சைனசைட்டிஸ் Sinusitis
- சைனஸ் sinus என்பது மூக்கைச் சுற்றி உள்ள முக எலும்புகளுக்குள் இருக்கும் ஈரப்பசை நிறைந்த காற்றறைகளாகும். மூக்கு மற்றும் வாயின் உட்சுவரை மூடியுள்ள மியூகஸ் மெம்பரேன் Mucus Membrane எனப்படும் சவ்வைப் போலவே, சைனஸ்களின் உட்சுவரும் மூடப்பட்டுள்ளது.
- ஒரு நபருக்கு சளி cold, ஜலதோஷம் Running Nose மற்றும் ஒவ்வாமை Allergy ஏற்படும்போது, சைனஸ் திசுக்கள், மியூகஸ் (கோழை அல்லது சளி) திரவத்தினை அதிகளவு சுரக்கச் செய்து வீக்கமடைகிறது. சைனஸ்களிலிருந்து திரவம் வெளியேறும் வடிகுழாய்களில் அடைப்பு ஏற்படுவதால், சைனஸ் திசுக்கள் சுரக்கும் மியூகஸ் திரவம் சைனஸ்களில் சிக்கி, தங்கி விடுகிறது. இப்பகுதிகளில் பாக்டீரியாக்கள் bacteria’s, பூஞ்சை fungus, மற்றும் வைரஸ் virus, போன்ற நுண்கிருமிகள் வளருவதால், சைனுசைடிஸ் எனப்படும் மண்டையில் நீர்கோர்த்தல் ஏற்படுகிறது.
சைனசைட்டிஸ் Sinusitis Symptoms அறிகுறிகள்
- சிறுபிள்ளைகளுக்கு, சளி, ஜலதோஷம் போன்றவற்றின் அறிகுறிகளான மூக்கடைப்பு Nose Block, மூக்கு ஒழுகுதல் Running Nose, மற்றும் லேசான காய்ச்சல் Mild Fever, இருக்கும். சளி, ஜலதோஷம் ஏற்பட்ட மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பின் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்படின், இது சைனஸைடிஸ் மற்றும் பிற நோய்களான ப்ராங்கைடிஸ் Bronchitis, நிமோனியா Pneumonia சளிக்காய்ச்சல், அல்லது காதுகளில் நோய்தொற்று Ear Infection போன்றவைக்கான அறிகுறியாகும்.
- வயது வந்தவர்களுக்கு, அதிகமாக காணப்படும் சைனஸைடிஸின் அறிகுறிகள், சளியின் அறிகுறி ஏற்பட்டு ஏழு நாட்கள் ஆன பிறகும் நீங்காமல் காணப்படும் பகல் நேர வறண்ட இருமல் Dry Cough, காய்ச்சல் Fever, மோசமான மூச்சுத்திணறல் Difficulty in Breathing, பல் வலி Tooth Pain, காது வலி Ear achen, மற்றும் முகத்தின் திசிக்கள் மென்மையாக காணப்படுதல் போன்றவையாகும். கண்டறியக்கூடிய பிற அறிகுறிகள் ஆவன, வயிற்றுப் புரட்டு கோளாறு Abdominal disturbances, குமட்டல் nausea, தலைவலி head ache மற்றும் கண்களின் பின்புறம் வலி pain in eye ball போன்றவைகளாகும்.
சைனசைட்டிஸ் தடுக்க ஆலோசனைகள் – Sinusitis Prevention
- சைனுஸைடிஸ் என்பது பொதுவாக ஏற்படக்கூடியது மற்றும் சுலபமாக குணமாக்கப்படக் கூடியது. குழந்தைக்கு சளி மற்றும் அதின் அறிகுறிகள் 10 நாட்களுக்கு மேற்பட்டு இருப்பின், அல்லது சளி பிற அறிகுறிகள் ஏற்பட்ட 7 நாட்களுக்குப் பின் காய்ச்சல் ஏற்படின், குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.
- சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைனுஸைடிஸ் ஏற்படுத்தும் சூழலையும் மற்றும் பொருளையும் தவிர்க்க முயல வேண்டும்.
Sinusitis சைனசைட்டிஸ் ஹோமியோபதி சிகிச்சை
நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==–==
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.