சளி, இருமல் மற்றும் மூச்சுத்திணறல்: குழந்தைகளின் சுவாசப் பிரச்சனைகளைத் தடுப்பது எப்படி?

குழந்தை பருவத்தில் சளி மற்றும் இருமல் ஏற்படுவது மிகவும் சாதாரணமானது. ஆனால், அந்தத் தொற்று எந்த இடத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்து அதன் தீவிரம் மாறுபடும். மருத்துவ ரீதியாக இதை நாம் URTI மற்றும் LRTI என இரண்டாகப் பிரிக்கிறோம்.

குழந்தைகளின் சுவாசத் தொற்று (Children’s respiratory infection)

1. மேல் சுவாசப்பாதை தொற்று (URTI – Upper Respiratory Tract Infection)
இது மூக்கு முதல் குரல்வளை வரை உள்ள பகுதியை பாதிக்கும். பெரும்பாலும் இவை வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்றன.

சாதாரண சளி (Common Cold): தும்மல், மூக்கடைப்பு.

தொண்டை அழற்சி (Pharyngitis): தொண்டை வலி மற்றும் எச்சில் விழுங்குவதில் சிரமம்.

சைனசிடிஸ் (Sinusitis): முகத்தின் எலும்புப் பகுதிகளில் வலி மற்றும் கனத்த உணர்வு.

லாரிங்கிடிஸ் (Laryngitis): குரல் மாற்றம் அல்லது கரகரப்பான குரல்.

வீட்டு பராமரிப்பு: மிதமான சுடுநீர், ஆவி பிடித்தல் மற்றும் போதிய ஓய்வு இதற்குப் போதுமானது.

2. கீழ் சுவாசப்பாதை தொற்று (LRTI – Lower Respiratory Tract Infection)
நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களில் ஏற்படும் தொற்று இது. URTI-யை விட இது சற்றே தீவிரமானது.

நிமோனியா (Pneumonia): நுரையீரலில் நீர் கோர்த்துக் கொள்வதால் ஏற்படும் மூச்சுத் திணறல்.

பிரன்கிடிஸ் (Bronchitis): மூச்சுக்குழாய் வீக்கம் காரணமாக ஏற்படும் தொடர் இருமல்.

பிரன்கியோலிடிஸ் (Bronchiolitis): இது 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கும்.

எச்சரிக்கை அறிகுறிகள்: குழந்தைக்கு அதிக காய்ச்சல், மூச்சு விடும்போது விசில் சத்தம் (Wheezing), அல்லது நெஞ்சுப் பகுதி உள்வாங்குதல் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.


ஹோமியோபதி மற்றும் ஆலோசனையின் முக்கியத்துவம்

விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக்கில், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் வலுப்படுத்துவதன் மூலம் இத்தகைய தொற்றுகள் மீண்டும் வராமல் தடுக்கிறோம்.

மேலும், அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படும் குழந்தைகளுக்கு இருக்கும் மன அழுத்தம் அல்லது பயத்தைப் போக்க எமது Psychologist Counseling Center மூலம் தகுந்த ஆலோசனைகளையும் வழங்குகிறோம்.

URTI மற்றும் LRTI வேறுபாடுகள் (URTI vs LRTI differences)

அறிகுறிகள்URTI (மேல் பகுதி)LRTI (கீழ் பகுதி)
இருமல்லேசான இருமல்ஆழமான, சளியுடன் கூடிய இருமல்
சுவாசம்சாதாரண சுவாசம்வேகமான அல்லது சிரமமான சுவாசம்
உடல் வெப்பம்மிதமான காய்ச்சல்அதிகப்படியான காய்ச்சல்
குணமடைதல்5 – 7 நாட்கள்2 வாரங்கள் வரை ஆகலாம்

 

Scroll to Top