கருப்பை உட்சுவர் சவ்வு அழற்சி – Endometriosis
கருப்பையின் உட்சுவர் சவ்வு, சில சமயங்களில் கருப்பைக்கு வெளியேயும் வளர ஆரம்பிக்கும். இப்பிரச்சனையைத்தான் நாம் கருப்பை உட்சுவர் சவ்வு அழற்சி (Endometriosis) என்கிறோம். கருத்தரித்தலை வெகு நாட்களுக்கு செயற்கையாகத் தள்ளிப் போடும் பெண்கள், நீண்ட நாட்களுக்குப் பிறகு கருவுறும் போது இப்பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் தான் இந்நோயை பணிக்குச் செல்லும் பெண்களின் நோய் (Career Woman’s Diseases) என்று அழைக்கிறார்கள்.
கருப்பை உட்சுவர் சவ்வு ஒவ்வொரு மாதவிடாய்ச் சுழற்சியின் போதும் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் (Oestrogen) மற்றும் புரொஜஸ்டிரான் (Progesterone) ஆகிய ஹார்மோன்களின் அளவைப் பொருத்தே கருப்பைக்குள் வளருகிறது. இந்த ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும் போது, இவை நன்கு வளர்ந்துப் பருத்துப் படருகின்றன. ஹார்மோன்களின் சுரப்பு குறையும் பொழுது, இவை கட்டிக் கட்டியாகக் கழன்று மாதவிடாயுடன் சேர்ந்து வெளியேறுகின்றன.
ஆனால், கருப்பைக்கு வெளியே வளர்ந்த கருப்பை உட்சுவர்த் திசுக்கள் சரியானபடி வெளியேறப்பாதை இல்லாததால் அவை வயிற்றுக்குள்ளேயே தங்கி, ஒன்றன் மீது ஒன்றாகக் கெட்டியாக ஒட்டி வளருகின்றன. இதைத் தான் நாம் கருப்பை உட்சுவர் சவ்வு அழற்சி என்கிறோம்.
கருப்பைக்கு வெளியே வளர்ந்த உட்சுவர்த்திசுக்கள் சில சமயங்களில் சினைப்பைகளை பாதித்து, கருப்பை உட்சுவர் சவ்வுக்கட்டிகளாக மாறிவிடக்கூடும். காலப்போக்கில் இவை கறுத்துச் சிவந்த பழுப்பு நிறமாக மாறக்கூடும். இவ்வாறு மாறிய இந்தக் கட்டிகளை சாக்லெட் கட்டிகள் Chocolate Cyst என்று அழைக்கிறோம். இவை பட்டாணியைப் போன்று சிறிதாகவோ அல்லது திராட்சைப் பழத்தைப் போல பெரிதாகவோ இருக்கலாம்.
கருப்பை உட்சுவர் சவ்வு அழற்சியின் காரணமாக, மாதவிடாயின் போது வலியும், வேதனையும் அதிகமாக ஏற்படும். இதற்குக் காரணம் கருப்பை உட்சுவர் திசுக்களிலிருந்து வெளியாகும் புரோஸ்டோகிளாண்டின்ஸ் Prostoglandines என்ற ஹார்மோனாகும். இந்த ஹார்மோன் கருப்பையின் தசைகளை இறுக்குவதே வலி ஏற்பட காரணமாகிறது. கருப்பை உட்சுவர் சவ்வு அழற்சி எந்த அளவுக்கு பரவியுள்ளது என்பதைப் பொருத்து இந்த வலியும், வேதனையும் அதிகரிக்கிறது. சிலருக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பும் கூட வலி உண்டாகலாம். மேலும் உடலுறவின் போதும் கூட சிலருக்கு வலி ஏற்படும். இதை புணர்வலி Dysparunia என்பார்கள். சினைப்பைகளையும், பிறப்புப் பாதையின் மேல் புறத்தையும், சுற்றி வளைத்துள்ள கருப்பை உட்சுவர் திசுக்களின் முடிச்சுக்கள் ஆணுறுப்பு உள்ளே செலுத்தப்படும் பொழுது ஏற்படும் அசைவினால் (Sexual Intercourse) பாதிக்கப்பட்டு வலி (Dyspareunia) ஏற்படுகிறது.
இந்நோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் பலருக்கு மாதவிடாய்ச் சுழற்சியில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஒரு சிலருக்கு சீரான இடைவெளி இல்லாமல் பிறப்புப் பாதை வழியே இரத்தம் கசியும். மேலும், சிலருக்கு மாதவிடாய் ஆரம்பிக்கும் முன்னர் இரத்தம் சொட்டுச் சொட்டாக (Oligomenorrhoea) வெளியேறும்.
இந்நோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் சிலருக்கு, கருத்தரிக்க இயலாமைக்கு வேறு காரணங்களும் இருக்கக்கூடும். அதில் ஒன்று, விந்தணுவின் தரம் மோசமடைந்து இருப்பதாகும். சிலருக்கு கரு முட்டை வெளிப்படுவதில் பிரச்சனைகள் ஏற்படலாம். கருமுட்டை வெளிப்பட்டாலும், கருக்குழாயின் நார்மருவிகளால் கருமுட்டையைத் தனக்குள் கவர்ந்திழுக்கும் ஆற்றல் குறைந்திருக்கலாம் அல்லது கருக்குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம். சினைப்பையில் சாக்லெட் கட்டிகள் இருந்தாலும் கருமுட்டை வெளிப்படுவதில் தடை ஏற்படும்.
பரிசோதனைகள் (Investigations)
கருத்தரிக்க இயலாத பெண்கள் தமக்கு மாதவிடாய் ஏற்படும் பொழுது, அதிக வலியால் வேதனைப்படுவதாகக் கூறும் பொழுது அல்லது உடலுறவின் போது அதிக வலி ஏற்படுகிறது என்று கூறும் பொழுது, அவர்களுக்கு கருப்பை உட்சுவர் சவ்வு அழற்சி ஏற்பட்டுள்ளது என சந்தேகிக்கலாம். ஆனாலும், லேப்ராஸ்கோப்பி பரிசோதனை மூலம் மட்டுமே நோயை உறுதி செய்ய முடியும்.
ஹோமியோபதி மருத்துவம்
நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள் நல்ல பலனைத்தரும்.
சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில்குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில்குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில்சந் திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்பு கொள்ளவும் 9786901830, மின்அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்புகொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு:உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 28 – 99******00 – குழந்தையின்மை – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==–==
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.