருளைச் சுரக்கும் சுரப்பியால் தோலானது ஈரத்தன்மையை பெறுகிறது. இந்த சுரப்பியில் அடைப்போ, நோய்த்தொற்றோ ஏற்படும்போது முகப்பரு உண்டாகிறது. முகப்பரு வகைகள் வெண் பருக்கள்(White Heads) • ஆண் பெண் இருவரும் பருவமடையும் வயதை எட்டும்போதும் பருவமடைந்த பின்னும் செபம் எண்ணை உற்பத்தி அதிகரித்து முடி வேர்க்கால்கள் மற்றும் தோலில் உள்ள நுண்துளைகள், செபத்தால் நிரப்பப்படும். இதன் விளைவாக பரு (White Head) ஏற்படுகிறது. கரும் பருக்கள்(Black Heads) • செபத்தால் அடைக்கப்பட்ட முடி வேர்க்கால் மற்றும் நுண்துளைகள் திறந்ததும் Black Head' ஆகக் காணப்படும். முடி வேர்க்கால்களிலுள்ள பேக்டீரியாக்கள் செபத்துடன் கலந்து நோய் தொற்றை ஏற்படுத்துவதன் விளைவாக, சிவப்பான, வலியுடன் கூடிய முகப்பருக்கள் ஏற்படுகின்றன. சில சமயங்களில் சீழ் உண்டாகி, நோட்ஸ் (Nodes), சிஸ்ட்ஸ் (Cysts) எனப்படும், பெரும் வலியுடன் கூடிய வீக்கங்களாக மாறும். இதன் விளைவாக குழிகளோடு அல்லது தழும்பு போன்ற வடுக்கள் உண்டாகும். பருக்கள் தோன்றும் இடங்கள் பருக்கள் ஒன்றாகவோ அல்லது திட்டுத்திட்டாகவோ ஏற்படலாம். அவை அதிகமாக வரும் இடங்கள். • முகம் • கழுத்து • நெஞ்சு • முதுகு • தோல்பட்டைகள் யாருக்கு முகப்பருக்கள் அதிகம் வரும்? • முகப் பருக்கள் 13-19 (Teen Age) வயதுக்கு உட்பட்ட வாலிப வயதினரைப் பாதிக்கும். 12-18 வயதுக்குட்பட்ட வாலிப வயதினர்களில் 85%, ஏதோ ஒரு வித வகையில் முகப்பருக்களால் பாதிக்கப்படுகின்றனர். • முகப்பருக்கள் 20, 30 வயதுகளில்கூட தோன்றத் தொடங்கலாம். 10% முதல் 20% பெரியவர்கள் கூட இதனால் பாதிக்கப்படுகின்றனர். • பருக்கள் இளம்பெண்கள் மற்றும் ஆண்களிடம் அதிகமாக காணப்படும், காரணம் செக்ஸ் ஹார்மோன்கள் சீபத்தை அதிக அளவு சுரக்கச் செய்யும். பருக்கள் ஏற்படக்காரணங்கள் • குடும்பத்தில் யாருக்காவது பரு இருத்தல் • ஹார்மோன் மாறுபாடு- பூப்படையும் காலத்தை எட்டும்போது அதிக அளவு வரும். • மன உளைச்சல் • சில மருந்துகளை தொடர்ந்து உட்கொள்வதால் (லித்தியம்(lithium) பார்புட்ரேட்ஸ்(barbiturates) அண்ரோஜன்ஸ்(androgens) அயோடீன்(Iodines)) முகப்பருவை மேலும் மோசமாக்கும் காரணக் கூறுகள் • பிசுபிசுப்பு தண்மையுள்ள அழகு சாதனங்கள், • பிசுபிசுப்பு தண்மையுள்ள கூந்தல் எண்ணை, ஜெல்வகைகள் முகப் பருக்களை மேலும் மோசமாக்கும். எனவே தண்ணீரில் கரையக்கூடிய, எண்ணை இல்லாத அழகு சாதனங்களையே பயன்படுத்துங்கள். • சாக்லெட்டுக்கள், எண்ணெய் பயன்படுத்தி செய்யப்படும் உணவுப்பொருட்கள் முகப்பருக்களை அதிகரிக்கச் செய்யும் என்பதற்கான அறிவியல் பூர்வ சான்றுகள் ஏதுமில்லை. இருந்தாலும் எண்ணை உணவுவகைகள் அதிகம் உட்கொள்வது நல்லதல்ல, முகப்பருக்களுக்கான