ஆஸ்துமா
ஆஸ்துமா என்றால் என்ன ?
- ஆஸ்துமா என்பது சுவாசக்குழாய்களை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நோய்.
- ஈழை நோய் அல்லது ஈளை அல்லது மூச்சுத்தடை நோய் (Asthma, ஆஸ்துமா) என்பது நுரையீரலில் ஏற்படும் நீடித்த/நாட்பட்ட (Chronic) அழற்சியினால் மீண்டும் மீண்டும் வரக்கூடிய (Recurrent) மூச்சு எடுத்தலில்/விடுதலில் சிரமத்தைக் கொடுக்கும்
- மூச்சுத்திணறல்/மூச்சிரைப்பு நிலை ஆகும். இதற்கு முக்கியக் காரணம் சுவாசக் குழாய்களின் உட்படலத்தில் ஏற்படும் வீக்கத்தால் காற்று உட்சென்று வெளியேறும் பாதை குறுகி காற்றின் ஓட்டத்தில் ஏற்படும் தடையாகும்.
இந்த ஈழை நோயானது தொய்வு, இழுப்பு, முட்டு, சுவாச முட்டு, இழைப்பு நோய், மூச்சுத் தடை நோய், மூச்சுப் பிடிப்பு நோய் என பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது
ஆஸ்துமா எப்படி ஏற்படுகிறது?
ஆஸ்துமா உள்ள நபர்களுக்கு, சுவாசக்குழாய்களின் உட்சுவர் வீங்கியிருக்கும். இந்த வீக்கமானது சுவாசக்குழாயில் அலர்ஜி எனப்படும் ஓவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ அல்லது மூச்சுக் குழாய்களில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ (உம். புகை, தூசி) செல்லும்போது சுவாசக்குழாய்கள் இப்படிப்பட்ட பொருட்களுக்கு எதிராக செயல்படும். இப்படி சுவாசக்குாழய்கள் எதிரிடையாக செயல்படும் போது சுவாசக் குழாய்களின் உள் சுற்றளவு குறைந்து, சாதாரண அளவைவிட மிக குறைந்தளவு காற்றே நுரையீரலின் காற்றுப் பரிமாணம் நடக்கும் இடத்திற்கு செல்கிறது. இதனால், மிகுந்த சிரமத்துடன் மூச்சு விடும் நிலைமை விசில் சத்தத்துடன், இருமல், மார்பு பகுதி இறுக்கமடைதல் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவற்றை உண்டாக்குகிறது. இவை அனைத்தும் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் காணப்படும்.
ஆஸ்துமாவை குணப்படுத்த முடியுமா?
ஆஸ்துமா நோயை பூரணமாக குணப்படுத்த முடியாது. ஆனால் ஆஸ்துமா நோய்கண்ட நிறைய பேர் சரியான முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வதால் இந்த நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். ஒருசில நேரங்களில் நோயின் தாக்கம் இருப்பினும், அவர்களும் மற்றவர்களை போல சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ்கின்றனர். எனவே ஒருவர் ஆஸ்துமா வியாதியினால் பாதிக்கப்பட்டால், அவர் மருத்துவரை சந்தித்து, முறைப்படி மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும். எதனால் ஆஸ்துமா வருகிறது, அதனை எப்படி தவிர்க்கலாம் என்பதனையும், அறிந்து கொள்ள வேண்டும்.
ஆஸ்துமா வருவதற்கான சில பொதுவான காரணங்களில் அலர்ஜென்ஸ் எனப்படும் ஒவ்வாமை பொருட்கள் எரிச்சலூட்டும் பொருட்கள் மற்றும் வைரஸ் நோய் தொற்று போன்றவையும் அடங்கும்.
சிலருக்கு உடற்பயிற்சி செய்யும் போதும் அல்லது வைரஸ் கிருமிகளால் தாக்கப்படும் போதும் மட்டும், ஆஸ்துமா வியாதி காணப்படுகிறது.