மருத்துவம் மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவம் பெற்றால் முகப்பருக்களின் வடுக்கள் ஏற்படாவண்ணம் தடுத்து, உங்கள் தோற்றத்தை மேம்படுத்திக்கொள்ளலாம். ஆரம்பநிலையில் உள்ள முகப்பருக்கள், வழக்கமாக, தோலின்மேல் பூசும் கிரீம், லோஷன், ஜெல்களினாலே குறைந்துவிடும். இந்தத் தயாரிப்புகள் தோலைச் செம்மை நிறமாகவும், ஈரப் பசையற்றதாகவும், மென்மையாக்கும். ஆனால் இந்தப் பலன்கள் தற்காலிகமானவை. மிகவும் தீவிர நிலையிலுள்ள முகப்பருக்களைப் போக்க, ஆண்ட்டி பயாடிக்குகள் உதவும். இவற்றைக் குறைந்தது 4-6 மாதங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும். தொடர்ந்து ஆண்ட்டி பயாடிக் பயன்படுத்துவது பின்விளைவுகளையும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். எல்லாவித மருத்துவங்களும் சிறிது விளைவுகளைக் காட்ட குறைந்தது 4-6 வாரங்கள் பிடிக்கும். எனவே மருந்துகளை இடையிலேயே மனமுடைந்து நிறுத்தி விடாமல் தொடருங்கள். வெண்பருக்களும் கரும் பருக்களும் காலப்போக்கில் சரியாகிவிடும். எனினும் அவற்றை தொடர்ந்து தொடுவதலோ, சொறிந்தலோ அல்லது கிள்ளுவதாலோ பருக்கள் வீக்கமடைந்து, ஒரு நிரந்தர வடுவை விட்டு விடும். தொடர்ச்சியாக முகம் கழுவுவதால் நுன்துளைகள் அடைந்து விடும். முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு தடவைக்கு மேல் சோப் உபயோகித்து கழுவக்கூடாது. கழுவும் போது மெதுவாக வெறும் கைகளால் கழுவ வேண்டும். அழுக்கு, தூசு படிதல் அல்லது முகம் கழுவாமல் இருத்தல் போன்றவை பருக்களை அதிகரிக்கும். மன உளைச்சல் பருக்களை அதிகரிக்கும். மன உளைச்சல் ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தி பருக்கள் உருவாவதை அதிகரிக்கும்.எனவே மன உளைச்சளை தவிர்த்தல் நல்லது. அப்படியும் பருக்கள் குறையவில்லை என்றால் தயங்காது தாமதிக்காது ஹோமியோபதி மருத்துவரை கலந்தாலோசித்து தகுந்த சிகிச்சையும் ஆலோசனையும் பெற்றால் நல்ல பலனை பெறலாம். முகப்பருக்கான ஹோமியோபதி மருத்துவம். நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள் பாதுகாப்பாக பக்கவிளைவுகள் இல்லாமல் முகப்பருக்களிலிருந்து நல்ல பலனை தரும். முகப்பரு சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும் சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற முகப்பரு பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள் சென்னை:- 9786901830 பண்ருட்டி:- 9443054168 புதுச்சேரி:- 9865212055 (Camp) மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும். முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – குழந்தையின்மை – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 