பொதுவான அலர்ஜென்ஸ் – Allergens – ஒவ்வா பொருட்கள்,
¬ மிருகங்களின் உடலின் மேல் உள்ள தோலில், முடியில் மற்றும் இறகுகளிலிருந்து வரும் கழிவுகள் – Animal dander
¬ தூசி மற்றும் தூசியில் உள்ள சிறு பூச்சி (வீடுகளில் தூசியில் காணப்படுபவை – House mite )
¬ கரப்பான்பூச்சி – Cockroach
¬ மரங்கள் மற்றும் புல்களிலிந்து வரும் மகரந்தத்தூள் – Pollens
¬ உள்ளும் வெளியிலும் பயன்படுத்தப்படும் மேல் பூசு பொருட்கள் – பெயின்ட், டிஸ்டம்பர் போன்றவை – Paint, Petroleum products
¬ சிகரட் புகை – Cigarette Smoke
¬ காற்றில் காணப்படும் மாசுப்பொருட்கள் – Polluted Air
¬ குளிர்ந்த காற்று அல்லது சீதோஷணநிலை மாற்றம் – Chill or Climate changes
¬ வண்ணப்பூச்சுப் பொருள் மற்றும் சமைக்கும் பொழுது வரும் வாசனை –and Colored foods, and Food Smells while Cooking
¬ நறுமண மூட்டப்பட்ட பொருட்கள் Perfumes & Sprays
¬ கடுமையான மன உணர்வுகளை வெளிப்படுத்துதல், அழுதல் அல்லது சிரித்தல், Over excitement, Laughing, Weeping, Depression, and Stress,
¬ ஆஸ்பரின் மற்றும் பீட்டா பிளாக்கர்ஸ் எனப்படும் மருந்துகள் – Aspirins and Beta Blockers
¬ உணவில் உலர்ந்த பழவகைகளில் சல்பைட்ஸ் போன்ற பொருட்கள் அல்லது மதுபான வகைகள், திராட்சை மது Sulfides, Alcohol,
¬ வயிறு மற்றும் உணவுக்குழாய் பாதிப்பினால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஆஸ்த்துமாவின் அறிகுறிகளை, பாதிப்புகளை அதிகப்படுத்தி, மோசமான நிலைமைக்கு கொண்டு செல்லும்.- Gastritis, GERD ( Gastero Esophageal Reflexive Diseases),
¬ அலர்ஜின்ஸ் எனப்படும் ஒவ்வாப்பொருள் மற்றும் எரிச்சலூட்டும் பொருட்கள் எவையெனில் இராசாயனப் பொருட்கள் மற்றும் தூசிப் பொருட்கள். Allergens, Chemicals, Dusts,
¬ நோய்தொற்றுதல் – Bacterial or Viral Infection,
¬ குடும்ப பின்னணி Hereditary,
¬ குழந்தைகள் புகையிலையிலிருந்து வருகின்ற புகையினை சுவாசிக்க நேரிடும் போது, ஆஸ்துமா வருகிறது. ஒரு கர்ப்பிணிப் பெண், புகையிலையிலிருந்து வரும் புகையினை சுவாசிக்க நேரிடும் போது வயிற்றில் வளரும் குழந்தைக்கு எளிதில் ஆஸ்துமா வருகிறது. Passive smoking children, and Pregnant women,
¬ உடற்பருமனாகுதல், பிற சுகாதாரக் கேடுகள் ஆஸ்துமா மற்றும் வியாதியோடு தொடர்புடையவைகளாக இருக்கலாம். Obesity and other Health related issues,
ஆஸ்துமா நோயின் அடையாள அறிகுறிகள் Signs and Symptoms
- மூச்சுத்திணறல் – திடீரென பாதிப்புக்குள்ளாகுதல், அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்படுதல் – Difficulty in Breathing, Suffocation
- இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் பாதிப்பு மோசமாகுதல் – Aggravation at Early morning and night,
- குளிர்ச்சியான பகுதிக்கு செல்லும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும் போது Exercise and High attitude நிலைமை மோசமாகுதல் மற்றும் நெஞ்செரிச்சல் காணப்படும். பின்னர் தானகவே மறைந்துவிடும்
- இருமல் அல்லது சளியுடன் கூடிய இருமல் Cough with Sputum
- மூச்சு இறைப்பினால் நிலைமை மோசமாகுதல் குறிப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது அல்லது மற்றபிற சாதாரண வேலைகளை செய்யும் போது. Physical excitement
மருத்துவம்
நவீன மருந்துகளில் ஸ்டீராய்ட் எனப்படும் ஊக்கி மருந்துகளை உபயோகித்து ஆஸ்த்துமா கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் இதனால் நிறைய பக்க விளைவுகளை நோயாளிகள் எதிர்கொள்கிறார்கள்
ஆஸ்த்துமா ஹோமியோபதி மருத்துவம்
ஆஸ்த்துமா நோய்க்கு நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்ளும்போது நன்கு கட்டுப்படுப்படும். மேலும் நோய் எதிர்ப்புத்தண்மையும் அதிகரிப்பதால் நோயின் தாக்கம் நன்கு குறைந்து அடிக்கடி வரும் தன்மையும் குறையும். பொதுவாக ஆஸ்த்துமாவிற்க்கு ஹோமியோபதி மருத்துவம் நல்ல பலனளிக்கும்.
ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற ஆஸ்துமா நோய்க்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு:உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 28 – 99******00 – ஆஸ்த்துமா Asthma – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==–==
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.