முகப்பரு (Acne / Pimples)

 

முகப்பரு எதனால் உண்டாகிறது?

தோலில் ஒவ்வொரு முடி வேர்காலிலும் (Hair Follicle) உள்ள செபம் (Sebum) எனப்படும் எண்ணை தண்மையுள்ள பொருளைச் சுரக்கும் சுரப்பியால் தோலானது ஈரத்தன்மையை பெறுகிறது. இந்த சுரப்பியில் அடைப்போ, நோய்த்தொற்றோ ஏற்படும்போது முகப்பரு உண்டாகிறது.

 

முகப்பரு வகைகள்

வெண் பருக்கள்(White Heads)

  • ஆண் பெண் இருவரும் பருவமடையும் வயதை எட்டும்போதும் பருவமடைந்த பின்னும் செபம் எண்ணை உற்பத்தி அதிகரித்து முடி வேர்க்கால்கள் மற்றும் தோலில் உள்ள நுண்துளைகள், செபத்தால் நிரப்பப்படும். இதன் விளைவாக பரு (White Head) ஏற்படுகிறது.

 

கரும் பருக்கள்(Black Heads)

  • செபத்தால் அடைக்கப்பட்ட முடி வேர்க்கால் மற்றும் நுண்துளைகள் திறந்ததும் Black Head’ ஆகக் காணப்படும்.

 

முடி வேர்க்கால்களிலுள்ள பேக்டீரியாக்கள் செபத்துடன் கலந்து நோய் தொற்றை ஏற்படுத்துவதன் விளைவாக, சிவப்பான, வலியுடன் கூடிய முகப்பருக்கள் ஏற்படுகின்றன.

 

சில சமயங்களில் சீழ் உண்டாகி, நோட்ஸ் (Nodes), சிஸ்ட்ஸ் (Cysts) எனப்படும், பெரும் வலியுடன் கூடிய வீக்கங்களாக மாறும்.

 

இதன் விளைவாக குழிகளோடு அல்லது தழும்பு போன்ற வடுக்கள் உண்டாகும்.

 

பருக்கள் தோன்றும் இடங்கள்

பருக்கள் ஒன்றாகவோ அல்லது திட்டுத்திட்டாகவோ ஏற்படலாம்.

அவை அதிகமாக வரும் இடங்கள்.

  • முகம்
  • கழுத்து
  • நெஞ்சு
  • முதுகு
  • தோல்பட்டைகள்

 

யாருக்கு முகப்பருக்கள் அதிகம் வரும்?

  • முகப் பருக்கள் 13-19 (Teen Age) வயதுக்கு உட்பட்ட வாலிப வயதினரைப் பாதிக்கும். 12-18 வயதுக்குட்பட்ட வாலிப வயதினர்களில் 85%, ஏதோ ஒரு வித வகையில் முகப்பருக்களால் பாதிக்கப்படுகின்றனர்.
  • முகப்பருக்கள் 20, 30 வயதுகளில்கூட தோன்றத் தொடங்கலாம். 10% முதல் 20% பெரியவர்கள் கூட இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
  • பருக்கள் இளம்பெண்கள் மற்றும் ஆண்களிடம் அதிகமாக காணப்படும், காரணம் செக்ஸ் ஹார்மோன்கள் சீபத்தை அதிக அளவு சுரக்கச் செய்யும்.

 

பருக்கள் ஏற்படக்காரணங்கள்

  • குடும்பத்தில் யாருக்காவது பரு இருத்தல்
  • ஹார்மோன் மாறுபாடு- பூப்படையும் காலத்தை எட்டும்போது அதிக அளவு வரும்.
  • மன உளைச்சல்
  • சில மருந்துகளை தொடர்ந்து உட்கொள்வதால் (லித்தியம்(lithium) பார்புட்ரேட்ஸ்(barbiturates) அண்ரோஜன்ஸ்(androgens) அயோடீன்(Iodine))

 

முகப்பருவை மேலும் மோசமாக்கும் காரணக் கூறுகள்

  • பிசுபிசுப்பு தண்மையுள்ள அழகு சாதனங்கள்,
  • பிசுபிசுப்பு தண்மையுள்ள கூந்தல் எண்ணை, ஜெல்வகைகள் முகப் பருக்களை மேலும் மோசமாக்கும். எனவே தண்ணீரில் கரையக்கூடிய, எண்ணை இல்லாத அழகு சாதனங்களையே பயன்படுத்துங்கள்.
  • சாக்லெட்டுக்கள், எண்ணெய் பயன்படுத்தி செய்யப்படும் உணவுப்பொருட்கள் முகப்பருக்களை அதிகரிக்கச் செய்யும் என்பதற்கான அறிவியல் பூர்வ சான்றுகள் ஏதுமில்லை. இருந்தாலும் எண்ணை உணவுவகைகள் அதிகம் உட்கொள்வது நல்லதல்ல,

 

முகப்பருக்களுக்கான மருத்துவம்

மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவம் பெற்றால் முகப்பருக்களின் வடுக்கள் ஏற்படாவண்ணம் தடுத்து, உங்கள் தோற்றத்தை மேம்படுத்திக்கொள்ளலாம்.

 

ஆரம்பநிலையில் உள்ள முகப்பருக்கள், வழக்கமாக, தோலின்மேல் பூசும் கிரீம், லோஷன், ஜெல்களினாலே குறைந்துவிடும். இந்தத் தயாரிப்புகள் தோலைச் செம்மை நிறமாகவும், ஈரப் பசையற்றதாகவும், மென்மையாக்கும். ஆனால் இந்தப் பலன்கள் தற்காலிகமானவை.

 

மிகவும் தீவிர நிலையிலுள்ள முகப்பருக்களைப் போக்க, ஆண்ட்டி பயாடிக்குகள் உதவும். இவற்றைக் குறைந்தது 4-6 மாதங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும். தொடர்ந்து ஆண்ட்டி பயாடிக் பயன்படுத்துவது பின்விளைவுகளையும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.

 

எல்லாவித மருத்துவங்களும் சிறிது விளைவுகளைக் காட்ட குறைந்தது 4-6 வாரங்கள் பிடிக்கும். எனவே மருந்துகளை இடையிலேயே மனமுடைந்து நிறுத்தி விடாமல் தொடருங்கள்.

 

வெண்பருக்களும் கரும் பருக்களும் காலப்போக்கில் சரியாகிவிடும். எனினும் அவற்றை தொடர்ந்து தொடுவதலோ, சொறிந்தலோ அல்லது கிள்ளுவதாலோ  பருக்கள் வீக்கமடைந்து, ஒரு நிரந்தர வடுவை விட்டு விடும்.

 

தொடர்ச்சியாக முகம் கழுவுவதால் நுன்துளைகள் அடைந்து விடும். முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு தடவைக்கு மேல் சோப் உபயோகித்து கழுவக்கூடாது. கழுவும் போது மெதுவாக வெறும் கைகளால் கழுவ வேண்டும்.

 

அழுக்கு, தூசு படிதல் அல்லது முகம் கழுவாமல் இருத்தல் போன்றவை பருக்களை அதிகரிக்கும்.

 

மன உளைச்சல் பருக்களை அதிகரிக்கும். மன உளைச்சல் ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தி பருக்கள் உருவாவதை அதிகரிக்கும்.எனவே மன உளைச்சளை தவிர்த்தல் நல்லது.

 

அப்படியும் பருக்கள் குறையவில்லை என்றால் தயங்காது தாமதிக்காது ஹோமியோபதி மருத்துவரை கலந்தாலோசித்து தகுந்த சிகிச்சையும் ஆலோசனையும் பெற்றால் நல்ல பலனை பெறலாம்.

 

முகப்பருக்கான ஹோமியோபதி மருத்துவம்.

நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள் பாதுகாப்பாக பக்கவிளைவுகள் இல்லாமல் முகப்பருக்களிலிருந்து நல்ல பலனை தரும்.

  

முகப்பரு சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்

சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற முகப்பரு பிரச்சினைகளுக்கு அலோசனை &  சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

பண்ருட்டி:- 9443054168

புதுச்சேரி:- 9865212055 (Camp)

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

 

முன்பதிவிற்கு:உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 28 – 99******00 – Mugapparu முகப்பருக்கள் – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 

 

 

Get Appointment

==–==

Feel Free to Contact us 
* indicates required field

Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India